தாய்மை - கவிதை
கவிதை போட்டி இல :- 013

இவள் தாய்மையே மானுடத்துள் மகத்துவம் மிக்க புனித பந்தம் என்றிடப் பெருமை கண்டேன் கவிஞனாய்.
பொருட்கலங்கியது கவி வரி பிரசிவிக்கலாம் ஆனால் கரு கலங்கிய ஜீவனாய் அவளைக் கண்டேன்.
ஆயிரமாயிரம் சொந்தங்கள் அத்தனைக்கும் உறவு முறைகள் அர்த்தம் சொல்ல தாய்மைக்கு மாத்திரமே விதிவிலக்காய் கருவரை கௌரவம் ஈ ஈ ஈன்றது....
அவள் உன்னை பாரமாக இருக்கிறாய் என்று நினைத்தால் அவள் உன்னை கருவரையிலே கலைத்திருப்பாள்..... அவளுக்கு மிகப்பெரிய மனம் உண்டோ அவள் தாங்கும் வழியை வரிசையாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அவள் முதல் தாங்கும் வலி......
ஒன்றாம் மாதம் உதிரம் சேர்ந்தது......
இரண்டாம் மாதம் இது வென்று அறிந்தது......
மூன்றாம் மாதம் முழுவதும் தெரிந்தது......
நாலாம் மாதம் நடையும் தளர்ந்தது.....ஐந்தாம் மாதம் இடுப்பும் நோக.....
ஆறாம் மாதம் இளப்பதும் நோக.....
ஏழாம் மாதம் சாம்பல் ருசிக்க.....
எட்டாம் மாதம் மாங்காய் ருசிக்க......
ஒன்பதாம் மாதம் சிலர் முன் அழுது.....
பத்தாம் மாதம் கதறி கதறி பலர் முன்பு அழுது........ஒரு தாய் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறாள்......
இத்தோடு முடிக்கிறேன்
தாய்மைக்கு என்றும் வரட்சி இல்லை............
நன்றி :- AR Ilmu Sahan
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






