பேருந்திலே ஒரு காதல்
கவிதை போட்டி இல :- 058

பேருந்திலே ஒரு காதல்
அன்றொரு நாள்
பேருந்திலே என் பயணம்
தித்திக்கும் காலை பொழுது
திகட்டாத சூரியனின் அலைவரிசை..அங்குமிங்கும் பார்த்தபடி
பெண் ஒருத்தி கரம் நீட்டி
மறித்தாள் பேருந்தை
திறந்தாள் என் மனக்கதவை...அதுவரை பார்த்ததில்லை
அப்படி ஒரு அழகை
அதுவரை உணர்ந்ததும் இல்லை
தாயவள் தவிர இன்னொரு பெண்ணின் நினைவை...சத்தம் இல்லாமல் என்னை
கொலை செய்த அந்த கங்கை
வெட்கம் என்னும் சேலை போர்த்தி
அமர்ந்திருந்தது என் முன்னேஇதுவரை இல்லாத சலனம்
என்னுள்ளே அவளால்
ஆயிரம் ஆயிரம் கேள்விகளால்
இதயகதவை தட்டி போனதுஅடிக்கடி செல்லும் என் பயணம்
அன்றொரு நாள் அழகானது அவளால்
துடிதுடிக்கும் என் இதயம்
பறிபோனது அவள் இரு விழியால்ஏனோ திடீர் என்று ஒரு கவலை
எனது இறக்கம் எதிரிலே
பேருந்தில் மணி அடித்து
இறங்கும் போது ஒரு ஏக்கம்
இப்படியே தொடராத இப்பயணம் என்று.......நன்றி:- பாஸ்கரன் அனுஜன்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>