அம்மா - கவிதை
கவிதை போட்டி இல :- 059

அம்மா
ஆயிரம் ஆயிரம் வரிகளை எழுதிய
என் மொழிகள்
தாயேனும் உணர்வுக்கு என்
வரி கொடுக்கவில்லை
காகிதம் தண்ணிலே ஏறி மேய்ந்த
என் பேனாக்கள்
பூமகள் அவளுக்கு ஏன்
உயிர் கொடுக்கவில்லைஒரு முறை கோவமாய்
முறைத்து பார்த்தலே
அம்மாடி அவள் நெஞ்சு நொறுங்கி விடும்
என்னை ஒரு மனிதனாக உலகில்
உரு எடுக்க வைத்தவளுக்கு நான் என்ன கைமாறு செய்ய கூடிடும்கால்வயிறு கஞ்சி குடிச்சு
என் வயிற நிறைய வைச்சவ
தன் வயிற பட்டினி போட்டு
என் வயிற குளிர வைச்சவநான் நடக்க பாதையெல்லாம்
கல்லு முள்ளு தவத்தி வைச்சவ
கால் கடுக்க என்ன தூக்கி சுமந்து போய்
பள்ளி சேர்த்தவசின்ன வயசுல என் கண்ணீர பாத்தா
துடிதுடிச்சு போய்டுவா
இப்ப அவ கல்லறை முன்னால என் கண்ணீர பாத்தா எழுந்திடுவாளோ என்னமோ....
நன்றி:- பாஸ்கரன் அனுஜன்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>