காதலால் காதலுடன்..-1 தொடர்கதை

வாழ்வியல் கதைகளின் இனிமையான இணைப்பு. உணர்வுப்பூர்வமான கதைகளுடன் உங்கள் மனதை மயக்கும் ஒரு பயணம்

காதலால் காதலுடன்..-1 தொடர்கதை

யாருமற்ற அந்த சாலையில் இரண்டு ஜீவன்கள் மட்டும் நடந்து வந்து கொண்டிருந்தன.

அப்பறம் என்ன முடிவு பண்ணியிருக்க கதிர்..என மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் காவியா.

என்ன முடிவுனா..?நீ எத கேக்குற காவியா தெரிந்தும் தெரியாதது போல எதிர் கேள்வி கேட்டு வைத்தான் கதிர்.

நா எத பத்தி கேக்குறேன்னு உண்மையாவே உனக்கு புரியலையா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா.

ஏன் புரியல நல்லாவே புரியுது இனி நீ என் கிட்ட கல்யாண பேச்சை எடுத்தா அப்பறம் நா இனி உன்ன பார்க்க வரவே மாட்டேன் காவியா என்றவன் நடையின் வேகத்தை கூட்ட..இரவில் நடு ரோட்டில் நின்றிருந்த காவியாவோ சுற்று முற்றும் பார்த்தபடி கதிர் விட்டு போகாத நானேம் உன் கூடவே வாறேன் என ஓடி வந்து அவனை பிடித்து கொள்ள..மெல்ல சிரித்தவன் அவள் கரத்தோடு கரம் கோர்த்து கொண்டான்.

அவளோ அவன் தோளில் சாய்ந்து கொள்ள ஏகாந்த இரவினை இரசித்த படி இருவரும் மௌனத்தை மட்டுமே துணையாய் கொண்டு நடந்து வந்தார்கள்.

இந்த உலகத்துல எனக்கு வேற எதுவும் வேண்டா காவியா உன் கைய பிடிச்சிக்கிட்டே காலம் முழுக்க அப்படியே வாழ்ந்துருவேன்.உலகத்தோட எல்லை வரைக்கும் நீயும் நானும் மட்டும் தனியா போய்ட்டு வரனும்.யாருமே இல்லாத தனி தீவுல நம்ம காதலோட நாம ரெண்டு பேர் மட்டும் இருக்குனும்.

காதலின் கற்பனையில் சிலாகித்து அவன் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும்  அவள் இதயத்தின் பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டாள். 

அவளோடு இருக்கும் போது சகலத்தையும் மறந்து போவான் அவன்.ஊன் உறக்கம் கூட தேவை படாது ஒரு நொடி இமைக்க மூடினாலும் எங்கே காற்றாய் மாறி கரைந்து போவாளோ என்று இமைக்கவும் மறந்து அழகு பெண்ணவளை ரசித்திடுவான்.

கதிர்... வீதியில் நடந்து கொண்டிருந்த காவியா எதையோ பார்த்து பயந்து போய் நடையை நிறுத்தி விட கதிரும் நின்று விட்டான்.

என்னாச்சு காவியா ஏன் நிற்கிறே..

அங்க பாரு கதிர் அந்த நாய் என்னையே வெறிக்க வெறிக்க பார்க்குது எனக்கு பயமா இருக்கு என அவன் பின்னால் பதுங்கி கொண்டாள் காவியா.

இரு வாரேன் என்ற கதிரோ இரண்டு கற்களை பொருக்கி காவியாவை பார்த்து உறுமி கொண்டு வந்த நாயை அடித்து விரட்டினான்.

ஏன் கல்லால அடிக்கிறே.. பாவம்ல அப்பாவியாய் சொன்னவளை முறைக்கு முயன்று தோற்று போனான்.

நீ தானே அந்த நாய பார்த்து பயந்த இப்போ பாவம் சொல்றியா என அவன் கண்களை உருட்டி மிரட்ட அவளோ அசடு வழிந்தாள்.

