மீண்டும் வாரா வாழ்க்கை! - கவிதை
கவிதை போட்டி இல :- 054

மீண்டும் வாரா வாழ்க்கை!
ஒருமுறை வாய்க்கும் வாழ்க்கை
ஔிமயம் ஆக்கிடு வாய்ப்பை
கருவதாய் வளரும் வாழ்வு
கனிவதாய் ஆக்கிநீ வாழு!பரிசாய் கிடைத்த வாழ்வு
பக்குவமாய் அதைநீ ஆளு
தரிசாய் ஆக்கி விடாதே
தருணம் மீண்டும் வராதே!அயலான் மீது அன்பை
அலையாய் நீயும் தந்தால்
பயனாய் உன்னில் படரும்
பசுமை வாழ்வின் கோலம்!நீதி நேர்மை அன்பு
நிலைக்க நீயும் நெம்பு
தேதி தோறும் உன்னை
தேடிச் சேரும் நன்மை!மீண்டும் வாரா வாழ்க்கை
மிடுக்காய் வாழ்ந்து தீரு
தாண்டும் நாட்கள் எல்லாம்
தரமாய் வாழ்வைப் பேணு!
நன்றி:- கவிஞர். சூரியநிலா...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>