செவ்வானம் நானே நீ அவந்திகையே..-6 (தொடர்கதை)

காதல் தொடர்கதை

செவ்வானம் நானே நீ அவந்திகையே..-6 (தொடர்கதை)

வீட்டிற்கு வந்ததிலிருந்து ஒருவனின் கண்கள் அவனவளை தான் தேடுகிறது.அவள் விழியில் ஒளிந்திருக்கும் அந்த ஏதோ ஒன்று என்ன என கண்டு கொள்ள மனம் துடியாய் துடிக்கிறது .இத்தனை வருடமும் ஜனனியிடம் காணதா ஏதோ ஒன்று அவளிடம் தோன்றுகின்றுது .கண்ணில் சிக்காமல் ஆட்டம் காட்டுகிறாள் அவள் பார்க்க முயன்று தோற்று போகின்றான் அவன்.

தாயின் அறை முதல் சமையல் காரி அறைவரை இல்லாத பொய்யெல்லாம் சொல்லி அவந்திகாவை தேடி விட்டான் வேந்தன் எங்கே போனாள் என்று தெரியவில்லை. ஆஃபிஸ் முடிந்து அவனோடு தான் வீட்டிற்குள் வந்தாள் அவன் குளிக்க சென்ற வேலையில் மகராசி எங்கே ஓடி போனாள் என்று தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் ஜனனிக்கே போன் எடுத்து விட்டான் வேந்தன் ஜனனியை தவிர வேறு யாரிடமும் அந்த சேட்டை காரியை பற்றிய தகவல்கள் இருப்பது சொற்பம் தான்.

ஜனனி....போனை தூக்கி வந்த படி அவள் காதுக்குள் கத்தினான் பிரபு..

அட ஏன்டா இப்படி காதுக்குள்ள கத்துற அடுப்பில் எதையோ கிளறி கொண்டே கேட்டவள் கையில் போனை திணித்தவன் இந்தா உன் சிடுமூஞ்சி மாமன் கால் பண்றான் என்னனு கேளு என்க அவனை முறைத்த பார்த்தவள் சிறு தயக்கத்தோடு அழைப்பை ஏற்க மறுமுனையில் இருந்தவனோ ஹலோ கூட சொல்லாது கேட்ட முதல் கேள்வி அவந்திகா எங்கே என்று தான்.

உங்க வீட்டுல உள்ளவள என் கிட்டே எங்கேனு கேட்டா எனக்கு எப்படி தெரியும் மாமா.

இங்க அவ வீட்டுல இருந்தா நா ஏன் உன்கிட்ட கேட்க போறேன்.உன்கிட்ட சொல்லாம தான் அந்த அராத்து எதையும் பண்ண மாட்டாளே அவ எங்க போனானு சொல்லு ஜனனி என்று வேந்தன் கூற சிறு திடுக்கிடல் ஜனனியின் உள்ளே.

இது வரை ஜானுமா என்றழைக்கப்பட்டவள் ஜனனி என்றழைக்கப்படுகிறாள். ஐயோ மாமா அவ என் கிட்ட எல்லாம் சொல்ல மாட்டா எதாவது ஒன்னு ரெண்டு விஷயங்கள தான் சொல்லுவா நீங்க வேணும்னா தெருமுனைல தேடி பாருங்களே யார் கிட்டையாவது வம்பு வளர்த்துக்கிட்டு நிற்பா என ஜனனி அழைப்பை துண்டித்து விட்டாள் இதற்கு மேல் அவனை சமாளிக்க திராணியில்லை.

என்னவாம் உன் மாமனுக்கு உடனே மூக்கு வேர்த்து போச்சா..அக்கா காரி சுட்ட பஜ்ஜியை வாயில் அதக்கி கொண்டே வந்து நின்றாள் அவந்திகா.

