என் உயிரே - கவிதை
கவிதை போட்டி இல :- 052

என் உயிரே
******என் உயிரே !
சோகங்களை மட்டும்
எனக்கு
சொந்தமாக்கிவிடாதேஉன் உறவின் சங்கமம்
என் வாழ்வின் வாசலில்
ஒரு விடிவெள்ளியாய்!என் சகல சந்தோஷங்களிலும்
உன் நினைவின் உரசல்
நீங்காது நிலைத்திருக்கும்நான் உறங்கியிருந்தாலும்
உன் நினைவுகளில்
விழித்திருப்பேன்சிரித்திருந்தாலும்
உன்னையே
சிந்தித்திருப்பேன்உன்னுடன் கழித்த
சந்தோஷ நிமிஷங்களை
சுகமான சுமையாய்
நெஞ்சிலே சுமந்திருப்பேன்கற்பனையில்
சிறகு விரித்து
ஒருசோடி வானம்பாடியாய்
உல்லாச வானில்
சிறகடிப்பேன்சொப்பனங்களில் கூட
உன் நிழலையே
நிஜமாய் நான்
நினைத்திருப்பேன்கற்பனை ஓராயிரம்
காதல் மனதிலே சுமந்து
காலடிச் சுவடிகளில் கூட
பத்திரப்படுத்துவேன்எனவே ஏமாற்றிவிடாதே
ஏமாற்றினால்..
கலைந்து விடும்
இவள் கனவுகள்
உன்னால்....
உன்னுடன்....
உனக்காக....அதனால்
சோகங்களை மட்டும்
எனக்குச்
சொந்தமாக்கிவிடாதேகற்பனையும் ஆக்கமும்:
நன்றி :- மயில்வாகனம் சந்ராணி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>