தாய்மை      - கவிதை

கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 005

தாய்மை      -  கவிதை

தாய்மை

                                       
அம்மா  என்கிற
அழைப்பும்

தாய்மை  என்கிற
தத்துவமும்

பெண்ணிற்கே
உரிய  கிரீடம்

பூக்களின் 
மறுபதிப்பாய்
பெண்ணின்
அழகு

பெண்ணால் இல்லம்
கோயிலாகிறது

அன்பு
விறுத்தியாகிறது

ஒரு  வீடு
பெண்ணிருந்தால்
மட்டுமே  வெளிச்சமென
கருதப்படுகிறது

அது  மனதிற்கும்
சேர்ந்து  வெளிச்சம்
கொடுக்கிறது

தன்னிலை 
விளக்கமளிக்கும்
அவளது
தன்னடக்கம்
என்பது 
அவளது பிறப்பால்
வந்தது

அமைதியாகவே
இருந்து

சிதறிக்கிடக்கும்
இதயங்களை
ஒவ்வொன்றாய்
எடுத்து கோர்க்கும்
சாதுரியம்  மிக்கவள்

பலவித
வலிகளிலும்
எந்தவித
இன்பங்களிலும்
சமமாய்  நுகர்ந்து
முகத்திற்கும்  தெரியாது
அகத்துடன்  போட்டு
மூடிக்கொண்டு
வாழ  பழகிக்கொண்டவள்

அவளுக்கு
மட்டுமே
தெரியும்
குடும்பத்தின்
தொடக்க
நிலையும்... எல்லையும்

எனவேதாம்
அவள்
குலவிளக்காய்
போற்றப்படுகிறாள்.!

நன்றி :- ச. தேவநாயகி

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1