மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 15 (ஜராசந்தன் அரச சபை)
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

இந்திரப்பிரஸ்த நகரைத் தருமன் நீதியாக ஆண்டுவந்தமையால் மக்கள் எந்தவிதமான குறைகளும் இன்றி வாழ்ந்து வந்தனர். தருமன் ராஜசூர்ய யாகம் நடத்தி அரசர்க்கெல்லாம் அரசனான பேரரசனாக வேண்டுமென்று பெரியவர்கள் முடிவு செய்து அதைத் தருமனுக்கு அறிவித்தனர் . அதைத் தருமன் கிருஷ்ணனுக்குச் சொல்லி ஆலோசனை கேட்டான்.
"தருமா, மகத நாட்டரசனான ஜராசந்தன் எல்லா நாடுகளையும் வென்று அந் நாட்டரசர்களைச் சிறைப்பிடித்து வைத்துள்ளான். அவனது புஜ பலத்திற்கு அஞ்சி ஏனைய நாட்டரசர்கள் அவனைப் பணிந்து திறை செலுத்தி வருகின்றனர். நீ ஜராசந்தனை அழித்து, அவன் சிறைப்பிடித்து வைத்திருக்கும் அரசர்களை விடுதலை செய்தாயானால், நீ ராஜ சூர்ய யாகம் செய்யலாம். கொடுமை செய்வோனை அழிப்பது ராஜநியதி. அதனால் அவனை அழிக்க வேண்டும். ஐராசந்தன் மிகுந்த பல சாலி அவன் சண்டகௌசீகர் என்ற முனிவரின் அருளால் பிறந்த மகாபராக்கிரமசாலி. முனிவரின் வரத்தின்படி அவனது பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் அவனது உடல் இரு கூறாகப்பிரியும் தன்மையானது. அவனைப் படையுடன் சென்று வெல்லமுடியாது. தனியே போருக்களைத்து வெல்லுதல் வேண்டும்" என்றான் கிருஷ்ணன்.
அக்காலத்தில் எந்த ஓர் அரசனானாலும் போருக்கழைத்தால் போர் செய்யவேண்டும் என்ற மரபு இருந்தது. ஒரு நாள் கிருஷ்ணனும் அர்ச்சுனனும் வீமனும் ஜராசந்தனிடஞ் சென்று அவனை யுத்தத்திற்கு அழைத்தனர்.
மதிப்புக்குரிய பொருட்களைக் கண்ணனுக்கு வழங்கி மரியாதை செய்தான்.
கண்ணனுக்கு மரியாதை கொடுத்ததை அரசரில் சிலர் விரும்பவில்லை. எனினும் எதிர்க்கப்பயந்து பேசாதிருந்தனர். ஆனால் சேதி தேசத்து அரசனான சிசு பாலன் அதைப் பகிரங்கமாக எதிர்த்தான்.
"சபையில் எத்தனையோ பலம் மிகுந்த அரசர்கள் இருக்கும் போது மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவனுக்கு மரியாதை கொடுத்துள்ளாய். கண்ணனின் தகப்பனார் வாசுதேவன் அரசனான உக்கிரசேனனது வேலையாள்.
மகான்களும் முனிவர்களும் அரசர்களும் வீற்றிருக்கும் இச் சபையில் அரசரல்லாத ஒருவனைக்கௌரவிப்பது மற்றவர்களை சபையை அவமதிப்பதற்குச் சமனாகும். பாண்டவர்கள் தான் தகுதியறியாது கௌரவித்தால், கண்ணன் எப்படி அதை ஏற்றுக்கொள்வது?' என்று கூறிவிட்டுச் சிசுபாலன் விட்டு வெளியேறினான். அவனோடு பல அரசர்களும் சபையைவிட்டு வெளியேறினர்..
அதன்பின் கண்ணன் மீது தீராத பகை கொண்ட சிசுபாலன் கண்ணனைப் போருக்கழைத்தான். பலநாட்கள் நடைபெற்ற போரில் கண்ணனால் சிசுபாலன் கொல்லப்பட்டான்.
Whats Your Reaction?






