காதல் - கவிதை

கவிதை போட்டி இல :- 015

Apr 5, 2023 - 07:20
Apr 7, 2023 - 10:46
 0  155
காதல் - கவிதை


            -காதல்-


வார்த்தைகள் போவதில்லை
உன்னோடு பேச,
நேரங்கள் மீதமில்லை
உன் நாட்கள் சேர

என் நினைவுகளை தொலைத்து
உன் நினைவு தேடுகிறேன்
உந்தன் இதயத்தில்
என் நாளும் இழைப்பாறுகிறேன்

இனிப்பான பேச்சுக்குள்
கசப்பான கோபங்கள்
கதை பேசும் நேரத்தில்
கனநேர மோகங்கள்

தினம் தினம் உன்னோடு
பேசும் போது,
எண்ணங்கள் எல்லாம் அலைப்பாய்கிறது;
ஏக்கங்கள் எல்லாம்
 தடுமாறுகிறது 

நீயோ எங்கே? 
நானோ இங்கே! 
அஞ்சல் இல்லா பரிமாற்றம் 
அழைப்பேசி சேவைக்குள்
கோடி முத்தம் பொதியிட்டேன்
உனக்கென்று கூரியர் செய்ய, 

உன் முகம் காட்ட கோபங்களுக்கு
முற்றுபுள்ளி வைக்க நினைக்கிறேன் 
முத்தமாய் தரவா? 
இல்லை 
மொத்தமாய் தரவா? 

அங்கும்! 
இங்கும்!
உன் நினைவுகள் 
தூங்கும் போது கூட எனக்கு விடுதலை தரமாட்டாயா?

நன்றி :- நிலா பிரான்சிஸ்

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1