இன்றைய உலகில் கிரிக்கெட்

இன்றைய உலகில் கிரிக்கெட்

இன்றைய உலகில் கிரிக்கெட்

மேற்குலக நாடுகளில் பொழுதுபோக்கின் நிமித்தம் விளையாடப்பட்டு வந்த குழு நிலை விளையாட்டுகளான காற்பந்து,கிரிக்கட்,வலைப்பந்து,கரப்பந்து,எல்லே முதலான விளையாட்டுக்களுள் இன்றைய நவீன கால கட்டத்திலும் அதிக விளையாட்டு வீரர்களும் விளையாட்டு ரசிகர்களும் இன்று வரையிலும் விரும்பப் பட்டு வருகின்ற குழு நிலை விளையாட்டுக்களாக காற்பந்தாட்டம் மற்றும் கிரிக்கட் ஆகிய இரு விளையாட்டுக்களும் சர்வதேச ஆய்வுகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதற்கான பிரதான காரணம் இவ் இரு விளையாட்டுக்களும் பத்திற்கும் மேற்பட்ட வீரர்களை கொண்டதாகவும் ஒவ்வொரு வீரர்களினதும் தனித் தன்மையை அடையாளப்படுத்த கூடியதாகவும் அமையப் பெற்றுள்ளமை முதலான நடைமுறைகளினாலுமே என்றால் அது ஏற்புடையதே.

இவ்வாறு சிறப்பு பெற்ற இரு விளையாட்டுக்களுள் மேற்குலக நாட்டவர்களால் எல்லே எனும் விளையாட்டு வடிவத்திலிருந்து சற்று வேறுபட்டதாக வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒர் விளையாட்டு வடிவமே இக் கிரிக்கட் என்றழைக்கப்படுகின்ற விளையாட்டு வடிவமாகும். இவ் விளையாட்டானது ஆரம்ப கால கட்டத்தில் மேற்குலக நாட்டவரால் மாத்திரம் விளையாடப்பட்டு வந்தாலும் கூட பிற்காலத்தில் காணித்துவத்திற்கு உற்பட்டிருந்த வளர்முக நாடுகளிலும் பொழுதுபோக்குக்கான குழு நிலை விளையாட்டாக மாற்றமுற்று இன்றைய நவீன கால கட்டத்திலும் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக இக் கிரிக்கெட் விளையாட்டானது அமையப் பெறுகின்றது. மெய்வல்லுனர் விளையாட்டுகளுக்கு சமச்சீரான குழு நிலை விளையாட்டுக்ளுள் மிக பிரதான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள கிரிக்கெட் விளையாட்டின் தோற்றம் ,விளையாட்டு முறை, தற்கால நிலை முதலானவற்றை மிக தெளிவாக ஆராய்வதே இக்க கட்டமைப்புரை.

இவ்வாறு சிறப்பான அடையாளத்தை தன்னகத்தே கொண்ட கிரிக்கெட் விளையாட்டு போட்டியானது முதற் காலத்தில் பிரதானமானதொரு பொழுதுபோக்கு விளையாட்டாக விளையாடப்பட்டு வந்தாலும் இன்றைய நவீன காலத்தில் தொழில் முறை கிரிக்கெட் விளையாட்டு வரையான வளர்ச்சி போக்கை கொண்டு மிக சிறப்பாக பயணித்துள்ளது,இக் கிரிக்கட் விளையாட்டு முதற் காலத்தில் மூன்றுக்கு குறையாத வீரர்களால் விளையாட கூடியதாக அமைந்தாலும்  இன்று சர்வ தேச விதி முறைகளுக்கு உற்பட்டு சர்வதேச அளவில் மிக பிரபலமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதே. முதற் கால கட்டத்தில் மென் பந்துகளால் பிரதேச மட்டத்திற்குள் இடம் பெற்றுவந்த இக் கிரிக்கெட் விளையாட்டு இன்று கடின பந்தை அடிப்படையாக கொண்ட தொழில் முறை கிரிக்கெட் போட்டியாகவும் இடம் பெற்று வருகின்றமையானது. குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது.

நம்மில் பலர் மென்பந்து கிரிக்கெட் விளையாட்டை பொழுதுபோக்காகவும் பிரதேச ரீதியிலான போட்டிகளுக்காகவும் விளையாண்டு வருகிறோம். இவ்வாறு நாம் விளையாடும் கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்துகளை அடிப்படையாக கொண்டு வேறுபடுத்தி இரு பிரிவுகளின் அடிப்படையில் வகைப் படுத்துகின்றனர் கிரிக்கெட் வல்லுனர்கள். இவ்வாறு நாம் நம் சமூக கட்டமைப்புக்குள் விளையாடும் மென் பந்து கிரிக்கெட் விளையாட்டு பற்றியும்  சர்வதேசமட்டத்தில் இடம் பெரும் கடின பந்து விளையாட்டு போட்டிகள் பற்றியும் நோக்குவோம். 