சிரிச்சே மயக்கிடு ராட்சசி வா நேரமாச்சு..என அவளை இழுத்து கொண்டு நடந்தான் கதிர்.சில நேரங்களில் அவனை பார்க்கும் போது மகிழ்ந்து போகிறாள் பல நேரங்களில் அவனை பார்க்கும் போது துடித்து போகிறாள் இவர்கள் சேர முடியாது என்று புத்திக்கு தெரியும் மானங்கெட்ட மனதிற்கு தெரிய வில்லையே.

முன்பெல்லாம் நாள் முழுவதும் கதிரை அமர வைத்து அவன் புன்னகையை கண்டு ரசிப்பாள் காவியா இப்போதெல்லாம் ஏதோ கடமைக்கென வாழ்பவன் போல் அல்லவா திரிகின்றான் அவனின் வசீகர புன்னகை தொலைந்து போய் பல மாதங்கள் ஆகி விட்டது.

இன்னும் அவன் உடலில் உயிர் இருக்கிறதென்றால் அது காவியாவுக்காக மட்டும் தான். வேலை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லவே கடுப்பாய் இருக்கும் அவனுக்கு காவியாவை கூட்டிக்கொண்டு இப்படியே கண்காணத இடத்திற்கு ஓடிவிடலாமா என்று கூட யோசிப்பான் ஆனால் காவியா விட்டால் தானே.

ஏன் கதிர் அமைதியா வார எதாவது பேசேன் அவனை வம்பிலுத்து கொண்டு வந்தாள் காவியா.. என்னடி பேச சொல்றே வீட்டுக்கு போகவே விருப்பம் இல்ல நீ வா காவியா நாம எங்கேயாவது ஓடி போய்றலாம் என்றவன் காவியாவை பார்க்க காவியாவோ வீடு வந்திருச்சு கதிர் என அவன் வீட்டை கைக்காட்டினாள் .

அவனுக்கு எதிர் வீடு காவியாவின் வீடு.. இரண்டு வீட்டிற்கும் அருகில் ஒரு பெரிய ஆல மரம்..அதனையே ஏக்கமாக பார்த்தாள் காவியா கண்களில் வழிந்த கண்ணீரோடு...அதனை கண்ட கதிரின் உள்ளமும் வெகுவாய் காய்ப்பட்டு போக தன் சோகத்தை மறைத்த காவியா அழகாய் புன்னகைத்த படி அவன் நெற்றியில் இதழை ஒற்றி எடுத்தாள்.

வீட்டுக்குள்ள போ அம்மா காத்திட்டு இருப்பாங்க காவியா சொல்ல...இதமாய் இருந்தவன் முகம் இறுகி போனது எதுவும் கூறாமல் கேட்டை திறந்து கொண்டு விருவிருவென்று வீட்டிற்குள் சென்று விட்டான் கதிர்.

ஒரு குட் நைட் கூட சொல்லாம போறான்..போட உன் கனவுல பேய் வரும் கத்தி சொன்னவள் தன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க அவள் முகத்திலும் சோகம் அப்பி கொண்டது.

காவியாவின் தந்தை ஒரு மூலையிலும் காவியாவின் தாய் ஒரு மூலையிலும் அமர்ந்திருந்தார்கள் கவலை தோய்ந்த முகத்துடன்.

அப்பா...என அவர் அருகில் சென்று காவியா அழைக்க அவரோ அமைதியாய் இருந்தார்.தாயின் அருகில் சென்றவள் அம்மா என அழைக்க அவள் தாயோ சுவற்றை வெறித்த படி இருந்தாள்.

திடீரென்று காவியாவின் தாய் சத்தம் போட்டு வெடித்து அழுக ஆரம்பித்தாள்..

ஐயோ ஒத்த புள்ளைய பெத்து இப்படி எமனுக்கு காவு கொடுத்துட்டு நிற்கிறோமே..நா என்ன பண்ணுவேன் முள்ளு குத்துனாலே எம்பொண்ணு தாங்க மாட்டாளே எப்படியெல்லாம் துடிச்சாளோ...தாயின் கதறல் தந்தையின் மௌனம் இதயத்தை பிழிய அங்கே வைக்க பட்டிருந்த தன் படத்தை பார்த்தாள் காவியா.