அடி பாவி நீ இங்கேயா இருக்க அந்த மனுஷன் உன்ன காணாம தேடுறார் போலையே..ஆமா நீ எப்போ வந்த நா உன்ன காணவே இல்லையே எம் பொண்டாட்டி சுட்ட பஜ்ஜிய வேற காலி பண்ணிட்டு இருக்க என அவந்திகாவின் கையில் உள்ள பஜ்ஜி தட்டை பிரபு வாங்க போக தட்டை பின்னால் இழுத்து கொண்டாள் அவந்திகா.

நா எப்பவோ வந்துட்டேன் மாம்ஸ் நீ தான் என்ன கவனிக்கல காதல் உன் கண்ணை மறைச்சிருச்சு என்ற அவந்திகாவை கொலை வெளியோடு முறைத்தவன் சரி வா நா உன்ன கொண்டு போய் விடுறேன் பாவம் உன் புருஷன் உன்ன காணாம தவிச்சு போய்ட்டாரு போல.

யாரு அவனா தவிச்சு போவான் சந்தோஷமா கொண்டாடிட்டு இருப்பான்..நா இல்லாம.அப்படியே தவிச்சாலும் எனக்கு ஒன்னும் கவலை இல்ல நேத்து இரக்கமே இல்லாம என்ன அழ வச்சான்ல தேடட்டும் நல்லா ஊர் பூரா தேடியலையட்டும் என்றவள் தன் பஜ்ஜி தட்டை எடுத்து கொண்டு டீவியோடு ஐக்கியமாகி விட ஜனனியும் பிரபுவும் தலையில் அடித்து கொண்டார்கள்.

இனி யாரிடமும் கேட்டு பிரயோஜனம் இல்லை தானே தான் வெளியே சென்று அவளை தேடியாக வேண்டும்.நேற்று இரவு அவள் நடந்து கொண்ட விதம் வேறு உருத்தலாகவே இருக்க கார் சாவியை எடுத்து கொண்டு கீழே வந்தான் வேந்தன் .

வேந்தா எங்கே இந்த நேரம் வெளியே கிளம்பிட்ட போல அந்த பொண்ண எதுவும் தேடி போறியா அவ வீட்டுல இல்ல.. முன்னால் வந்து நின்ற குமரனிடம் ஆமா அவள தான் தேடி போறேன் என உண்மையை சொல்லியிருக்கலாம் திருட்டு பையனோ இல்ல அண்ணா ஃபேக்றில ஒரு ஃபைல வச்சிட்டு வந்துட்டேன் அத எடுத்துட்டு வர போறேன் சாமாளித்து விட்டு ஓடினான்.

காதல் நோய் கண்டு விட்டால் மனதில் கள்ளமும் புகுந்து விடுமாம்..அவன் மனசாட்சி இடித்துரைத்தது.காதலா எனக்கா அதுவும் அவ மேல அவ முதல்ல பொண்ணு மாதிரியா இருக்கா.. கேள்வி கேட்ட மனசாட்சியிடம் மறுப்பாக பதில் சொன்னான் செந்தமிழ் வேந்தன்.

உன் அண்ணன் அவளையா தேடி போறனு கேட்டதுக்கு ஆமானு பதில் சொல்ல வேண்டிய தானே எதுக்கு பொய் சொல்லிட்டு போற..

ஏன்னா அவள வீட்டுல யாருக்கும் புடிக்காது அதனால பொய் சொன்னேன்..

அப்போ உனக்கு மட்டும் அவள புடிக்குமாக்கும்.. திரும்ப திரும்ப அவனை சீண்டிய மனசாட்சியை ச்சீ போ என தூக்கி தூர போட்டவன் அவந்திகாவை தேடி பயணப்பட்டான்.

எங்கே சென்று யாரிடம் விசாரிப்பது என்று தெரியவில்லை அவள் வீட்டிற்கும் சென்று கேட்க முடியாது மித்ரன் தன் தங்கையை இவன் ஏதோ செய்து விட்டு இங்கே வந்து விசாரிக்கிறான் என குற்றம் சாட்டினாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.

