தாயுமானவர் - கவிதை
கவிதை போட்டி இல :- 036

தாயுமானவர்
இருவரின் ஆசையில் பூத்த மலரென துளிர் விட
அறிந்த முதல் நாளே தாயின் வயிற்றில் உள்ளங்கை வைத்து
உணர்வுகள் தந்தும் பெற்றும் எத்தனை ஆனந்தம் கொண்டாரோ !!
தன் குழந்தை வளமாய் வரமாய் கைகளில் வந்து சேர மனைவியை குழந்தையாய் பார்த்து கொண்டவர்
பொறுமையே கொள்ளாத மனம்
பத்து மாதங்கள் தவம் தான் கிடந்ததுதாய் பெற்றெடுத்த முத்தை கைகளில் ஏந்த
கனத்து போகவில்லை அவருக்கு
காற்றிலே தான் மிதந்தார்ஆசை மனைவி சென்று விட்டாள் நிரந்தரமாய் உறங்க
என்ற செய்தி கேட்டு உடைந்து போனவர்என் புன்னகையில் உயிர்த்தெழுந்தார்
தாயை கொண்றவா என எனை தூக்கி எறியவில்லை
துவண்டு போகாத பாசத்தை தந்தவர்
தாய்ப்பால் தர வாய்ப்பற்று போனாலும்
போத்தலில் தந்த பாலில் தாய்ப்பாசமும் தந்தையின் உயிரும் சேர்த்தே கொடுத்தவர்தொட்டிலில் போட நினைத்தும் கண் பார்வையில்
காணாமல் போவேனோ என தோளினையே தொட்டிலாக்கி கொண்டவர்புரண்டு விழும் நாட்களில் அவரும் மனதளவில் நினைவுகளை புரட்டி கொள்பவர்
நான் தவழும் நாட்களில் அவரும் குழந்தையாய் தவழ்கிறவர் தரையில் என்னோடு
எழுந்து நிற்கும் தருணம் தடுமாறி விழுவேனோ என தாங்கி பிடித்தவர்
நடை பயிலும் நாட்களில்
அவர் தன் உயரம் மறந்தவர்அழகாய் நான் பேசும் நாட்களில்
தாய் மொழியும் மறக்கிறார்என் கொஞ்சல் மழலை மொழி கேட்டு
படிக்கும் காலங்களில் கூட அத்தனை அழகாய் பதில் சொல்லிருக்க மாட்டார்
ஆயிரம் முறை நான் கேட்கும் ஒரே கேள்விக்கு சலிக்காது பதில் சொன்னவர்நிலா சோறு ஊட்டவில்லை
நிஜத்தைதான் சோறோடு ஊட்டியவர்கரடான அவர் கைகளில் கருணையோடு எனை கட்டிதழுவ
கரைந்தே போகிறேன் அவர் பாசத்தில்தவம் ஏதும் செய்ததாக தெரியவில்லை - ஆனால்
பெறமுடியா வரம் பெற்றுவிட்டேன்தாயினதும் தந்தையினதும் இரண்டறக் கலந்த அன்பை ஒரே உருவமாய்
தாயுமானவர்..
மீண்டும் அவர் குழந்தையாகிறார்
மீண்டும் அவர் வளர்கிறார்
வாழ கிடைக்காத பெருவாழ்வு வாழ்கிறார்
புதிய உலகம் காண்பிக்கிறார்
புதிதாய் எனையும் வளர்க்கிறார் !!
ஆண்மைக்கு பொறுமையே இல்லை என்றால் அது தவறு
ஆண்மை கொள்ளும் பொறுமை
அந்த ஆண்டவனுக்கும் இல்லைஅவர் அன்பில் தோற்றுப்போகும் அகிலமும்
அவர் அன்பில் அசையாத ஆணி வேர்கள் இல்லை
என் தாயுமானவர்
என்றும் அவர் அன்பில் நான்..
கற்பனை ரசிகை
நன்றி:- சா. கிருஷாந்தி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






