சினிமா திரைப்படங்களும் வாழ்வியலும்
சினிமா திரைப்படங்களும் வாழ்வியலும்
மனித வாழ்வியலில் படைப்பின் வழியதிலே நிம்மதி, சந்தோசம், முதலானவற்றை அடைந்து கொள்ளும் பெரும் ஆவலில் மனிதனானவன் பொழுதுபோக்கின் பக்கம் தன் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றான். அவ்வாறு தற்கால மனித சமூகம் பெரும் பொழுதுபோக்காக நாடிச் செல்வது இணையத்தளமும் அதனோடு இணைந்த நவீன மின்னியல் விளையாட்டு முதலானவற்றை நோக்கியே ஆகும். தொண்மை கால மனிதன் தன் பொழுதுபோக்காக விளையாட்டு மற்றும் இலக்கியங்களை கையாண்டு இன்பியலை தேடும் முயற்சியில் இணைந்திருந்தனர் இவ் இரு காலத்துக்கும் இடைப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பிரதான பொழுதுபோக்காக அங்கம் வகித்து வளர்ச்சியுற்று பின் துரித நிலை அடைந்து இன்றும் இணையத்தை மையமாக கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு தனித்துவமே திரைப்படங்கள் என்றால் அது மிகையாகாது. இத் திரைப்படங்களானது இன்றும் பலரது பிரபல்யமானதும் பிரதானமானதுமான பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வரும் திரைப்படங்கள் பற்றியும் அதன் சாயல் மனித வாழ்வியலில் செல்வாக்கு செலுத்தும் விதங்கள் பற்றியும் இக் கட்டுரையின் வழியதில் சற்று விரிவாக ஆராய்வோம்.
தமிழரின் பொழுதுபோக்கின் விருப்பத் தெரிவாய் அமையப் பெற்ற சினிமா திரைப்படங்கள் பற்றிய விபரனத்திற்கு முன்பதாக திரைப் படங்களது தோற்றம் பற்றி அறிந்து கொள்வோம். தொண்மை கால மனித சமூகம் தொழில் முதலான மனச் சுமைகளை முடிந்த வரை குறைத்து நிம்மதியையும் தன்னை மறந்த சந்தோசத்தையும் அடைந்து கொள்ளும் நோக்கில் கேலிக்கை,கலாச்சாரம்,மத வழிபாடு முதலான கருப் பொருட்களை முதன்மையாக கொண்டு ஓய்வு நேரங்களில் தன் குழுக்களுகுள்ளோ, குழுக்களோடோ கற்பனைகள் முன்னோர் வழி வந்த மரபுகளை நடித்து நடனமாடி இன்பித்து வாழ்ந்து வர இது பிற் காலத்தில் பொழுதுபோக்குக்கான பிரதான தெரிவுகளாக மேடை நாடகங்களும் ஆடல் பாடல்களும் அமையப் பெற்றன. இம் மேடை நாடகங்களில் கால மற்றும் நவீன கல்வி துறை சார் பெரும் வளர்ச்சியால் உருவாக்கம் பெற்ற ஒலி மற்றும் ஓளிப் பதிவு கருவிகள் ஊடாக பதிவு செய்யப்பட்டு பாதுகாத்து மீண்டும் மீட்டிப்பார்த்து இன்பிக்க கூடிய வகையில் அமையப் பெற்றதே திரைப்படங்களாகும். இத் திரைப்பட வளர்ச்சி போக்கின் முதற் காரண கர்த்தாக்கள் மேற்கத்தேய நாட்டவர்களே, இவர்களது வருகையின் வழியதிலேயே திரை கருவிகளும் திரைப்படங்களும் கீழை நாட்டவர்களும் பொழுதுபோக்காய் கண்டு மகிழும் வகையில் அமையப் பெற்றது என்றால் அது ஏற்க தக்கதே ஆகும். இவ்வாறு மேலை நாட்டவரது முதற்கால மொழியற்ற தமிழ் திரைப்படங்கள் இன்று வரையிலும் நினைவு கூர்ந்து பேசப்படுகின்றது என்றால் அது சிறப்பே. இவ்வாறான மேல் நாட்டவரது மொழியில்லா உடல் நயன திரைப்படங்கள் பற்றிய விளக்கம் முதற்கால முன்னிலை நடிகர் ஜார்லிஜாப்லின் வழியாக இன்றும் நினைவு கூர்வதாகவே அமைகின்றது.
