கடைசிக் காதலும்............ கரையும் நேரமும்

கவிதை போட்டி இல :- 042

கடைசிக் காதலும்............ கரையும்  நேரமும்

கடைசிக் காதலும்............ கரையும்  நேரமும்

"உன் நினைவுகளின்  நிழல்களால் நிரப்பப்பட்ட

இந்த கோப்பையில் கடைசி துளி கண்ணீர்

கரையும் பொழுதுகளில்

காலாவதியாகிப் போயிருக்கும் 

இந்த காயம்  உனது விம்பத்தை                

தேக்கிவைத்துத்  தேக்கிவைத்தே

தேய்ந்து போன விழித்திரையை

கண் இமைகள் இரண்டும்

இருக்கமாய் முடி இருக்கும்                      

உள்ளத்தில் உன் பெயரை உச்சரித்து உச்சரித்தே

உத்திரத்தை பாய்ச்சிய இதயம் உறங்கி போய்

உறைந்து போயிருக்கும்        

காணும் இடமெல்லாம்   உன்பெயயரை                    

கையெழுத்தாய்   கிறுக்கிய கைகளிரண்டும்

கைக்கூப்பி கட்டப்படிருக்கும் 

நீயிருக்கும் திசை தேடி      

விரைந்தோடிய  கால்களிரண்டும்              

விசையிழந் தசையிருகி   விறைப்புடன்        

நீண்டிருக் கும்   அங்கங்கள் அத்தனையும்  

அடங்கிப்போய்  உறங்கி போய்

காலாவதியாகிப்போன காயத்தில்

காய்ந்து போன கண்ணீரோடு      

கரைந்து  போயிருக்கும்    

உன் மீதான என் கடைசிக் காதலும்"

நன்றி:- Kajanika

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1