இயற்கையின் அழகு.... கவிதை
கவிதை போட்டி இல :- 067

இயற்கையின் அழகு....
தன்னிலை தனை மறந்து
இரசிக்க வைக்கும் ஓவியமாய்
பஞ்ச பூதங்களை அடக்கி ஆளும்
சிம்மாசனத்தின் அழகிய ராணியாவள்சூரிய சந்திர ஒளியில்
பாதி காலம் விடியலாய்
மீதி நேரம் இருளாய்
சுற்றும் பூமிக்கு சாட்சியாவள்வார்த்தை இல்லாத வர்ணமாகி
அன்பை பொழிந்திடும் அன்னை
சினம் கொண்டால் இவள்
சீறிப் பாய்ந்து சிதைத்திடுவாள்வளமான மண்ணை காக்க
வளர்ந்து நிற்கிறாள் மரமாய்
வரட்சியின் தாகம் தீர்க்க
நீர் பொழியும் மழையாகிடுவாள்நானிலத்தில் விளையும் தானியம்
பசித்தவன் வயிற்றை ஆற்றுமே
திக்கற்று வாழ்விடம் இல்லாதவனுக்கு
தன்னையே உறைவிடம் ஆக்கிடுவாள்
உயிர் பிறப்பும் இறப்பும்
இவள் உள்ளே சங்கமமாகி
சிந்திய வியர்வை செங்குருதியை
மானுடரின் விதை நிலமாக்குவாள்நல்லெண்ண அரவணைப்பில் குழந்தையானால்
தாயுள்ளம் கொண்டு காப்பாள்
அழிக்கும் தீயயெண்ண மிருகமானால்
பாடம் புகட்டும் ஆசானாவள்பசுமை தந்த தோழி
என்றும் நல்வாழ்வு தந்திடுவாள்
ஆஹா எத்தனை உண்மை
இயற்கையின் அழகே தனித்தன்மை!!!
நன்றி:- V.Sayanthini
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>