ஏதோ மாயம் செய்கிறாய் அன்பே

ஏதோ மாயம் செய்கிறாய் அன்பே
உன் அங்குலப் பார்வையால்
ஆழப்புதைந்துவிட்டாய் நெஞ்சுக்குள்ள
உன் தாவணி விசிறியாலே
மென்காற்று வீசச்செய்தாய்
வண்டினங்கள் உனைச்சுற்றி வட்டமிடுகின்றன
பூவினங்கள் உன்மேல் பொறாமை கொள்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள் உன் வனப்புக்கு வண்ணம் சேர்க்கின்றன
சீதையின் இனமோ மனம் சேரத்துடிக்குதடி
சீதளம் வீசுகிறாய் உன் அன்பு மொழியாலே
வீதிக்குச் சமிஞ்சை போல் உன் ஓரவிழிப் பார்வையெனக்கு
விதவிதமாய் நாட்டியமாடுதடி உன் விழிகள்
விலகாமல் உறைந்து போனேனே நான்
நீலப்புடைவையில் நீங்காமல் நிற்கிறாயடி
என் சலனம் தீர்ப்பாயோ எனக்கொரு பதில் தாராயோ
தா வரம் நீயெனக்கு
தார் அணிந்து அக்கினியை வலம்வருவோம்
ஆணையிடு அடுத்த நொடி உன்னருகில்
அணையாவிளக்காய் ஒளிதர காத்திருக்கிறேன்
வித்தைக்காரியடி நீ நித்தம் எனை
மூர்ச்சையாக்கி ஏதோ மாயம் செய்கிறாயே
தினம் உனக்குள் கரைகிறேன்
ஏற்பாயா எனை அன்பே
நன்றி:- சோபிகரன் மேரிசீனு