தாய்மை - கவிதை
கவிதை போட்டி இல :- 061

தாய்மை
இருளறையில் உருக்கொண்டு
மாதவம் கடந்து மடி தவழ்ந்து
தத்தித் தாவி நடை பயின்று
ஏடு எடுத்து கவி நயன்று
தம்பிக்கு தாயாகி
சக மாணவனுக்குத் தோழி ஆகி
பருவகால மாற்றம் எய்தி
புரியா விந்தைகளில் மூழ்கி
பல கலையும் கற்றறிந்தாள்மாயங்களில் சிகுண்டு
மதிமயங்கித் தொலையாமல்
பெற்றவர் மனம் குளிர
மாண்புடனே நடந்திடுவாள்யாரென்று அறியாதவனே
யாவும் என்று மாறிப்போக
கலக்கங்கள் ஏதும் இன்றி
கடமை வழி நடந்திடுவாள்பெற்ற மனம் பரிதவிக்க
மாற்றாரும் விலகி நிக்க
ஒற்றை ஒளி விளக்காய்
கணவன் வீட்டினிலே ஒளிர்ந்திடுவாள்அன்பிலே பண்பு கலந்து
காதலில் தனை மறந்து
அவன் நலம் காக்க தன்னலம் துறப்பாள்
அவள் பிறக்க அன்னை பெற்ற வேதனைகள்
அவள் அறியத் தவம் கிடப்பாள்..அவனோ அவளோ
தன் உயிர் என்பாள்
உயிர் கொடுக்கத் தன் உடல் சிதைப்பாள்
உருக்கொடுக்க உதிரம் இறைப்பாள்
மாதவம் புரிந்து நிறை மதி ஆவாள்..பிறப்பிக்கும் நொடிக்காய் தன் இறப்பின் எல்லையினையும் கடக்க முயல்வாள்
பெண் என்றே பிறந்து
அவள் அடையா இன்பம் அனைத்தும்
அம்மா என்று நீ அழைக்க
தாய்மை அது பரிசளிக்கும்பெண்களின் வாழ்நாள் தவம் தாய்மை..
நன்றி:-சு. கிருஷிகா
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>