அவ்வாறு நமது நட்பு கட்டமைப்புகளுக்குள் இடம் பெறும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு பிரதானமாக பாதுகாப்பு கருதி மென்பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு நாம் நம் நட்பு கட்டமைப்புக்குள் மென்பந்தை கொண்டு இடம் பெறும் கிரிக்கெட் விளையாட்டுக்கு நம் நமக்கும் நாம் விளையாடும் இடத்தின் தன்மைக்கும் ஏற்றாற் போல நமது சட்டத் திட்டங்களை வகுத்து கொள்வோம். என்றாலும் கூட இவை கிரிக்கெட் விளையாட்டு சட்டத்திட்டங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டே அமைகின்றன. எனினும் பிரதேச மட்டத்தில் மென்பந்தை கொண்டு இடம் பெறும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கும் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கும் இடையில் ஒரு சில மாற்றங்களே இடம் பெறுகின்றன. அவற்றுள் போட்டி மைதான பரப்பளவு தன்மையின் அடிப்படையில் விளையாட்டில் பங்கு கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை மற்றும் போட்டியில் பங்கு கொள்ளும் அணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் போட்டியில் வீசப்படும் பந்து ஓவர்களின் எண்ணிக்கை முதலானவைகள் மாத்தரமே ஆகும். 

அவ்வாறான சில மாற்றங்களுக்கான காரணம் இலகுவிலும் விரைவாகவும்  போட்டியை நடாத்தி முடிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். என்றாலும் கூட இச் சிறு மாற்றங்களுக்கு அப்பாற் பொழுதுபோக்கின் அடிப்படையில் இடம் பெறும் கிரிக்கெட் விளையாட்டானது மிக பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவே மென் பந்துகள் பயன்டுத்தப்படும் அதே நேரம் இவ் விளையாட்டில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களும் இவ் விளையாட்டை தொழிலாக அன்றி பொழுதுபோக்கு நோக்கத்தின் அடிப்படையிலேயே விளையாடுகின்றனர். ஆனால் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டானது இவற்றில் இருந்து சற்று விளகி தொழில் முறை விளையாட்டாக இதனை அறிமுகப்படுத்துகின்றது. 

இவ்வாறு தனித்து நோக்கப்படுகின்ற கடின பந்து கிரிக்கட்டில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட்டை பொழுதுபோக்காக அன்றி தொழிலாக கொண்டு விளையாடுகின்றனர். இவ்வாறு ஒரு கடினப் பந்து கிரிக்கட் வீரரானவர் தனது திறமைகளை முன்னிலைப் படுத்தி கழகம் ஒன்றுக்காகவோ அல்லது வேறொரு நிறுவணக் கட்டமைப்புக்காகவோ இதற்கு மேலாக ஒரு நாட்டையோ பிரதிநிதித்துவப் படுத்தி கிரிக்கட் விளையாடும் வீரர் போட்டியில் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற் ஒப்பந்த அடிப்படையில் விளையாடியமைக்கான ஊதியத்தை பெற்றுக் கொள்பவராக காணப்படுகின்றார். இவ்வாறு தொழில் ரீதியிலான கிரிக்கெட்டை விளையாடும் வீரரை கொண்ட அணி வெற்றி பெரும் பட்சத்தில் அவ் வெற்றிக்காக தீர்மானிக்கப்பட்ட வெற்றிப் பரிசானது அந்த கிரிக்கெட் குழுவுக்கு அன்றி அந்த குழுவின் கட்டுப்பாட்டாளரான நிறுவண கட்டமைப்புக்கோ அல்லது கழகத்திற்கோ இதற்கும் மேலாக பிரதிநிதித்துவம் செய்யும் நாட்டுக்காகவோ சொந்தமானதாக கொள்ளப்படும் அதே நேரம் அவ்வாறு கிடைக்க பெரும் பணத்திலிருந்து அந்த போட்டிக்காக அந்த வீரருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையே ஊதியமாக கிடைக்க பெறுகின்றது. எனினும் கூட அந்த நிறுவனமோ,கழகமோ அல்லது நாடோ தான் விரும்பும் பட்சத்தில் விளையாடிய வீரர் குழுவுக்காக அன்பளிப்பு தொகையாக ஒரு தொகையை வழங்கலாம் எனினும் அது கட்டாயமானதல்ல. மறு புறம் அது அவ் நிறுமணக் கட்டமைப்பின் அடிப்படையின் பின்னணியில் இடம் பெறுகின்றன.

