காதலிலும் தாய்மை வாழும் - கவிதை
கவிதை போட்டி :- 020

காதலிலும் தாய்மை வாழும்
மாதவிடாய் தள்ளிப்போனால் ஒரு வேளை நீயாக இருக்குமோ என்று தான் முதலில் மனம் ஏங்குகிறது..... ஏமாற்றத்தை தவிர வேறெதுவும் மிச்சமில்லைஇன்னுமா விஷேசம் எதுவுமில்லை அயல் வீட்டார்கள் அரசல் புரசலாக முனுமுனுக்கத் துவங்கி விட்டார்கள்
உனக்கும் என் மகனுக்கும் தாம்பத்யம் சரியாகத்தானே நடக்கிறது... கேலியும் கிண்டலுமாக மாமியார் கேட்கிறாள்
வில்லை விட வேகமாக வந்த சொல்லால் தினம் தினம் நொருங்கிப் போனது மனம்
இதுவரை ஆண் குழந்தை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த மனம் இப்போது பெண் குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை குழந்தை ஒன்று இருந்தால் போதும் என்றளவிற்கு போய் விட்டது
குடலை பிரட்டும் அளவிற்கு குமட்டலும் வாந்தியும் சற்றே மயக்கமும் ஏற்பட மனதிற்குள் பூரித்துக் கொண்டு வைத்தியரிடம் ஓடினால் அவர் சொல்கிறார் "இது வெறும் பித்த வாந்தி" என்று
கலங்கிய கண்களுடன் கணவனை கட்டியணைத்த படி மெதுவாக அவர் முகம் பார்த்தேன் சிரித்துக்கொண்டே...... அசடு.... எதற்காக கண்கலங்குகிறாய் உனக்கு நானிருக்கிறேன்
சற்றுபொறு! நம் குழந்தை விளையாடிக் கொண்டிருப்பான் சுவர்கத்தில் தேவதைகளோடு என்ற என்னவனின் ஆறுதல் வார்த்தைகள் என்னை சற்று நிம்மதியாக்கியது
அப்போது தான் புரிந்துக் கொண்டேன் பத்து மாதம் சுமந்து வயிற்றை கிழித்து வரும் சிசுவினால் மட்டுமே பெண்ணிற்கு தாய் என்ற அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை என்று
நான் ஈன்றெடுக்காத குழந்தை என் கணவர் அவரால் என் தாய்மை முழுமையடைந்து விட்டது இனி என்ன வேண்டும் நானும் தாய்தான் இங்கு.....
சாப விமோசனம் பெற்று விட்டேன் "மலடி" எனும் சாபத்திலிருந்து என்னவனின் தூய்மையான......
அன்பினால்.
நன்றி :- நுஸ்கியா.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1