யார் நீ - காதல் கவிதை

கவிதை போட்டி இல :026

Apr 5, 2023 - 16:05
Apr 7, 2023 - 10:35
 0  79
யார் நீ - காதல் கவிதை

"சில நினைவுகள் உன்னை பற்றியதுதான்.
நான் துங்காமல் தவிப்பதும் உன்னால் தான்.
ஊமை....
குருடன்...
செவிடன்...
இதில் யார் என்றாளும் நீ என்பேன்.
நீ என்றாளும் உன்னை காதலிப்பபேன்.

நீ என் அருகிலிருக்கிறாய்.
நான் உன்னை அறிவேன்.
தொட முடியாத தூரம்-நீ சென்று விடாதே
பிரியாவிடை இல்லாமல் நீ சென்றாளும்-உன்னை தேடி கொண்டே இருப்பேன்-என் வாழ் நாளில்.
உன்னை உருவமாய் நான் பார்த்ததில்லை.
நேர்காணல் வேண்டாம் ...
பாடமறியா பரிச்சைக்கு என்னால் விடை கொடுக்க தெரியாது.
நீ பேசி கொண்டே இருக்காதே மெளனமாய் இரு
நீ மெளனமாய் இருக்கும்போது உன்னோடு பேச ஆசைப்படுவேன்.
உலகில் நீ எங்கு சென்றாளும்
ஒரு நாளோடு ஒரு நாள்
என் கவலை கண்ணீருக்கு அஞ்சலி மட்டும் செலுத்தி விடாதே!

நான் தூங்கும் போது உன் ஞாபகங்கள் மிச்சம் இல்லை அத்தனையயும் உன் நினைவு திறையில்...

நீ பிறக்காமல் இருந்திருந்திருந்தாள்
என் உணர்ச்சிகளில் சிறைபட யார்? இருந்திருப்பார்..........
நீ தூங்கு
நான் துங்கா மாட்டேன்
உன்னை தூங்க வைக்க --நான் வேண்டும்....."

நன்றி :- நிலா பிரான்சிஸ்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1