தாய்மை - கவிதை
கவிதை போட்டி இல :- 041

"பத்து மாதமாய் சுமந்து
பக்குவமாய் கரையிறக்கி
பக்கத்தில் வைத்து பாலூட்டி
பத்திரமாய் பார்க்கும் -தாய்மை
பத்து மாதம் மட்டுமல்ல
பன்னிரு வருடமானாலும்
பாரம் என்று நினையாமல்
பத்திரமாய் வளர்த்தெடுக்கும் -தாய்மை
பகைமையாகும் உறவென்று உணராமல்
பாசத்தை அள்ளி தெளித்து
பண்புடன் வளர்த்து
பள்ளி அனுப்பி பல்கலைக்கழகமும் அனுப்பி
பட்டம் பெற செய்யும் -தாய்மை
பட்டம் பெற்ற பின்பு
பட்டத்துயானையென மாறி தூக்கியெறிந்தாலும்
பம்பரமாய் சுற்றி தன்னை காப்பான்
என்று என்னும் -தாய்மை
பணிவான தாய்மை இதுவே எனது தாய்மை"
நன்றி:- க. ரேவதி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






