காதலின் வலி - கவிதை
கவிதை போட்டி இல :- 030

காதலின் வலி
------------------------
"நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு...
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு...!உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது...!
நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...
விட்டு விட்டு தான் நினைக்கிறேன்...
விட்டு விட தான் நினைக்கிறேன்...
ஆனாலும் உனை விட்டு விலகுவதா எனத்தெரியவில்லை..
உனை பிரிந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை..
என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு காலப்பகுதியை கடந்து கொண்டிருக்கின்றேன் இதன் முடிவு என்னவென்று எனக்கு தெரியவில்லை ஆனால் என் அன்பு உண்மையானது சத்தியமானது"
நன்றி :- M. A. M Salman
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>