சேலையோடு வாடி - கவிதை
கவிதை போட்டி இல :- 029

சேலையோடு வாடி
*******
கலந்து பேசி நாம்
குழைந்து உண்ணலாம்.
கலக்கம் வேண்டாம்
கரம் பற்றடி கண்ணே!காற்று வீசும் சோலை
சேலையோடு வாடி .
பாலை கூட சோலை
வனமாகும் நமக்காப்போ?வண்ணத்து பூச்சி வந்து
சேலையில் அமர்ந்தது.
அந்த கோலம் தந்த காட்சி
மனதோடு வாழும் வாழ்வு.குருத்தோடு இலையும்
கதை பேசி மகிழும்.
குறியோடு மகரந்தம்
கூடி கருவாகும் பாராயோ?கனியாகி விதையங்கே
தருவதாக முளை கொள்ளும்.
மண்ணில் விழுந்து ஈரமாகி.
சூடாகிய இந்த சூழலில்.சோலைக் குயிலே நீ
சோலை வந்து பேசாயோ?
சேலை கொண்டு உடல்
போர்த்தி நீ கோலம் சேராயோ?மை பூசிய கயல் விழியால்
புனலைக்கண்டு மிரண்டிடுமோ?
செவ்விதழ் பளிச்சிட வெண்பல் ஒளியிலே
கருங்குழல் கானமிசைக்குமோ?உன் கன்னம் தொட்டிட
இதழ் பட்டு மனம் புன்முறுவல் செய்திடாதோ?தொண்டை நீர் வற்ற கத்தித்தான் இசைக்கவோ? உன் அழகிய நாமத்தினை கட்டழகு கண்ணோ கட்டிக்கொள்ளத்தானே
சீக்கிரம் வாடி என் சித்திரப்பெண்ணே!
நன்றி :- ர.நிரோஷிகா
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






