தொலைத்தூர காதல் - கவிதை
கவிதை போட்டி இல :- 051

தொலைத்தூர காதல்
- - - - - - - - - - - - - - - - -
தொலை தூரம் நீ இருப்பதினால்....
உன்னை தேடி வெகுதூரம்
பயணிக்கிறது என்
இதயம்...நீ என் அருகில்
இல்லை என்பதினால்
உன் அழகிய
நினைவுகள் மட்டுமே
என் வாழ்க்கை...தனிமையை நேசிக்கிறேன் உன்
நினைவுகளால்...
இரவினை அதிகம்
விரும்புகிறேன்
நீ
கனவில் வருவதால்...தொலைவில் இருக்கும் நாட்கள்
தொலைந்திடும்
நொடிகள்...
காதலின் புதுமையை
புரிந்திடவே என
உணர்ந்து
கொள்ளுகிறேன்...உன்னை காண
வேண்டும்
என்பதற்காக
தினந்தோறும்
துடிக்கிறது என்
இதயம்...
காணும் இடமெல்லாம் உன்
முகம்...
கேட்கும் திசை
எல்லாம் உனது
குரல்...
நீ என் அருகில்
இல்லாததால்
கண்ணாடியாக
நொறுங்கி
செல்கிறது என்
இதயம்...
உன் நினைவுகளால்
நெகிழ்ந்து தான்
செல்கிறேன்
தினமும்...துடியாய் துடிக்கும்
இதயத்தோடு
காத்திருப்பேன்
உனக்காக...
தூங்கா விழிகளால்
தொட்டு விட்டு
போகும் உன்
நினைவுகளுடன்...
நன்றி :- Kobishan Riththika.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>