நிஜங்கள் தானே குடும்பம்!
கவிதை போட்டி இல :- 056

நிஜங்கள் தானே குடும்பம்!
சமூகத்தின் வேராய் நிலைத்து
சாத்திய வாழ்வதை வரையும்
குடும்பங்கள் தானே உயிராம்
குவலய நிலைப்பின் அடியாய்!கூட்டாய் தனியாய்
இணைந்து
கூடித் திரிந்து மகிழ்ந்து
நீட்டாய் வாழ்வை மலர்த்தும்
நிஜங்கள் தானே குடும்பம்!அன்பும் அறமும் ஓங்கி
அழகில் அகமும் நிறைந்து
என்பும் உரியர் பிறர்க்கு
என்றே வாழ வேண்டும்!சிந்தை நேரின் வசமாய்
சித்தம் கொண்டே எழுந்து
எந்தை தாயைக் காத்து
ஏற்றம் பெறுவீர் வாழ்வில்!மதிப்பும் ஏற்பும் மனதில்
மகுடம் அதுவாய் வைத்து
உதிக்கும் பகலோன் கதிராய்
உடனிருப்போர் நிறைய வாழ்க!வேற்றுமை தோன்றிற் கூட
வேண்டி ஒற்றமை தேடி
மாற்றம் கண்டு வாழ
மனதில் மகிழ்வே பொங்கும்!
நன்றி:- கவிஞர். சூரியநிலா...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>