மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 08( கர்ணன் சாபம்)

சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 08( கர்ணன் சாபம்)

பாகம் 8

துரோணாச்சாரியார் தம்மிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற இராஜகுமாரர்களின் திறமையை வெளிப்படுத்த விழா ஒன்றை எடுத்தார். அதில் கொண்டனர். பாண்டவர்களும் கௌரவர்களும் கலந்து

திடீரென்று விழா மேடையில் ஒரு வீரன் தோன்றி;"நான் கர்ணன் முடிந்தால் விழாவில் கலந்து கொள்ளும் வீரர்கள் என்னை வெல்லட்டும்" என்றான். அதன்பின் அர்ச்சுனனின் பக்கம் திரும்பி ; "நீ எதையெல்லாம் செய்தாயோ அவற்றை உன்னை விடச் சிறப்பாகச் செய்வேன்" என்றான்.

''குரு அழைக்காதவருடன் போட்டியிட நான் தயாரில்லை" என்று கோபத்துடன் கூறினான் அர்ச்சுனன்.

“இங்கு அரசகுமாரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம். நீ எந்தநாட்டரசனின் புத்திரன்" என்று கேட்டார். கிருபாச்சாரியார்.

அதைக்கேட்ட கர்ணன் மௌனியானனான். அவனாற் பேசமுடியவில்லை.

உடனே துரியோதனன் எழுந்து; அவன் தேரோட்டியின் மகன், பெயர் கர்ணன். இவனை இன்று நான் அங்க தேசத்தின் அரசனாக முடி சூட்டுகிறேன்" என்று கூறி முடிசூட்டி வைத்தான்.

தேரோட்டியின் மகன் அங்க தேசத்து அரசனானாலும் அர்ச்சுனனுக்குச் சமனாக மாட்டான். அதனால் கர்ணன் போட்டியில் கலந்துகொள்ள முடியாது" என்றான் வீமன்

சபையில் கலைந்து சென்றது. பெருங்குழப்பமுண்டாயிற்று. அதனால் அது கலைந்து சென்றது.

கரணன பெரும் வரன. அவன் துரோணாச்சாரியார் தம்மிடம் ஆயுதப்பயிற்சிபெற்ற அரசகுமாரர்களின் திறமையை வெளிப்படுத்த வைத்த விழாவுக்கு முன்னார் முன்னார் கர்ணன் பரசுராமரிடம் சென்று அவரிடம் ஆயுதப் பயிற்சி பெற விரும்பினான். அவர் பிராமணர்களைத் தவிர்ந்த வேறு எவருக்கும் பயிற்சியளிப்பதில்லை. அதனால் கர்ணன் தான் பிராமணன் என்று பொய் சொல்லி அவரிடம் ஆயுதப்பயிற்சி பெற்றான். சகல பயிற்சிகளையும் முடித்துப் பெருவீரனாகத் திகழ்ந்த கர்ணனின் திறமையை மெச்சி அவனுக்குப் பிரம்மாஸ்திர மந்திரத்தைக் கற்றுக்கொடுத்தார் பரசுராமர்.

ஒருநாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கொடியவண்டொன்று கர்ணனின் தொடையைக் கடித்தது. அதனால் இரத்தம் பெருகியது. பெரும் வலி எடுத்தது. தூங்கிக் கொண்டிருக்கும் குரு தான் அசைந்தால் எழுந்துவிடுவார் என்பதற்காக அவன் வலியைப் பொருட்படுத்தாது இருந்தான். வெகுநேரம் கழித்து நித்திரை விட்டெழுந்த பாசுராமர் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த கர்ணனைப்பார்த்து; "நீ பிராமணனல்ல. பிராமணனென்றால் இக் கொடிய வலியை நீ தாங்கிக் கொள்ள மாட்டாய். . நீ யார் என்ற உண்மையைச் சொல்" என்றார்.

கர்ணன் ; "நான் பிராமணன் அல்ல தேரோட்டியின் மகன்"

என்றான் நடுநடுங்கியபடி.

பாசுராமருக்குக் கடுமையான கோபம் வந்தது; "நீ பொய் சொல்லிப் பயிற்சி பெற்றது மாபெருங்குற்றம். அதனால் உனக்குத் தேவையான போது பிரமாஸ்த்திர மந்திரத்தை மறக்கக் கடவாய்” என்று சபித்தார். 

அதன் பின் கர்ணன் துரியோதனனின் உயிர் நண்பனானான். அவனை வைத்து அர்ச்சுனனைக் கொல்ல வேண்டும் எனத் திட்டமிட்டான் துரியோதனன்.

தொடரும்....

பாகம் 9 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க

 Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள்



பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன