புதுப்பிறப்பாக்கும் காதல்!
கவிதை போட்டி இல :- 043

புதுப்பிறப்பாக்கும் காதல்!
"நெஞ்சுக்குள் நேசவேர் இறக்கி
நெருங்கித்தான் அன்பின் அமுதூட்டி
மஞ்சத்தில் மனதைக் கொலுவேற்றி
மகுடங்கள் தான்சூட்டும் காதல்!இதழோடு இன்பச் சுரங்கூட்டி
இனிமைகள் கவிதை நயமாக்கி
பதமாகப் பருவம் பரிமாறி
பரிசாக்கும் இதயம் காதல்!உணர்வெங்கும் அழகின் நிறமூட்டி
உதயங்கள் உள்ளம் தனிலேற்றி
தணலாக தேடல் தகிப்பூட்டி
தளைத்தோங்கும் குணமே காதல்!பிளவில்லா வாழ்வின் பிடிப்பாகி
பிணைப்பொன்றே வேத நெறியாகி
அளவில்லா அன்பில் விளைந்தூறும்
அகமெங்கும் புதுப்பிறப்பாகும் காதல்!"
நன்றி:- கவிஞர். சூரியநிலா...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>