தாய்மை
கவிதை போட்டி இல :- 066

தாய்மை
பத்து மாதம் சுமந்து
பத்திரமாய்ப் பெற்றெடுக்கும்
பண்பான தேவதையே
பாசத்தின் பொக்கிசமே.....
மாறா அன்பையும்
மறுக்காமல் பரிமாறும்
மன்மத ஒளிவிளக்கே
நிகரில்லாக் காவியமே........
பிள்ளைகள் நிந்திப்பினும்
பிள்ளைக்காய் பரிந்துரைக்கும்
பாசமிகு மனமதுவே
பெற்ற மனம் பித்ததுவே
காலத்தின் சுமைகளை
கண்நொடியில் மறைக்கும்
தாராள மடியதுவே
தலைசாய்ந்து தூங்கும் போது
நின் பாதத்தின் கீழ்
நிலையான சுவர்க்கமதை
இனிக்கவே தந்திடும்
இதமான மனம் படைத்தவளே!
நன்றி:- மு.இ.பாத்திமா றுஷ்தா.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>