மனிதா நீ மனிதனாயிரு - கவிதை
கவிதை போட்டி இல :- 068

மனிதா நீ மனிதனாயிரு
உலகம் உள்ளங்கைக்குள் உருட்டி விளையாடுகிறான்
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்றன ஜீவராசிகள்
நிமிடங்களில் இடியப்பசிக்கல்கள் உருவாகின்றன எங்கோ
சிலர் மனங்கள் நெருப்பாறுகளை நீந்திக்கடக்கின்றன
சாலையோர பூக்கள் அரை வயிறு நிரப்ப கையேந்திநிற்கின்றன
மாளிகைகளும் தகரக்குடில்களும் உண்மைக்கு உயிர்கொடுக்கின்றன
பிறப்பும்இறப்பும் ஏற்றமும் வீழ்ச்சியும் வாழ்க்கைச்சக்கரத்தில் நிகழ்கின்றன
மனிதநேயம் மண்ணுக்குள் மடிந்திட அநீதி முளைத்தெழுகின்றது
கைப்பேசி மகானையும் மனிதவிலங்குகளையும் உற்பத்திசெய்கின்றது
நூலிளையில் உயிர் பிழைக்கின்றனர் சிலர்
நூல்போல் உடலமைப்பிலும் மாந்தர் மண்ணிலுளர்
மண்புழு போல் தோழனாயும் நரி போல் தந்திரக்காரணாயும்
காகம் போல் பகுத்துண்பவனும் சிங்கம் போல் வேட்டையாடுபவனும்
எம்மோடுதான் சுவடுவைத்து பயணிக்கிறார்கள்
அனுபவம் புதுமையென்றாலும் ஆண்டாண்டுகளாய்
கற்றுக்கொடுக்கிறது கல்லறை மனிதா நீ மனிதனாயிரு
நன்றி:- சோபிகரன் மேரிசீனு
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>