மண்டையே வெடிம்பது போல இருந்தது வேந்தனுக்கு ஏன் அவளை தேட வேண்டும் அவள் என்ன சிறு பிள்ளையா வீட்டிற்கு வர தெரியாதா என்ன என ஒரு மனம் வாதம் செய்தாலும் அவளை தேடியே ஆக வேண்டும் என இன்னொரு மனம் முரண்டு பிடித்தது.

இதோ பாரு அதி நீ இங்கே இவ்வளவு நேரம் இருக்கிறது சரியில்ல ஆயிரம் தான் இருந்தாலும் நீ இப்போ வேந்தனோட மனைவி மறந்திடாத பெருமையாக விளக்கி சொன்ன பிரபுவின் வார்த்தை எல்லாம் எங்கே அவள் கேட்டாள் அவள் தீவிரமாக டாம் அண்ட் ஜெர்ரி அல்லவா பார்த்து கொண்டிருந்தாள்.

இவ கிட்ட பேசுறதே வேஸ்ட என்ற பிரபு எழுந்து உள்ளே சென்று விட தோளை குலுக்கி விட்டு மீண்டும் டீவியில் தலையை நுழைத்தாள் அவந்திகா.

யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டது அதிக்கு... பிரபு உள்ளே அறையில் இருந்தான் ஜனனி குளித்து கொண்டிருக்க கதவை திறக்கும் கஷ்ட்டமான வேலையை அவந்திகா தான் செய்தாக வேண்டும்..நூறடி தூரத்தில் கதவு இருப்பதை போல சலிப்புடன் அவள் கதவை திறக்க வெளியே நின்றிருந்த முரட்டு உருவம் ஒன்று அவள் வாயை பொத்தி தூக்கிக்கொண்டு போனது.

குளித்து முடித்த ஜனனி வெளியே வந்து பிரபுவிடம் அதியை கேட்க அவனோ அவள் சென்று விட்டாள் என முடித்து விட்டான்.

காரில் மூஞ்சை தூக்கி கொண்டு அமர்ந்து வந்தவள் மீது ஒரு கண்ணையும் சாலை மீது ஒரு கண்ணையும் பதித்த படி வந்தான் வேந்தன்.ஐந்து நிமிடத்திற்கு மேல் அமைதியாய் இருப்பது அவந்திகா வாழ்வில் நடக்காத காரியமே...யோவ் சிடுமூஞ்சி எதுக்கு இப்போ என்ன கடத்திக்கிட்டு போற.. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன் மரியாதையா என்ன கொண்டு போய் ஜானு வீட்டிலேயே விட்ரு.

முடியாது என்னடி பண்ணுவ..உன்ன காணாம ஊர் முழுக்க நா தேடி அலைஞ்சா நீ ஜாலியா அவ வீட்டுல உட்கார்ந்து இருக்க இதுல அவ பொய் வேற சொல்றா நீ அங்க இல்லனு இருக்கட்டும் அவள நா அப்பறமா கவனிச்சிக்குறேன்.

அவந்திகாவே பட படவென்று பேசிய வேந்தனை புதிதாக பார்த்தாள்.முதலில் ஜானுமா அடுத்து ஜனனி இப்போது அவள்.

என்ன மேடம் அப்படி பாக்குறிங்க வேற என்ன பொய் சொல்லிட்டு தப்பிச்சு போகலாம்னா..

இல்ல நீ என்ன ஜானுவ அவ இவனு சொல்ற வார்த்தைக்கு வார்த்தை ஜானுமா ஜானுமானு தானே கொஞ்சுவ இப்போ என்ன புதுசா.. மனதில் உள்ளதை வெளிப்படையாக கேட்டே விட்டவளிடம் சட்டென்று பதில் சொன்னான் செந்தமிழ் வேந்தன்.. அடுத்தவன் பொண்டாட்டிய மனசுல நினைக்கிற அளவுக்கு இந்த வேந்தன் ஒன்னும் கேவலமானவன் கிடையாது என.