இவ்வாறு இரு வகைபாட்டுக்குள் பயணிக்கின்ற கிரிக்கெட் விளையாட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுபாட்டு சபை தீர்மானித்து நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒழுங்கு விதி முறைகளில் கிரிக்கெட் விளையாட்டை விளையாடும் முறை பற்றி சற்று சுருக்கமாக நோக்குவோம். கிரிக்கெட் விளையாட்டுக்காக தெரிவு செய்யப்பட்ட வட்ட மைதானத்தில் மைய புள்ளியில் ஏறத்தாழ 35m நீளமான ஓடு பாதையானது அமைந்திருக்கும் அதே வேளை அவ் ஓடு பாதையின் இரு மறுங்கிலும் சுமார் ஒரு மீற்றர் அளவிலான மூன்று விக்கட்டுக்களையும் இரு ஸ்டம்ப் கட்டைகளையும் கொண்ட தொகுதி நாட்டப்பட்டு இருக்கும் மைதான கட்டமைப்பு கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இவ் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் குறிப்பாக பதிமூன்றுக்கு குறையாத இரு அணிகள் விளையாடும் அதே வேலை அணி ஒன்றிற்காக கழத்தில் பதினொரு வீரர்கள் களம் காணும் அதே வேலை இவ் எஞ்சிய இரு வீரர்கள் உதிரியாக காணப்படுவதோடு விளையாடும் வீரர் ஒருவர் போட்டி இடையில் உபாதை அடைவாரானால் உதிரி வீரர் போட்டியில் அவ் வீரர் சார்பாக தொடர்ந்து விளையாட முடியும். 

இவ்வாறு இரு அணிகள் பங்கு கொள்கின்ற கிரிக்கெட் போட்டியின் முதலில் இரு அணியின் தலைவர்களும் அழைக்கப்பட்டு நாணய சுழற்சி இடம்பெற்று அதன் படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி தலைவர் களத்தடுப்பா, துடுப்பாட்டமா என்பதை தெரிவு செய்ய போட்டி ஆரம்பமாகும் அதே வேளை துடுப்பாட்டத்தில் ஈடுபடும் அணியில் இருந்து இரு துடுப்பாட்ட வீரர்கள் ஓடு பாதையின் இருமருங்கிலும் தங்களது கட்டமைப்பு பகுதிகளுக்குள் நிலை பெற்ற உடன் போட்டி ஆரம்பமாகும்.அதே நேரம் துடுப்பாட்டம் மூலம் ஒரு வீரர் பந்தை மைதானத்திற்குள் அடித்தாடி ஒடு பாதையில் மாற்று வீரரது இடத்தை இருவரும் அடைந்து கொள்வதன் மூலம் ஒரு புள்ளியை பெற்று கொள்ள முடிகின்ற அதே தருணம் பந்து வீச்சை அடித்தாடி ஒரு வீரர் ஒடுபாதை வழியாக பெற்று கொள்ளும் அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையாக நான்கு ஒட்டம் நிர்ணையிக்கப்படுகின்றது. இவற்றுக்கு மேலாக ஒரு துடுப்பாட்ட வீரரால் அடித்தாடப்பட்டு பந்தானது மைதானத்தை தொட்டு எல்லை கோட்டை கடக்குமாயின் நேரடியாக நான்கு ஓட்டங்களையும் அடித்தாடப்படும் பந்தானது பறந்த நிலையில் நேரடியாக எல்லைக் கோட்டை கடக்குமாயின் நேரடியாக ஆறு ஒட்டங்களையும் பெற்றுக் கொள்ளப்படும். இவற்றுக்கு மேலாக பந்து வீச்சாளரால் வீசப்படும் பந்தானது அகலப்பந்தாக அமையும் போதும் முறைக்கேடான பந்தாக அமையும் போதும் மேலதிகமாக ஒரு ஒட்டம் வழங்கப்படும் அதே நேரம் அதற்கு மாற்றீடாக மேலும் ஒரு பந்து வீச்சி வழங்கப்படும். இவ்வாறு வீசப்படும் பந்துகளுக்குள் பெறப்படுகின்ற மொத்த ஓட்ட எண்ணிக்கையே போட்டியின் வெற்றி இழக்காக தீர்மானிக்கப்படும்.

மறுபுறம் களத்தடுப்பு அணியினருக்கு வழங்கப்பட்ட பந்து ஓவரில் குறைந்தபட்ச ஓட்டங்களை வழங்குவதும் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்க செய்வதுமே பணியாகின்றது. இதற்காக ஒரு பந்து வீச்சாளரால் ஆறு பந்துகள் வீச முடியும் எனினும் வீசப்படும் பந்து முறைகேடாகவோ, அகலப்பந்தாகவோ அமையும் போது உதிரியாக ஒரு பந்து அதிகமாக வீச வேண்டி இருக்கும்.