இவ்வாறு தொடர்ந்த உலக திரைப்பட மற்றும் சினிமா துறை வளர்ச்சியில் தமிழர்கள் மத்தியிலும் திரைப்படங்கள் பற்றிய ஆர்வமானது இன்று வரையிலும் அழியா நிலைப்புடையதாகவே காணப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் கருப்பு வெள்ளை திரை கொண்ட படங்களை முதற் கொண்டு இன்று வரையிலும் தமிழ் திரைப்படங்களது வளர்ச்சியின் வரலாறு நீண்டுள்ளது. அவ்வாறு முதலில் தென்னிந்தியாவில் டென்டூ கொட்டாய் என்று அழைக்கப்படுகின்ற தியட்டர்கள் ஊடாக மக்களின் பொழுது போக்குக்காக உருவாக்கி திரையிடப்பட்ட திரைப்படங்கள் கால மாற்றம் மற்றும் நவீன விஞ்ஞான துரித வளர்ச்சியின் போக்கில் பல்வேறான மாற்றங்களோடு மிகவும் வினைத்திறனான தன்மையுடன் உருவாக்கம் பெற்றுள்ளன. அவ்வாறு முதலில் கருப்பு,வெள்ளையென திரையிடப்பட்ட படங்கள் இன்று த்ரீடீ என்றழைக்கப்படும் முப்பரிமாண காட்சிகளை கொண்ட அதி சிறந்த தெளிவு தன்மையை கொண்ட தாக அமையப் பெற்றுள்ளமையானது நாம் அறிந்ததே. இவ்வாறு துரித விஞ்ஞான வளர்ச்சியில் தற் காலத்தில் பதிவு செய்யப்படுகின்ற திரைப்படங்களில் நாளுக்கு நாள் வினைத் திறன் என்பது இன்று வரையிலும் இணைந்த வண்ணமே உள்ளது.
குறிப்பாக நோக்குமிடத்து தமிழ் திரைப்பட வளர்ச்சியானது தென்னிந்தியா மற்றும் ஈழத்திலும் வாழ்வியல் கதை அம்சங்களை பல வித்தியாச கோணங்களில் வினைத் திறனோடு திரைப்படங்களாக மக்களிடத்தில் பொழுதுபோக்காக வழங்கிய நாட்களை கடந்து தூய காதல், சிறந்த நட்பு, மத ரீதியான தனித்தன்மை, வரலாற்று நிகழ்வுகள், உலகத்தின் உன்னத சாதணையாளர்களது வாழ்க்கை ,கல்வி முதலானவற்றை மிக எளிதான பாங்கிலும் இயல்பான கதை களத்திலும் பொழுதுபோக்கான விதத்திலும் திரைக் கதைகளாக இன்று வரை மக்களிடத்து கையளித்து மக்களது வாழ்வியலின் சிந்தனை கிளரளுக்கான வாய்ப்பை இச் சினிமா துறையானது வழங்கி இருக்கிறது என்றால் அது ஆதாரப் பூர்வமானதே. உதாரணமாக நோக்குமிடத்து இன்றைய நடைமுறையில் தூய காதலையும் கால மாற்றத்தில் காதல் நிலை பற்றியும் மிக தெளிவுறவும் எளிதான முறையிலும் ராஜா ராணி என்ற திரைப் படத்தின் ஊடாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வளர்ந்து வரும் சமூகத்தினரிடத்து தூய்மை காதலின் வெளிப்பாடுகளை விதைக்கும் முயற்சியை இத் திரைப்படம் மேற் கொண்டுள்ளது. இதே போல சிறந்த தந்தை மகள் பாசத்துக்கு ஓர் தங்க மீன்களையும் நட்புக்கு இலக்கணமாய் ஓர் ஆர்த்மார்த்த நண்பனையும் தொழிநுட்பத்தின் வழியான திருட்டை அடையாளம் காட்ட ஓர் இரும்பு திரையையும் இருநூறு வருடங்களாய் முகவரியற்ற சமூகமாய் தவிக்கும் மலையக சமூகத்தின் உரிமை குரலாக ஓர் பரதேசியையும் என தமிழ் திரை உலகம் சிறந்த திரைப் படங்களாக முன்னிலை படுத்தியுள்ளமையானது குறிப்பிடத்தக்கதே.