பொட்டு வைத்து மாலை போடப்பட்டு படத்தின் முன்னால் தீபமும் எறிந்து கொண்டிருந்தது.

அம்மா அப்பா என்ன மன்னிசிருங்க..நா உங்கள விட்டு போயிருக்க கூடாது...என்ன மன்னிச்சிருங்க என்ற காவியாவின் கதறல் எல்லாம் காற்றுக்கு மட்டும் தான் கேட்டதே தவிர அவளின் பெற்றோருக்கு அல்ல.

காற்றோடு காற்றாய் கலந்து போனவள் காதலவன் கண்களை தவிர்த்து வேறு யாரு கண்களுக்கும் தெரிவதில்லை.அவனை தவிர மற்றவர்களால் அவளை உணர முடிவதும் இல்லை அவளும் யாரிடமும் தன்னை காட்டி கொள்ளவும் விரும்பவில்லை.

அழும் பெற்றோரை கூட அணைத்து தேற்ற முடியாத அபலை பெண்ணாகி போனவள் தாயின் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.

கதிர் என்னப்பா இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே...கதிரின் அன்னை மேகலா கேட்க..ஏன் வரவே மாட்டேன்னு நினைச்சியா இல்ல ஒரேடியா போய் சேர்ந்துருவேன்னு நினைச்சியா என்றான் கதிர் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.

ஐயோ அம்மா அந்த அர்தத்துல கேக்கலப்பா வேலை சீக்கிரமா முடிஞ்சதா அதான் சீக்கிரமா வீட்டுக்கு வந்தியானு தான் கேட்டேன்..சரிப்பா அம்மா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் போய் குளிச்சிட்டு வாபா என்று அவள் பேசிக்கொண்டு போக இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் பறந்தது கதிரிற்கு.

கோபத்தில் பற்களை நரநரவென கடித்தவன் அருகில் இருந்து கதிரை எத்து விட்டான்.மேசை மீதிருந்த பூச்சாடியை தூக்கி தரையில் அடித்தான் சுக்கல் சுக்கலாய் போனது பூச்சாடி இருந்தும் கோபம் மட்டும் குறையவில்லை முகம் பார்க்கும் கண்ணாடியையும் கரத்தில் குத்தி உடைக்க கையை கிழித்து கொண்டு இரத்தம் வந்தது.

ஐயோ கதிர் இரத்தம் வருதுபா என அவனின் தந்தை ராஜாவும் தாய் மேகலாவும் ஓடி வர..ஏய்ய்ய்....அவன் கர்ஜனையில் இருவரும் அப்படியே நின்று விட்டார்கள்.

இன்னொரு தடவை ரெண்டு பேரும் என் கூட ஒட்டி உறவாட நினைச்சிங்க நா மனுஷனா இருக்க மாட்டேன் ஜாக்கிரதை.

நீ சமைச்சத கொட்டிக்கிறதுக்கு பேசாம ஒரு பாட்டில் விஷத்தை குடிச்சிட்டு என் காவியா கிட்டேயா நானும் போய் சேர்ந்திடுவேன்.. விழிகள் சிவக்க அரக்க தனமாய் கத்தி கொண்டிருந்தவனை பார்க்க பெற்றோருக்கு குலை நடுங்கி போனது.

வீட்டுக்குள் ஒரு ருத்ர தாண்டவத்தையே ஆடி முடித்தவன் தன் அறைக்கு சென்ற சோஃபாவில் சாய்ந்து கண்மூடினான்.அழகு முகமாக அவன் காவியா வந்து போனாள்.. முதல் முதலில் அவள் வீடு மாறி இவர்கள் வீட்டின் அருகிலேயே குடிவந்தது,இவனை அண்ணா என்று அழைத்து மலங்க மலங்க விழித்தது,அவன் வேலை பார்க்கும் I't கம்பனிக்கே அவளும் வேலைக்கு சேர்ந்தது, இருவருக்குள்ளும் அழகிய நட்பு உருவாகி பின் அது காதலைய் மாறியது என அனைத்தும் காட்சிகளாய் அவன் முன் வந்து போக இதழில் மட்டும் விரக்தி புன்னகை.