இவ்வாறு பந்து வீசப்படும் போது குறித்த துடுப்பாட்ட வீரரை கடந்து விக்கெட்டுகளை தாக்குமானால் அவ்வீரர் ஆட்டமிழந்து வெளியேறுவார். அதே போல துடுப்பாட்ட வீரரால் அடித்தாடப்படும் பந்தானது களத்தடுப்பாளரால் பிடியெடுக்கும் போது துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழப்பார். இதே போல துடுப்பாட்ட வீரர் அடித்தாடி ஓடுபாதையை கடக்கும் முன்னர் விக்கட்டுக்கள் தாக்கப்படுமானால் தாக்கப்பட்ட விக்கட்டின் பக்கத்திலான துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து வெளியேறுவார். இவற்றிற்கு மேலாக வீசப்படும் பந்து துடுப்பாட்ட வீரரால் அடித்தாட முடியாமல் கால்களில் தாக்கப்படும் போது,கால்களில் பட்டு விக்கேட்டை தாக்கியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் பந்து வீச்சானது நடுவரின் தீர்ப்புக்காக உற்படுத்தப்பட்டு நவீன விஞ்ஞான இயந்திர கண்காணிப்பு மூலம் பந்து விக்கட்டை தாக்குவதாக உருதிப்படுத்தப்பட்டால் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்து வெளியேறுவார். இவ்வாறு தனக்கு வழங்கப்பட்டுள்ள பந்து ஓவர்களுள் சகல விக்கெட்டையும் இழந்தோ அல்லது ஓவர்களின் முடிவிலோ எதிரணி பெற்று கொள்ளும் ஓட்ட எண்ணிக்கையே போட்டியின் வெற்றி இழக்காக தீர்மாணிக்கப்படும் அதே தருணம் எதிரணி வெற்றி இழக்கை அடைந்தால் வெற்றியை உறுதிப்படுத்தும் அதே வேலை வெற்றி இழக்கை அடைந்து கொள்ள முடியாவிட்டால் இழக்கை நிர்ணயம் செய்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு இடம் பெரும் போட்டியில் வீசப்படும் பந்து வீச்சுகளின் எண்ணிக்கையின் மாற்றத்தின் அடிப்படையில் போட்டிகளின் தன்மையும் வகைப்படுத்தப்படும். இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் சபையால் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில் 20 ஓவர்களை கொண்ட போட்டி இருபதிற்கு இருபது என்ற பிரிவிலும் 50 ஓவர்களே கொண்ட போட்டி ஒருநாள் போட்டி என்றும் ஐந்து நாட்கள் இரண்டு (தடவை) இணிங்ஸைக் கொண்ட போட்டியானது டெஸ்ட் போட்டி என்றும் வரையறுக்கப்படுகிறது. இவ்வாறு இடம் பெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி தோல்வி இன்றி முடிவுரும் போட்டியானது சமநிலையாக கருதப்படும் அதே வேளை, ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் சம நிலையில் முடியும் போது மீண்டும் வெறும் ஆறு பந்துகளை கொண்ட மூன்று வீரர்கள் மாத்திரம் துடுப்பாட கூடிய போட்டியானது இடம் பெற்று வெற்றி தீர்மாணிக்கப்படுவதோடு அப்போதும் புள்ளி சமநிலையில் இருந்தால் வெற்றி சமநிலையில் பகிரப்படும். இதற்கு மேலாக 20,50 ஓவர் போட்டிகளில் வெள்ளை கடின பந்தும் டெஸ்ட் போட்டியில் சிவப்பு கடின பந்தும் பயன்படுத்தப்பட்டு போட்டி இடம் பெறுகின்றது. இவ்வாறு பல சர்வதேச சட்ட திட்டங்களும் விளையாட்டு முறைகளும் காணப்பட்டாலும் கூட உள்ளூர் கழக மற்றும் பிரதேச மட்ட போட்டிகளில் தேவைக்கு ஏற்றாற் போல விதி முறைகள் மாற்றி அமைத்துக்கொள்ள படுகின்றன. இன்று கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் சர்வதேச ரீதியில் அதிக ஈடுபாடு காணப்பட்டாலும் சர்வ தேச போட்டி தன்மையில் பிரதான பன்னிரெண்டு நாடுகள் சர்வதேச போட்டி தொடர்களில் பங்கு பற்றுகின்றன. இவ்வாறு தொழில் நிலை கிரிக்கெட் , பொழுதுபோக்கு கிரிக்கெட் மற்றும் அதனை விளையாடுவதற்கான நடை முறைகள் முதலானவற்றை தெளிவுற அறிந்து கொண்ட நாம் நம் வாழ்வில் கிரிக்கெட் விளையாட்டை தொழிலாக அல்லாவிட்டாலும் பொழுதுபோக்காகவாவது விளையாண்டு உடல் செயற்பாட்டு தன்மை மற்றும் உள புத்துணர்ச்சி முதலான நன்மைகளை பெற்றுக் கொள்வோம்.