ஆமா எதுக்கு அவங்க வீட்டுக்கு போன.. பேச்சை மாற்றினான் வேந்தன்.வேற எதுக்கு போவாங்க தூங்க தான் போவாங்க நீ தான் வெளியே தள்ளி கதவை சாத்துறியே சரியான காரிய கிறுக்கன் என்றாள் அவந்திகா அவன் முகத்தை பார்த்த படி.

அவள் பேச்சு அவன் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் வைத்தாலும் அதனை முகத்தில் காட்டிக்கொள்ளாதவன் ஆமா அதென்ன காரிய கிறுக்கன்..என்றான் ஒன்றும் புரியாமல்.

ஆமா உன் விஷயத்துல காரிய கருத்தா இருக்க எனக்குனா கிறுக்கு தனம் பண்ற அதான் காரிய கிறுக்கன்னு சொன்னேன்.அவள் சொல்லி முடிக்கவும் வீடு வந்து சேரவும் சரியாய் இருந்தது.

அனைவரும் அவரவர் வேலையில் குறியாய் இருக்க கோபியை தவிர அவந்தியும் வேந்தனும் சேர்ந்து வந்ததை வேறு யாரும் கவனிக்கவில்லை.

நீ போய் பெட்ல படுத்துக்க நா சோஃபாவுல படுத்துக்குறேன் என்றவன் லைட்டை அணைத்து விட்டு சோஃபாவில் சாய அசையாது நின்றிருந்தாள் அவந்திகா.. இன்னும் என்னடி பேய் மாதிரி நின்னுட்டு இருக்க போய் தூங்கு போ என அவளை துரத்திவிட நீயும் வா மாமா குட்டி எனக்கு தனியா தூங்க பயமா இருக்கும் என்று அவன் கையை பிடித்து இழுத்தாள். 

நேற்றைய நாள் நினைவுக்கு வர எதுவும் கூறாதவன் அமைதியாய் சென்று கட்டிலில் ஒரு ஓரமாய் படுத்து கொண்டான்.நள்ளிரவில் தன் மேல் ஏதோ கணமாய் உணர கண்விழித்தான் வேந்தன்.

அவனின் ராட்சசி தான் அவன் மீது மொத்த பாரத்தையும் போட்டு உறங்கியிருந்தாள்.அவஸ்த்தையாய் போனது ஆணவனுக்க மெல்ல அவளை விலக்கி படுக்க வைக்க அட்டையை போல ஊர்ந்து வந்து அவன் மீதே ஒட்டிக் கொண்டாள் சேட்டை காரி.

காலை அவன் மீது தூக்கி போட்டு ஆணவன் நெஞ்சமதை மஞ்சமாக்கி இடையோ கட்டிக்கொண்டு உறங்கியவளை தள்ளி படுக்க வைப்பதே பெரும் சிரமமாய் போனது அவனுக்கு.

மாமா குட்டி...அவள் வாய் ஏதோ முனுமுனுக்க காதை கூர்மையாக்கி அவள் உலறுவதை கேட்டான் வேந்தன்.

ஐ...லவ்.. யூ மாமா குட்டி எதுக்கு என்ன விலக்கி வைக்கிற உனக்கும் என்ன புடிக்கலையா...எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் மாமா குட்டி என்ன விலக்கி வைக்காத மாமா குட்டி என உலறி கொண்டே அவள் தூங்

ஐ...லவ்.. யூ மாமா குட்டி எதுக்கு என்ன விலக்கி வைக்கிற உனக்கும் என்ன புடிக்கலையா...எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் மாமா குட்டி என்ன விலக்கி வைக்காத மாமா குட்டி என உலறி கொண்டே அவள் தூங்கிட...இது எப்போல இருந்து என அதிர்ந்து போனவன் தூக்கத்தை தொலைத்தான்.

தொடரும் கிட...இது எப்போல இருந்து என அதிர்ந்து போனவன் தூக்கத்தை தொலைத்தான்.

தொடரும் 

<<<<இவற்றையும் மிஸ் பண்ணாம படியுங்கள் >>>>>