குடும்பம் - கவிதை
கவிதை போட்டி இல :- 064

குடும்பம்
*****
குடும்பம் என்பது
குருவிக் கூடாய்.....
பிரிப்பது எளிதே.....
இணைப்பது கடினம்அன்பு காட்டிட
மனம்விட்டுப் பேசிட
கூடி வாழ்ந்திட
கிடைக்கும் வாழ்க்கையே
சொர்க்கம்தான்எதை இழந்தாலும்
உன்னுடன் நானிருப்பேன்
என்ற உறவே
சிறந்த வரமேஒரே வீட்டில்
ஒன்றாய் சமைத்து
பகிர்ந்துண்டு வாழ்ந்திடும்
உறவினர் கூட்டம்பிரச்சனை தோன்றிட
சோகம் கூடிட
குடும்பத்து உறவுகள்
கலந்து பேசிடஉள்ளம் குளிர்ந்திட
அமைதி நிலவிடும்
ஆனந்தம் கொண்டே
வாழ்வது நல்லதோர்
குடும்பமே.......
நன்றி:- நதீரா வசூக்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>