இவ்வாறு தனித் தன்மை கொண்ட தமிழ் திரையுலக திரைப்படங்களால் நம் சமூகத்தினர் அனுபவிக்க கூடிய நன்மைகள் அல்லது சாதக தன்மைகள் எனும் பாங்கில் ஆராயும் போது முதலில் மக்கள் சமூகத்தின் உச்ச கட்ட பொழுதுபோக்கு அம்சமாக இத் திரைப்படங்கள் இன்று வரையிலும் வளம் வந்துக் கொண்டிருக்கிறது. சிறுவர் பெரியவர் எனும் வயது வரம்புகளோ வேறுபாடுகளோ அன்றி சகலருக்கும் தனித்த மனநிலை ஒன்றினை உருவாக்கும் பணியினை இன்றைய திரைப்படங்கள் மிக தெளிவாக மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறு மனித சமூகத்தின் உணர்ச்சிகளின் கிளர்ச்சியில் தன்னை அறியா மகிழ்ச்சி,கவலை,கண்ணீர்,சிரிப்பு,சோகம்,பேரானந்தம் முதலான உணர்வூட்டல்களை மனித இயல்பில் கொண்டு சேர்க்கும் தன்மையில் இன்றைய திரைப்படங்கள் அமையப் பெற்றுள்ளன. அது மட்டுமின்றி இன்றைய நவீனத்தின் வளர்ச்சி போக்கில் விரிசலுற்று வரும் குடும்ப கட்டமைப்பை மீள் சேர்க்கும் ஒரு பிரதான பணியையும் மிக சிறப்பாக இத் திரைப்படங்கள் மேற் கொண்டு வருவதோடு உயரியதும் ஆர்த்மார்த்தமானதுமான தூய காதல் பற்றிய சிறந்த எடுத்துக்காட்டு, குடும்ப உறவு நிலைகள் குறிப்பாக தந்தை மகன் பாசம்,தாய் அன்பு, சகோதர அன்பு பிணைப்பு ,நட்பு கூட்டங்களது மெய் நிகர் அன்புறவு முதலானவற்றை மிக தெளிவாகவும் துள்ளிய தன்மையோடும் புதிய முனைப்பில் மீள் கட்டமைக்கும் பணியை மேற் கொள்கின்றது. மேலும் மிக சிறந்த விழிப்புணர்வு மையமாக இத் திரைப்படங்கள் செயற்படுகின்றன என்றால் அதுவும் ஏற்புடையதே. அவ்வாறு நவீன தொழிநுட்ப வளர்ச்சியால் இடம் பெறும் வினைத் திறன் மிக்க இலத்திரனியல் திருட்டுக்கள், போதை வஸ்த்துக்களின் பயன்பாட்டால் இடம் பெறும் பாதக எதிர்விளைவுகளின் துரித தன்மை மற்றும் பெண்ணிய சமூகத்திற்கு ஏற்படும் இடையூறு மற்றும் பாதக தன்மை முதலானவற்றின் மிகச் சிறந்த விழிப்புணர்வு ஊடகமாக இன்றைய சமூகத்தில் திரைப்படங்கள் அடையாளப் படுத்தப்படுகின்றன. இதற்கு மேலாக வரலாற்று நிகழ்வுகளையும் தொண்மை கால வரலாற்று இதிகாசங்களையும் மீண்டும் ஒரு முறை தற்கால சமூகம் இலகு நிலையில் மீட்டிப் பார்க்கும் விதமாகவும் திரை கதைகளாக்கி கண்கவர் திரைப்படங்களாக இன்றும் முன்னிலைப் படுத்துகின்றமையானது இன்றைய சினிமா துறையின் தனி சிறப்பே ஆகும்.
இவ்வாறு பல்வேறுப்பட நன்மைகளையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் சுமந்து இன்றைய நவீனத்துவத்தில் பயணிக்கும் திரைப்படங்கள் முழுமையான சாதக தன்மையை மாத்திரமே கொண்டு பயணிக்கின்றது என்றால் அதை ஏற்றுக் கொள்ள முடியாததே. அந்த வகையில் சில பாதக பக்கங்களையும் கொண்டே பயணிக்கின்றது. அவ்வாறான பாதகப் பக்கம் சார்ந்து சற்று விரிவாக நோக்குமிடத்து திரைப் படங்களானது பொழுதுபோக்கு எனும் நிலையை கடந்து இன்றைய இளைஞர்களது சோம்பல் நிலைக்கு முதன்மை காரணங்களுள் ஒன்றாக இத் திரைப் படங்களும் காரணமாகின்றன. அதே போல இன்றைய இளைய சமுதாயத்தினரின் தகாத உளவியல் சிந்தனைகள் மற்றும் உடலியல் செயற்பாடுகளை தூண்டும் விதமாகவும் இவ் இன்றைய சில திரைக் கதைகளும் திரைப் படங்களும் அமைகின்றன என்றாலும் அதுவும் ஏற்று கொள்ள கூடியதாகவே உள்ளது. அவ்வாறு திரைப்படங்களில் காட்சியளிக்கின்ற கதா நாயகன், கதா நாயகியின் பானியில் தன் ஆடை அலங்காரம் முதலானவற்றை அமைத்து கொள்ளவும் வீரதீர செயற்பாடுகளை மேற் கொள்ளவும் அவர்களுக்கு தீவிர ரசிகனாக மாறும் நேரம் அவசியமற்ற ஆடம்பர செயற்பாடுகளை மேற்கொள்கின்ற நிலையும் ஏற்படுகின்றது. இதன் வழி தடத்தில் மாணவச் சமூகம் தன் கல்வி சார் சிந்தனையிலிருந்து திரை பட பாணியிலான சிந்தனை கிளரளுக்கு அடிமையாகும் நிலையும் அதே போல இளைய தொழில் முனையும் சமூகம் தன் தொழில் சார் சிந்தனையிலிருந்து விளகி பெரும் அசௌகரியங்களை அனுபவிக்க வேண்டிய நிலையும் இன்றைய சமூகத்தில் இடம் பெறுவதை ஆதார பூர்வமாக அறிந்து கொள்ளவே முடிகின்றது.
