நட்பு - கவிதை
கவிதை போட்டி இல :- 040

நட்பு
நினைத்த நாள் முதல்
நினைவிருக்கும் நாள் வரை
நினைத்துக் கொண்டிருக்கும் ஒரே உறவு நட்பு
அகராதியில் கூட அர்த்தமில்லை
நட்பு என்ற சொல்லுக்கு
இறைவன் கொடுத்த வரம் அல்ல நட்பு
அந்த இறைவனுக்கே கிடைக்காத வரம் தான் நட்பு
நட்பு என்பது நடிப்பல்ல
நாடித்துடிப்பு
நட்பிற்கு எல்லை இல்லை
எல்லை இருந்தால் அது நட்பே இல்லை
நினைத்தது எல்லாம்
நினைவில் இருக்க
இன்னும் நட்புடன் இருந்த அந்த ஒரு நொடியை
நினைத்துக் கொண்டிருக்க
ஏமாற்றத்தை கொடுப்பது நட்பல்ல
எழுமாறாக சந்தோசத்தை கொடுப்பது தான் நட்பு
தொலைப்பது நட்பல்ல
கிடைப்பதே நட்பு
கிடைத்த நட்பை தொலைத்து விடாதே.
என்றென்றும் நட்புடன்
நன்றி:- மு. மாதங்கி.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>