மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 12(பகாசூரன் வதம் )
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

பாண்டவர்கள் ஏகசக்ர நகரத்தில் பிராமண வேடம் பூண்டு வசித்து வந்தனர். ஒருநாள் அவ்வீட்டில் பெரும் அழுகுரல் கேட்டது. ஏதோ துக்க சம்ப வம் அவ்வீட்டில் நிகழ்ந்து விட்டதென்று உணர்ந்த குந்திதேவியும், வீமனும் அழுகுரல் கேட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பிராமணனும் அவனது மனைவியும் பிள்ளைகள் இருவரும் பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தனர். அதைக் கண்டு குந்தி தேவி அவர்களின் அருகே சென்று; “தாயே, ஏன் இவ்வாறு பெருங்குரலெடுத்து அழுகிறீர்கள்? நாம் துன்ப த்தில் வந்தபோது எமது துன்ப த்தைப்போக்கிய உங்களை எம் உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம். தயவு செய்து உங்களுக்கேற்ப ட்ட துன்ப த்தை எமக்குச் சொன்னீர்களானால் எம்மால் முடிந்த வரை உதவுவோம்”. என்றாள் குந்திதேவி. “ஐயோ, தாயே உங்களால் அல்ல வேறு எவராலுமே எமக்கேற்ப ட்ட துன்ப த்தைத் தீர்க்கமுடியாது. எமது நாட்டின் அருகே உள்ள காட்டில் உள்ள குகையில் பகாசுரன் என்றொரு கொடிய அரக்கன் இருக்கிறான். அவன் நெடுங்காலத்திற்கு முன்பு ஊரில் நுழைந்து மக்களைக் கொன்று தின்று வந்தான். அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத இவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ; “பகாசூரா, நீ நினைத்தபடி ஊருக்குள் நுழைந்து மக்களை வயது வேறுபாடின்றிக் கொன்று குவித்து விட்டு ஓரிரு உடல்களை எடுத்து ச் சென்று உண்கிறாய். இனி அப்ப டிச்செய்யாதே. நாம் ஒரு ஒழுங்கு விதிப்ப டி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து ம் உனக்கு வேண்டியளவு மாமிசமும் , சோறும், தயிரும், பாலும், கள்ளும் பாத்திரங்களில் வைத்து ஒருவண்டியில் ஏற்றி இரு காளைகளை அவ்வண்டியில் பூட்டி ஒருவண்டி ஓட்டு பவனையும் வாரத்திற்கு ஒருமுறை அனுப்புகிறோம். நீ இருந்த இடத்திலிருந்து கொண்டு அவற்றை உண்”. என்று இரந்து வேண்டினார். அதற்கு அக் கொடியவன் உடன்ப ட்டான். அக் கொடிய அரக்கன் மகாபராக்கிரமசாலி. அவனை அரசனாலும் தண்டிக்க முடியவில்லை. இன்று நாம் உணவு அனுப்ப வேண்டிய நாள். அவனுக்கு உணவைக் கொண்டு போவது என்றாள். யார் என்று முடிவுகட்டமுடியாமல் அழுகின்றோம்"
''அம்மா, பயங்கொள்ளாதீர்கள். எனக்கு ஐந்து புத்திரர்கள் உள்ளனர். நீங்கள் எமக்கு உதவியதற்காக எனது புத்திரர்களில் ஒருவனை உணவு கொண்டு செல்ல அனுமதிக்கின்றேன்" என்றாள் குந்தி தேவி.
"ஐயையோ, விருந்தினராக வந்த உங்களைப் பலியிட நாம் விரும்பவில்லை. அது பாவம். அப்பாவம் எம் குலத்தைத் மகா தாக்கும்" என்றான் பிராமணன்.
"பிராமணரே, பயப்படாதீர்கள், என் மகன் பெரும்பலசாலி. அவனை இப்பூவுலகில் யாராலும் வெல்ல முடியாது. அவன் அக் கொடிய அரக்கனை அழிப்பான். அதனால் பயங்கொள்ளாதீர்கள்." என்றாள் குந்திதேவி.
அதன் பின் அந்தநகர மக்கள் மாமிசத்தையும் சோற்றையும் பலகிடாரங்களில் நிரப்பி வண்டியில் ஏற்றினார்கள். பல குடங்கள் நிறையப் பாலும் தயிரும் ஏற்றப்பட்டன. வண்டியில் இரண்டு கறுப்பு நிறக்கொழுத்த காளைகள் பூட்டப்பட்டன. அவ்வண்டியில் வீமன் ஏறிப்பகாசுரனது இருப்பிடத்திற்குச் சென்றான்.
பகாசுரனது குகை வாசலில் எலும்புகளும் வெற்றுக்கிடாரங்களும் காணப்பட்டன. அதைச் சுற்றிக் கழுகுகள் பறந்துகொண்டிருந்தன. அப்பிரதேசம் முழுவதும் துர்நாற்றம் வீசியது.
வண்டிலை நிறுத்திய வீமன் சோற்றுக்கிடாரங்களை இறக்கி அதனுள் கறிகளையும் தயிரையும் விட்டு உண்ணத் தொடங்கினான்.
அதைக்கண்டு கோபம் கொண்ட பகாசுரன் வீமன் இருக்குமிடத்திற்கு வந்து அவனது முதுகில் ஓங்கிக் குத்தினான். வீமன் அதைக் கவனிக்காதவன் போல உணவை உண்டு கொண்டிருந்தான். கோபம் கொண்ட அசுரன் மீண்டும் மீண்டும் வீமனைத் தாக்கினான். அதற்கு அஞ்சாத வீமன் உணவு முழுவதையும் உண்டு முடித்து விட்டுப் பால் முழுவதையும் குடித்தான். பல நாட்களுக்குப் பின் அன்று தான் அவனுக்கு வயிறு நிறைய உணவு கிடைத்தது.
வீமன் உண்ண உண்ணப் பகாசுரன் தாக்கியபோதும் வீமன் பலவீனமடையவில்லை. அதனால் பகாசுரன் தன் பலம் முழுவதையும் திரட்டித் தாக்கினான். வீமன் உணவை உண்ட பின் எழுந்து அசுரனைத் தூக்கித் தரையில் மோதினான். அதுபோலப் பல முறை அசுரனைத் தூக்கித் தரையில் மோதினான். அதனால் பகாசுரன் மரணமடைந்தான். பகாசுரனின் பிணத்தை இழுத்து வந்து நகரத்தின் கோபுர வாசலில் போட்டுவிட்டு வீமன் தான் வசித்து வந்த பிராமணனின் வீட்டை அடைந்தான். பகாசுரன் இறந்த செய்தியைக் கேட்ட நாட்டு மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வந்து மகிழ்ச்சியாரவாரம் செய்து வீமனுக்கும் தாய்க்கும் சகோதரர்களுக்கும் நன்றி கூறினார்.
Whats Your Reaction?