இவ்வாறு தனது பல பாதக தன்மையினை இன்று வரையிலும் கூட திரைப் படங்களில் கொண்டிருந்தாலும் கூட எவ்வாறாயினும் இன்றைய சினிமாத் துறையின் கற்பனைத் திறன்களின் தன்மையானது போற்றப்பட வேண்டியதாகவே அமைகின்றது. அவ்வாறு தொண்மை கால வரலாற்று சான்றாதார காவியங்களில் தொடர்ந்து எதிர்கால சமூகத்தின் நிலைகள் வரையிலும் மறு புறத்தில் பூகோள நிலைக்கு வெளியில் ஏனைய கோளங்களில் உயிரின நிலைப்பென ஒன்று இருப்பின் அதன் தன்மை வரையிலும் மிகுந்த கற்பனைத் திறனை கொண்டதாக இன்றைய சினிமாத் துறை திரைப்படங்கள் அமையப் பெறுகின்றமையானது சிறப்புக்குறியதே.
சினிமா துறையினதும் திரைப்படங்களினதும் இந் நிலைக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பதானது ஓயாது தொடர்ச்சியான வளர்ச்சி போக்கில் பயணிக்கும் திரை துறையின் நவீன இயந்திர பயன்பாடுகளே என்றால் பொய்க்காது. அவ்வாறு வலு பெற்ற திரைப்படங்களில் இன்று முற்கால வரலாற்று இடங்களையும் விண்வெளிப் பரப்புக்களையும் வேற்று கிரகங்களையும் என பல்வேறுபட்ட கதை நிகழ் களங்களை அமைத்து கொள்வதிலும் இன்றைய நவீன சமூகத்திலும் பெறும் வரவேற்பை பெற்று கொள்வதிலும் நவீன இயந்திரங்களின் பங்களிப்பானது இன்றியமையாததாகவே அமைகின்றது.
இத்தகைய நிலையில் துரிதமாக பயணிக்கும் திரைப்படங்களின் மறுபுறமான தொழில் வாய்ப்பு நிலைகளும் இலாப நோக்கங்களும் எதிர்பார்ப்பின் படி இயன்ற வரை சிறப்பான முறையிலேயே இடம் பெற்று வருகின்றது ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நாளாந்த சினிமா துறை சார் தொழில் வாய்ப்புக்களும் நடைமுறையில் கிடைக்க பெற்றே வருகின்றன. குறிப்பாக சினிமா தியட்டர்களை கடந்து திரை கதா பாத்திரங்களுக்கு பின்னால் பல்லாயிரம் கணக்கான மக்களின் தொழில் வாய்ப்பில் சினிமா மற்றும் திரைப்படங்களும் பெறும் பங்கு வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும் இன்றைய நவீனத் தன்மையின் தரித வளர்ச்சியில் விலகிச் செல்லும் குடும்ப கட்டமைப்புக்களை மீண்டும் சீரமைக்கவும் உணர்வுகளை இன்றைய சமூகத்தவரிடத்தில் தூண்டிவிட்டு உணர்வாளர்களாய் உருவாக்குவதற்கும் இன்றைய திரைப் படங்களின் பங்கு இன்றியமையாததாகும். இவ்வாறானவற்றை அடிப்படையாக கொண்டு சினிமா திரைப்படங்கள் பற்றிய மிக நீண்ட தெளிவுத் தன்மையை அறிந்து கொண்ட நாம் இன்றைய வாழ்க்கை போக்கில் பொழுதுபோக்குக்கான இடைவேளையில் சிறந்த திரைப் படங்களையும் இணைத்துக் கொள்ளும் அதே சமயம் பொதுமை அறிவுக்காகவும் விழிப்புக்களுக்காகவும் மாத்திரம் திரைப்படங்களை கைக் கொள்வோம். சிறப்பான அனுபவங்களை கொண்ட உணர்வுப்பூர்வமான வாழ்கை கட்டமைப்பை அமைத்து கொள்வோம்