கையில் இரத்தம் வழிகிறது இன்னேரம் காவியா இருந்திருந்தால் அவள் கண்ணீரை கொண்டே காயத்திற்கு மருந்திட்டிருப்பாள் மனது தன்னவள் அருகாமைக்கு ஏங்கி தவிக்க காதலியவளுக்கு புரியாமல் போகுமா காதலன் நிலை உடனே வந்து விட்டாள் அவனது அறைக்கு.

அவள் வந்ததும் சட்டென்று துளிர்த்தது புன்னகை ஆணவன் முகத்தில்.அவனிடம் எதுவும் பேசாமல் மருந்தை மட்டும் போட்டு விட்டாள் காவியா முகத்தை தூக்கி வைத்து கொண்டு.

எதுக்குடி இப்போ மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க..கோவமா இருக்கியா என்ன.

ப்ச் என் கூட பேசாத போ.. உனக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாது நானும் சொல்லி சொல்லியே அழுத்து போய்ட்டேன் ஏன்டா உனக்கு இவ்வளவு கோவம் வருது..வீட்டையே ரெண்டாக்கி வச்சிருக்க கையையும் காயமாக்கி வச்சிருக்க.

நா சொல்றத நீ மட்டும் கேக்குறியா காவியா.நானும் எத்தனை வாட்டி சொன்னே இந்த வீட்டுல இருக்க எனக்கு பிடிக்கலனு..நீ தான் கேட்க மாட்டிங்குறே பிடிவாதம் பண்ணி இந்த வீட்டுலயே இருக்க வைக்கிற அதனால தான் இப்படியெல்லாம் நடக்குது.

என்னால தான் உங்க எல்லாருக்குமே கஷ்ட்டம் அங்க என்னோட அம்மா அப்பா கூட தெனமும் அழுதுட்டே இருக்காங்க நீயும் இப்படி பண்ணிட்டு இருக்க பேசாம எனக்கு மோட்சம் குடுத்துரு கதிர் நா போய்டுறேன் என்றாள் காவியா இதழ்கள் துடிக்க.

முடியாது காவியா உன் சாவுக்கு உண்மையான காரணம் தெரியுற வரைக்கும் நா உனக்கு அத்ம சாந்தி பூஜை செய்ய மாட்டேன் உன்னோட அம்மா அப்பாவையும் செய்ய விடமாட்டேன் என்றான் கதிர் உறுதியாக.

அப்போ நா சாந்தி அடையாம பூமிலயே பேயா சுத்தனும்னு சொல்றிய் கதிர்.

அப்படியும் கூட வச்சிக்கலாம் ஆவியா இருந்தாலும் என் பக்கத்துலயே இருப்பியே என அவன் கண்ணடிக்க அவனை முறைத்த காவியாவோ..அதான் உன் ஆசையா இருடா இப்போவே மறைஞ்சு போறேன் என்றிட ஏய் பசிக்குதுடி எதாவது சாப்பாடு செஞ்சி கொடு என அப்பாவி போல அவன் முகத்தை வைத்து கொண்டு சொல்ல இனியும் எப்படி அவள் காற்றாய் மாறுவாள்.

வேகமாக கிட்சனுக்குள் சென்றவள் பாத்திரங்களை எடுத்து அடுப்பில் வைத்து சமைக்க ஆரம்பிக்க அந்த பக்கம் வந்த வேலைக்காரனோ பாத்திரங்கள் மட்டும் அந்தரத்தில் மிதப்பதை கண்டு மயங்கி விழுந்தான்.

தொடரும்...