மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 16 ( சூதாட்ட சூழ்ச்சி)
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

ராஜசூர்ய யாகம் பெரும் விமர்சையாக நடத்தப்பட்டுத் தருமன் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகியதை நினைக்கத் துரியோதனனுக்குப் பொறாமை அதிகரித்தது. அதனால் தனது மாமனான சகுனியிடம் சென்றான்.
மாமா, தருமன் பூமியில் இந்திரப்பதவி பெற்றவன் போல மதிக்கப்படுகின்றான். அரசசபையில் கண்ணனைப் பற்றிய
உண்மைகளைக் கூறிய சிசுபாலனைக் கண்ணன் கொன்று விட்டான். அதை எந்த அரசரும் தட்டிக்கேட்கவில்லை. அரசர்கள் பொன்னையும் மணியையும் தருமனின் பாதங்களில் குவிந்து அடிமைகள் போல வணங்குகின்றனர். இதைப் பார்த்த பின் என்னால் உயிர் வாழ முடியவில்லை" என்று துக்கப்பட்டான் துரியோதனன்.
"துரியோதனா, உனது கவலை எனக்குப் புரிகிறது. தற்போதைய நிலையில் பாண்டவர்கள் பெரும்பலசாலிகளாகி விட்டனர். அத்துடன் அவர்களிடம் பலம் மிக்க படையணிகள் பலவும் உண்டு. துருபதன் பலம் பொருந்திய மன்னன். அதனால் பாண்டவர்களைப் போரில் வெல்லக் கூடியவர்கள் எவருமில்லை. அதனால் அவர்களைச் சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும்" என்றான் சகுனி.
அதைக்கேட்டுத் துரியோதனன் மிகவும் மகிழ்ந்தான்; "மாமா, உங்களைத்தான் நான் நம்பியுள்ளேன். பாண்டவர்களது இராச்சியம் முழுவதையும் கைப்பற்றி அவர்களைக் கொல்வதே எனது இலட்சியமாகும்" என்றான் துரியோதனன்.
"துரியோதனா, தருமனுக்குச் சூதாட்டத்தில் விருப்பம் அதிகமுண்டு. ஆனால் அவன் சூதாடுவதில்லை. அரசர்கள் பொழுதுபோக்கிற்காகச் சூதாடுவது வழக்கம். நாம் தருமனைச் சூதாட அழைத்துத் தந்திரமாக அவனது நாட்டையும் பொருட்களையும் பறிப்போம். உனக்காக நான் சூதாடுகின்றேன்'' என்றான் சகுனி.
அதன்பின் துரியோதனன் திருதராட்டினனிடஞ் சென்றான். மகனிடம் பேரன்பு கொண்டிருந்த திருதராட்டினன் அவனை ஆரத் தழுவி வரவேற்றான்.
"தந்தையே, தாங்கள் என்மீது அளவில்லாத அன்பு அத்துடன் எல்லா வசதிகளையும் செய்து கொண்டுள்ளீர்கள். தந்துள்ளீர்கள். இருப்பினும் அன்று ராஜசூர்ய யாகத்தின் போதும் அதன் பின்பும் தருமனுக்குக் கொடுக்கப்பட்ட திரவியங்களையும் மதிப்பு மரியாதைகளையும் என்னிடத்தில் காட்டுபவர் யாருமில்லை. பாண்டவர்கள் சகல வழிகளாலும் உயர்வடைந்து விட்டனர். நாம் அடிமைகளாகிவிட்டோம். அன்று யாகத்திற்கு வந்த எவரும் எம்மை மதிக்கவில்லை. அது எனக்குப்பெரும் அவமானமாக உள்ளது" என்று துரியோதனன் விம்மி விம்மி அழுதான்.
"மகனே, அவர்கள் உனது சகோரதரர்கள் தருமன் நீதி நியாயப்படி நடக்கும் உத்தமன். அவனுக்கு வரும் மதிப்பு மரியாதைகள் யாவும் உன்னையும், உனது சகோதரர்களையும் சாரும். எனவே கவலை கொள்ளாதே" என்றான் திருதராட்டினன்.
"தந்தையே, எதைச் சொன்னாலும் எனது ஆறுதலடைய மனம் மறுக்கிறது. பாண்டவர்களைப்போல நாமும் பேரோடும் புகழோடும் வாழ வேண்டும். அதற்கான வழிவகைகளை எனது மாமானார் சகுனி திட்டமிட்டிருக்கிறார். அதைத்தாங்கள் அனுமதிக்க வேண்டும்" என்றான் துரியோதனன்.
"மன்னா, அரசர்கள் தர்மத்தை நிலை நிறுத்தவும் போர் செய்வார்கள். திரவியங்களைத் திரவியங்களைத் தேடவும் போர் போர் செய்வார்கள். போரால் பெரும் தீமைகள் தான் உண்டாகும். எனவே தங்களுக்கு விருப்பமில்லாத போரைச் செய்யாது பாண்டவர்களை வெல்ல ஒரு வழியுள்ளது. அதைச் செய்வதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்." என்றான் சகுனி.
திருதராட்டினனது மன உறுதி தளர்ந்தது. பாண்டவர்களை விடத் தனது மகனான துரியோதனன் பேரும் துரியோதனன் பேரும் புகழும் பெற்று வாழவேண்டும் என்ற எண்ணம் அவனது மனதில் உருவானது. "அதற்கு நான் என்ன செய்தல் வேண்டும்?' என்று கேட்டான் திருதராட்டினன்.
"தருமனைச் சூதாடுவதற்கு வா என்று தாங்கள் அழைத்தாற் போதும். மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன்" என்றான் சகுனி.
அந்தத் திட்டம் திருதராட்டினனுக்குப் பிடிக்கவில்லை; ""சூதாடுவது பாவம். அப்பாவம் எமது வம்சத்திற்குக் கேட்டை விளைவிக்கும். நான் எதைச் செய்தாலும் விதுரனைக் கேளாது செய்வதில்லை. அவனிடம் கேட்டுப் பார்க்கிறேன்" என்றான்.
விதுரன் தர்மவான். அவன் நீதிக்குப் பிறம்பான செயல்களைச் செய்ய விடமாட்டான் என்று தெரிந்திருந்த சகுனி, விதுரன் இதை அனுமதிக்க மாட்டான். அத்துடன் "மன்னா, விதுரன் அவனுக்குத் துரியோதனனைப் பிடிக்காது. அவன் பாண்டவர்களின் மேலுள்ள விசுவாசத்தால் அவர்களுக்கு நன்மையானவற்றையே செய்ய விரும்புவான்." என்றான்.
அதைக் கேட்ட பின்பும் திருதராட்டினனது மனம் சமாதானமடையவில்லை. சூதாடுவது தர்மத்திற்கு விரோதமானது என்றே எண்ணினான். ஆனால் துரியோதனனும் சகுனியும் விடாப்படியாக வற்புறுத்தியமையால் திருதராட்டினன் விதுரனை அழைத்து; "சூதாடுவது பாவம் என்று எனக்குத் தெரியும். துரியோதனனும் சகுனியும் சேர்ந்து பாண்டவர்களுடன் சூதாட விரும்புகின்றனர். எதைச்சொல்லியும் கேட்கிறார்கள் இல்லை. விதிஎதை எழுதி இருக்கோ அதன்படி நடக்கட்டும். நீ இந்திரப்பிரஸ்த நகரத்திற்குச் சென்று தருமனிடம் நான் சூதாட அழைத்தேன் என்று கூறி அவர்களை அழைத்து வா' என்று கட்டளையிட்டான் திருதராட்டினன்.
Whats Your Reaction?






