மாயப்பூத்திரள் கொண்டு மார்சாய்ந்துவிட்டேன்!. - கவிதை

கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 008

Apr 3, 2023 - 23:02
Apr 7, 2023 - 10:50
 0  252
மாயப்பூத்திரள் கொண்டு மார்சாய்ந்துவிட்டேன்!. - கவிதை

மாயப்பூத்திரள் கொண்டு மார்சாய்ந்துவிட்டேன்!....................

மாவீரன் அழகினிலே 
மாயமாய் மறைந்து விட்டேன்.
மாந்தரென்று வெட்கத்தில்
மதி தவழ்ந்து விட்டேன்.


மனனம் செய்யும் உன் நாமத்திலே 
மணம் செய்து கொண்டேன்.
மாயவனின் நேசத்தில்
மாய்ந்து உயிர் பிழைத்தேன்.

மல்லிகைப்பூக்களை கூந்தலிலே
மறைக்காமல் சூடிக் கொள்கின்றேன்.
மலர்களை  அள்ளி எடுத்து சூடிக் கொள்ள
மண்ணில் காலடிகள் பதிக்கின்றேன்.

மாலையிடும் மணவாளனை நினைக்கயிலே
மனம் ஆனந்தம் கொள்கின்றேன்.
மகாநதியாய் உன்னில் சேர
மீளா கடலலைகளாய் கரை சேருகின்றேன்.

மங்கையவள் மங்களம் வேண்டியே 
மாங்கல்யம்  கனா கண்டேன்.
மாயப்பூத்திரள் கொண்டு மார்சாய்ந்துவிட்டேன்

நன்றி :- இராஜதுரை தனுஷாலினி

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow