செவ்வானம் நானே நீ அவந்திகையே..-5 (தொடர்கதை)

காதல் தொடர்கதை

செவ்வானம் நானே நீ அவந்திகையே..-5 (தொடர்கதை)

S.v Garments என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற அந்த கார்மென்ட்டுக்குள் கார் நுழைந்தது.அடிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். முதலாளியை கண்டதும் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்க அவனோ மூஞ்சை உர்ரென்று வைத்து கொண்டு சென்றான்.

ஒரு குட் மார்னிங் சொன்னா குறைஞ்சா போய்டுவான் சிடுமூஞ்சி பாரு தேவாங்கு மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு போறத மனவாளனுக்கு மனதில் ஏகப்பட்ட அர்ச்சனைகளை வழங்கிய மனைவியவளோ அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டு செல்ல யார் இந்த பொண்ணு என அனைவரும் குழப்பமாய் அவந்திகாவை பார்த்து வைத்தார்கள்.

தன் அறைக்குள் நுழைந்த வேந்தனோ மேனஜரை அழைத்தான்.

ராகவ் இவங்க நியூ ஜாய்னி ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்காங்க வர்க் எல்லாம் கத்து கொடுங்க.. அண்ட் எந்த நேரமும் மேடம கொஞ்சம் வாட்ச் பண்ணிக்கிட்டே இருங்க ஏன்னா மேடம் மகா மட்டமான சோம்பேறி என்ற வேந்தனை அவந்திகா கொலை வெறியோடு முறைக்க மேனஜர் ராகவோ எதுவும் புரியாமல் விழித்தான். 

நா ஒன்னும் அவ்வளவு சோம்பேறி இல்ல ஹும் இப்போ என் திறமைய நிரூபிக்காம இந்த ஃபேக்றிய விட்டு நா வெளியே போக மாட்டேன்.

வெறும் வாயாலயே வட சுடாம போய் வேலைய பாரு போ..வேந்தனும் அவளை துரத்தி விட சலித்து கொண்டே ராகவுடன் சென்றாள் அவந்திகா.

அவளிடம் ஒரு பேபி டிரஸ்ஸை கொண்டு வந்து கொடுத்தான் ராகவ் ஸ்டோன் வேலைபாடு நிறைந்த சட்டை அது.

மேடம் இதுல டிசைனிங் கொஞ்சம் கம்மியா இருக்கு இதுக்கு இன்னும் என்ன மாதிரியான டிஸைன் போடலாம்னு நினைக்கிறிங்க..

எதே டிஸைன் கம்மியா இருக்கா..இதுல உள்ள ஸ்டோன் எல்லாம் எப்படி கலட்டலாம்னு நினைக்கிறேன் என்ற அவந்திகாவை ஒரு மாதிரியாக பார்த்தான் ராகவ்.

என்ன லுக்கு.. இதுக்கு எப்படி உங்க எம்டி சார் அப்ரூவல் கொடுத்தாரு..என்றாள் அவநதிகா யோசனையாய்.

அவரு பெருசா இதெல்லாம் பார்க்க மாட்டாரு நானும் இங்கே டிசைனிங் டீம் லீடர் மிஸ்.பாவனாவும் தான் செக் பண்ணி அப்ரூவல் கொடுப்போம்.

ஓ அப்போ இந்த பேபி டிரஸ்ஸோட டிசைனர் யாரு..?

பாவனா தான்...மிஸ் அவந்திகா நா தான் உங்களுக்கு மேனஜர் நீங்க எனக்கு மேனஜர் இல்ல ஒரு வேலைய சொன்னா ஆயிரம் கேள்வி கேட்குறிங்க.. அதான் எம்டி சாரே சொன்னாரே நீங்க சோம்பேறினு வேலை செய்ய பயந்துக்கிட்டு இப்படி கேள்வி கேட்டு சாகடிக்காதிங்க..அவள் தன்னையே கேள்வி கேட்கிறாள் என்ற ஆத்திரத்தில் தேரை இழுத்து தெருவில் விட்டான் ராகவ்.

ஓக்கே மிஸ்டர் ராகவ் அப்போ நீங்க சொன்ன வேலைய என்னால செய்ய முடியாது..உங்க எம்டி கிட்ட இல்ல எவன் கிட்ட வேணுனாலும் போய் சொல்லிக்கோங்க என கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக உரைத்தவளை சற்றும் பிடிக்கவில்லை ராகவிற்கு.

சார் அந்த பொண்ணு சொன்ன வேலைய செய்ய மாட்டேங்குது சார் எம்டி கிட்ட இல்ல எவன் கிட்ட வேணுனாலும் போய் சொல்லுன்னு சொல்லுது சார்..வேந்தனிடம் வந்து பற்ற வைத்தான் ராகவ்.

அப்படியா சொன்னா.. இடியட் அவள கூட்டிட்டு வந்ததே தப்பா போச்சு..போய் அவள வர சொல்லுங்க என வேந்தன் கொந்தளித்து கொண்டிருக்கும் போதே அந்த சட்டையை தூக்கி கொண்டு வந்தாள் அவந்திகா.

என்ன மேனஜர் சார் உடனே வந்து வத்தி வச்சிட்டிங்க போல.. அப்படியே நா ஏன் வேலை செய்ய மாட்டேன்னு சொன்ன காரணத்தையும் சொல்லிருக்கலாமே என்றவள் அந்த சட்டையை வேந்தன் முன்பு தூக்கி போட புருவம் சுருக்கி கேள்வியாய் அவந்திகாவை பார்த்தான் வேந்தன்.

இந்த டிரெஸ்க்கெல்லாம் எப்படி அப்ரூவல் கொடுக்குறிங்க எம்டி சார்..இந்த டிரஸ் முதல்ல மார்க்கெட்ல சேல் ஆகுமானு சொல்லுங்க என்றாள் அவந்திகா.

வேந்தனும் அந்த சட்டையை எடுத்து பார்த்தான் 1-2வயது குழந்தைகளுக்கான சாதாரண ஆடை அது.குழந்தைகள் ஆடைக்கு ஏன் இத்தனை கற்கள் வேலைப்பாடுகள் என அவனுக்கும் புரியவில்லை.

இந்த டிரஸ்க்கு இந்த டிஸைன் பத்ததாம் இன்னும் டிஸைன் வேணுமா உங்க மேனஜெர்க்கு இப்போ நா என்ன பண்றது எம்டி சார் டிஸைன் பண்ணி கொடுக்கவா.

இதோட டிசைனர் யாரு வர சொலுங்க வேந்தன் கட்டளையிட அடுத்த நிமிடம் வந்து நின்றாள் பாவனா.

முகத்தில் முக்கால் கிலோ மேக்கப் போட்டு அலுவலகத்திற்கு சற்றும் பொருந்தாத அறைகுறை ஆடையுடன் வந்து நின்றவள் அவந்திகாவை யார் என்பதை போல பார்த்தாள்.

நீங்க தான் பாவனாவா மேடம்.. இந்த டிரெஸ் நீங்க தான் டிசைன் பண்ணிங்கலா அவந்திகா நக்கலாய் கேட்க பாவனா தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

ஓக்கே பாவனா எனக்கு கொஞ்சம் இந்த டிரஸ் பத்தி எக்ஸப்ளைன் பண்றிங்கலா வேந்தன் கேட்க அதற்காகவே காத்திருந்தவள் போல யாஹ் சார் என அவன் அருகில் சென்று அங்கம் உரசும் படி நின்றவள் தொடர்ந்தாள்.

சார் இது பேபி டிரெஸ் 1-2பேபிஸ்க்கான டிரெஸ் அன்ட் இதுல உள்ள ஸ்டோன் வர்க் பார்த்து எல்லாரும் இத விரும்பி வாங்கு வாங்க.. அவ்வளவு தான் என்று பேச்சை முடித்தவள் அவனை விழுங்கும் பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.

மிஸ்டர் ராகவ் நீங்க போய் கேன்டீன்ல வேலை பாக்குற ஒரு லேடி சின்ன குழந்தைய வச்சிருந்தாங்க அந்த குழந்தைய தூக்கிட்டு வாங்க என அவந்திகா சொல்ல ராகவோ வேந்தனை பார்த்தான் .போ என வேந்தன் கண்ணாலேயே கட்டளையிட சிறுது நேரத்தில் அந்த தாயும் குழந்தையும் வந்தனர்.

அக்கா இங்கே ஒரு சாம்ப்பல் டிரெஸ் இருக்கு உங்க பொண்ணுக்கு கொஞ்சம் போட்டு விடுறிங்களா என அவந்திகா அந்த உடையை கொடுக்க அந்த பெண்மணியும் குழந்தைக்கு ஆடையை போட்டு விட்டாள்.

சிறுது நேரத்தில் ஒருவயது குழந்தை வீரிட்டு கத்த ஆரம்பித்தது.

ஐயோ என்னாச்சு என அனைவரும் பதறி போக..அக்கா அந்த சட்டைய கலட்டுங்க அது தான் பாப்பாவுக்கு சேரல என அவந்திகா சொல்ல சட்டை மாற்றப்பட்டதும் குழந்தையின் அழுகை நின்றது இருந்தும் குழந்தையை அவந்திகா வேந்தனிடம் காட்ட அந்த ஆடையில் உள்ள கற்கள் அழுத்தியதில் அங்கே உடல் சிவந்து போயிருந்தது குழந்தைக்கு.

பார்த்துக்கிடிங்களா எம்டி சார் பேபி டிரஸ்ல ஸ்டோன் வர்க் அதிகமா இருந்தா இப்படி தான் குழந்தைங்க அழுவாங்க பாவம் அவங்களுக்கு வாய திறந்து சொல்ல முடியாதே.. வீட்டுக்கு போடுற சாதாரண துணிக்கு இந்த வர்க் அதிகம்.இதுக்கு மேலேயும் நீங்க என்ன டிசைன் பண்ண சொன்னா ஐம் சாரி உங்க காமர்ன்ட்ல என்னால வர்க் பண்ண முடியாது நெற்றி பொட்டில் அடித்தாட் போல அவந்திகா பேசியதில் முகம் கருத்து போனது ராகவிற்கு பாவனாவிற்கும்.

சூப்பர்வைசரை அழைத்த வேந்தன் அந்த வகை ஆடைகளை உடனடியாக நிறுத்த கூறினான்.. ஏற்கனவே தைத்திருந்த உடைகளில் உள்ள கற்களை அகற்றும் பொருப்பை பாவனாவிடமும் புது டிசைன் செய்யும் அவந்திகாவிடமும் ஒப்படைத்தான்.

சார் இதுல உள்ள எந்தெந்த கல்லெல்லாம் கலட்டனும் சந்தேகம் கேட்கிறேன் பேர் வழி ஓட்டிக்கொண்டு வந்து நின்றாள் பாவனா.

நீங்க கலட்டுறது பூராவும் தேவையில்லாத ஆணி தான் மேடம் போங்க போய் எல்லாத்தையும் கலட்டுங்க...கலாய்த்து தள்ளினாள் அவந்திகா.

ராவும் பாவனாவும் எம்டி ரூமை வீட்டு வெளியேற போக பாவனாவை இழுத்து பளார் என்று ஒன்று வைத்தாள் அவந்திகா... வேந்தன் நடப்பதை வேடிக்கை பார்க்க ராகவோ தன் கன்னத்தில் கை வைத்து விட்டான் பாவனாவின் தலையை சுற்றி பூச்சி முதல் பறவை வரை அனைத்தையும் சுற்றி கொண்டிருந்தது.இடி முழக்கம் போல அப்படி ஒரு அறை.

இனி சார் மோர்னு இப்படி ஒட்டி உரசிக்கிட்டு நிற்கிறது ஆஃபிஸ்ல அறைகுறையா திரியுதனு வச்சிக்கிட்டே...மாடியில இருந்து தூக்கி மேல போட்ருவேன் கண்களை உருட்டி மிரட்டினாள் அவந்திகா.

ஏய் என்ன விட்டா ஓவரா போற நா என்ன பண்ணனும் பண்ண கூடாதுனு நீ சொல்லாத நா.அப்படி தான் செய்வேன் என்னடி பண்ண முடியும் உன்னால.இதெல்லாம் சொல்ல நீ யாரு நீயும் என்ன போல சாதரண ஸ்டாப் தான் இங்கே. உச்ச கட்ட கோபத்தில் பாவனா கத்திவிட.

அப்படியா நா யாரா நா வந்து யாரு..ஹாங் ஞாபகம் வந்திடுச்சு நா வந்து இதோ இவனோட பொண்டாட்டி மிஸஸ் அவந்திகா செந்தமிழ் வேந்தன் என்றிட..பாவனாவிற்கோ அதிர்ச்சி வேந்தனுக்கோ இதயத்தில் இனம் புரியா மகிழ்ச்சி.

இனி என் புருஷன் பக்கத்துல ஒட்டிக்கிட்டு நின்னா மூஞ்சிய பேத்துருவேன் பே..என அவளை வெளியே தள்ளிவிட்டு வேந்தன் மேசை மீதிருந்த தணாணீரை எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.

ஸ்ஸ்ஸப்பா என் வாழ்க்கைல ஒரு நாள் கூட இவ்வளவு வேலை செஞ்சதே இல்ல என்னா வேலை..மாமா குட்டி அந்த ஏசிய கொஞ்சம் கூட்டேன் அப்படியே ஒரு ஜுஸும் சொல்லிடு என சோஃபாவில் அமர்ந்தாள் அராத்து குட்டி.

ஏய் இங்கே வாடி..கை நீட்டி அவளை அழைக்க..என்னடா ஏதோ புருஷன் மாதிரி உரிமையா வாடின்ற சட்டை கையை மடித்து விட்டு சண்டைக்கு தயாராக வந்து நின்றாள் அவந்திகா.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ பாவனா கிட்ட என் புருஷன்னு சொன்னதா ஞாபகம்.

அது வேற வாய் இது வேற வாய்.. எதுக்கு கூப்பிட்ட அத முதல்ல சொல்லு மேன் எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு அழுத்து கொண்டாள் அவந்திகா.

ஆமா நேத்து நைட் ஏன் அப்படி நடந்து கிட்ட.. உனக்கு எதாவது பிரச்சனையா..?ஃபோவியா மாதிரி எதாவது நோயா அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வேந்தன் கேட்டு வைக்க சட்டென்று அவள் முகம் மாறியது.

உனக்கு எதுக்கு அந்த கதையெல்லாம் உன் வேலை என்ன..? என்னைய பழிவாங்குறது தானே அத மட்டும் செய் வீனா என் விஷயத்துல மூக்க நுழைக்காத உனக்கு அது நல்லது இல்ல.எனக்கு எந்த வியாதியும் இல்ல ஓக்கே..என்றவள் கதவை திறந்து கொண்டு வெளியேறி விட சொல்ல முடியாத வழி வேந்தன் இதயத்தில். 

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அவள் மனநிலையில் அவன் தான் குழம்பி போனான்.ஒரு நேரம் உரிமையாய் கணவன் என்கிறாள் மறு நொடியே நீ என்ன என் புருஷனா என்கிறாள்.குறும்பும் திமிரும் நிரைந்த அவள் விழிகளில் வேறு ஏதோ ஒன்றும் கூட மறைந்திருக்கிறது இருந்தும் அதனை படிக்க முயன்று தோற்று தான் போகிறான் வேந்தன்.

தொடரும்....