முதல் காதல்... - கவிதை
கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 006

முதல் காதல்...
"ஏதோ ஒரு உறவு உருவாகுது...
ஏனோ மனம் மிகுதியாய் அலைபாயுது...என் தேகம் புதிதாய் நிறம் மாறுது...
முகத்தில் கூட பருக்கள் நடமாடுது...காச்சல் வந்து காணாமல் போகிறது..
கண் பாச்சல் மட்டும் அவளையே தேடுகிறது...உறக்கமெல்லாம் தொலைந்தே போகிறது...
என் உலகம் சுழல ஏனோ மறுக்கிறது..பூக்கள் மீது ஆசை வருகிறது...
காதல் பாக்கள் பாட இதயம் வரிகள் கேட்கிறது...எழுத்து பிழையோடு கவிதை வருகிறது...
எல்லா கவிதையும் அவள் முன் தோற்கிறது...அவளை பார்க்கும் போது சிறகு முளைக்கிறது..
அவளை கடக்கும் போது கால்கள் பறக்கிறது....ஏதேதோ எண்ணம் நெஞ்சில் எழுகிறது ..
அதை எடுத்து சொல்ல வார்த்தை ஒளிகிறது...அவள் பயணிக்கும் பேருந்து ரதமாய் தெரிகிறது...
அவள் அமர்ந்த இருக்கை மோட்சம் பெறுகிறது...அவள் பெயரில் கடை பலகை பூரிப்பை தருகிறது...
அடிக்கடி அவள் பெயரை கைகள் கிறுக்குகிறது...விடியும் பொழுதுகள் எல்லாம்
அவள் வருகைக்காக ஏங்குது..
விடுமுறை நாட்கள் பாலைவன வெயிலாய் சுடுகிறது...மனதுக்குள் காதல் மழை கனமாய் தான் பெய்கிறது...
சமூக சிக்கல் பெரும்இடியாய் என் காதல் மீது விழுகிறது...."
நன்றி :- அ.ர.ஜெயதீபன்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க ->Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>