கரைகாணாத்தாய்மை! - கவிதை
கவிதை போட்டி இல :- 055

கரைகாணாத்தாய்மை!
உடன்வாழும் தெய்வந்தான் தாயென்பதிங்கு
உயிர்வார்த்த உயிரல்லோ உலகிற்கேயின்று
கடன்தீர்க்க முடியாத அன்பொன்றுதானே
கரைத்திங்கு எனையூட்டும்
கரைகாணாத்தாய்மை!
விளக்காக தன்விழிகள் சுடராக்குமவளே
விடியல்கள் வரைகின்றாள் எனக்காகவென்று
அளக்காத பாசங்கள் பரிமாறித்தேற்றி
அருள்வாளே வரங்கள்தான் நான்வாழவென்று!
கருவாக்கி உயிராக்கி உடலாக்கியென்னை
கருத்தோடு கண்மூடாக் காப்பாற்றுமன்னை
வருந்தாது வசந்தங்கள் நான்காணவென்னு
வடிப்பாளே எனையின்று தானுருகிநின்று!
தன்னலங்கள் துளியேதும் துளிர்க்காததெய்வம்
தரைமீது நான்வாழ தனையுடைக்கும்பாசம்
வன்மங்கள் இல்லாத வண்ணமவள்நெஞ்சம்
வாழ்வொன்றை எனில்க்கண்ட தாய்மையுடையுள்ளம்!
நன்றி:- கவிஞர். சூரியநிலா...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
also read :-
முதல் காதல்... - கவிதை
அன்புத் தோழியே! !! கவிதை
முதலும் நீ... முடிவும் நீ - கவிதை
நினைப்பதில்லை என்று வருந்தாதே "காதல்" - கவிதை
தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......
வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....
உதயம் கண்டேன் - கவிதை
கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் - வாழ்க்கை
மாற்றங்கள் அழகானவை,
அம்மா என்கிற அழைப்பும்
இமை கண் யுத்தம்
உன்னை கண்ட நாள் முதல்
வலி வலியது
கடைசிக் காதலும்............ கரையும் நேரமும்
புதுப்பிறப்பாக்கும் காதல்!
நட்பு வரமாகுது! - கவிதை
தூரவிழிப் பார்வைக்குள்
துறவின் குரல் - கவிதை
வாழ்க்கை எமக்குக் கிடைத்த வரமே
கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்
Whats Your Reaction?






