காதல் கவிதை
கவிதை போட்டி இல :- 050

காதல்
கற்பனைக்கு எட்டாத ஓவியம் நீ
கண்ணிமைக்கும் நொடி பொழுதில் ஏனோ உன் நிறத்தை மாற்றிக் கொண்டாய்
ஓவியத்தை தீட்டு முன்பே பல்லாயிர கனவுகள் மனதில்
ஓவிய ரசனை கண்ணில் கருப்பு துணியை கட்டி விட்டதோ என்னவோ வெளியில் பார்ப்பவர்கள் உணர்ந்தது கூட துணி கட்டப்பட்ட நான் உணரவில்லை அவ்வளவு நம்பிக்கை என் ஓவியம் கடற்கரை மணலில் கட்டப்பட்ட மாளிகை கொஞ்சம் கொஞ்சமாக சிதறி காணமல் போவது போல காணாமல் போய்விட்டது ...
காதல் என்றும் ஓவியம் கரைந்து போய்விட்டது என் கண்ணீர் துளிகளிகளில் ஓவியம் நிறம் மாறி போனது ஏனோ... நிறம் மாறியே ஓவியத்தை நினைத்து என்னை மாய்த்துக்கொள்ளவா...?
இல்லை வேறு ஓவியத்தை நோக்கி பயணத்தை தொடரவா இல்லை இல்லை அதுவும்....?போய்விட்டது என்றால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது நிறம் மாறிய ஓவியத்துடன் வாழ பழகிக் கொண்டேன் நிஜத்தில் அல்ல கற்பனையில்
என்றும் அழியா காதலுடன் தனிமையில்
நன்றி :- தீபிகா தர்சினி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
also read :-
முதலும் நீ... முடிவும் நீ - கவிதை
நினைப்பதில்லை என்று வருந்தாதே "காதல்" - கவிதை
தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......
வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....
கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் - வாழ்க்கை
மாற்றங்கள் அழகானவை,
அம்மா என்கிற அழைப்பும்
கடைசிக் காதலும்............ கரையும் நேரமும்
Whats Your Reaction?






