மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 03
சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!
பாகம் 3
சத்திய வதியின் மகனான சித்திராங்கதன் காந்தவர்வன் ஒருவனால் கொல்லப்பட்டதால் அவனது தம்பி விசித்திரவீரியனுக்கு முடிசூட்டப்பட்டது.
விசித்திரவீரியனுக்குத் திருமண வயது வந்தது. காசி ராஜன் தனது மூன்று கன்னிப்பெண்களுக்கும் சுயம்வரம் நடாத்த நாள்க்குறித்தான். இதை அறிந்த பீஷ்மர் தனது தம்பிக்குப் பெண்பார்க்கக் காசிராஜன் நடத்தும் சுயம்வரமண்டபத்திற்குச் சென்றார். அங்கு பல தேசத்து அரசகுமாரர்கள் கூடி இருந்தனர்.
பீஷ்மர் சுயம்வரம் நடைபெறும் மண்டபத்தை அடைந்ததும் அவரைக்கண்ட ராஜகுமாரர்கள் பயந்தனர். அவரை வெல்லமுடியாதென்று பலர் விலகிச் சென்றனர். பீஷ்மர் தனது தம்பிக்குப் பெண் பார்க்க வந்திருக்கிறார் என்ற விடயம் யாருக்கும் தெரியாது. தான் மணம் செய்யவே சுயம்வர மண்டபத்துக்கு வந்துள்ளார் என்று எண்ணினர்.
அதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது, 'பிரம்மச்சரியாகவே காலம் முழுவதும் வாழ்வேன் என்று சத்தியம் செய்து விட்டு இவ் வயோதிப வயதிலா பீஷ்மருக்குத் திருமண ஆசை வந்ததது' என்று பலரும் பரிகசித்தனர்.
அதனால் கோபம் கொண்ட பீஷ்மர் அங்கு வந்திருந்த அனைத்து அரசர்களையும் போருக்கழைத்துப் போரிட்டார்.
அனைவரும் தோற்று ஓடினர். அதனால் பீஷ்மர் மூன்று பெண்களையும் தனது தேரில் ஏற்றிக் அஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டார். கொண்டு சௌடாள தேசத்து அரசன் சால்வன், காசிராஜனின் மூத்த மகளான அம்பையை விரும்பியிருந்தான். அம்பையும் அவனை விரும்பினாள். அதனால் சால்வன் பீஷ்மரோடு கடும் யுத்தம் புரிந்தான். இறுதியில் அவன் தோற்றமையால் பீஷ்மர் அவனைக் கொல்ல நினைத்தார். காசி ராஜனின் புத்திரிகள் மூவரும் அவனைக்கொல்ல வேண்டாமென்றும், அவனுக்கு அம்பையைத் திருமணம் செய்து கொடுக்கும் படியும் இரந்தனர். அதற்குப் பீஷ்மர் உடன்பட்டார். அம்பையின் சகோதரிகளான அம்பிகை, அம்பாலிகை என்ற இருவரையும் விசித்திரவீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
அம்பை தனது காதலனான சால்வவனிடம் சென்றாள்; அரசநியதிப் படி நீ பீஷ்மரின் மனைவியானவள். அதனால் உன்னை நான் ஏற்கமாட்டேன்" என்று கூறினான் சால்வன்.
இதனால் மனவருத்தமடைந்த அம்பை, பீஷ்மரிடஞ் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தினாள்.
பீஷ்மர் தனது சத்திய வார்த்தையை எடுத்துக்கூறி அவளைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
அதனால் பெருந்துன்பப்பட்ட அம்பை பீஷ்மரிடம் நியாயம் கேட்குமாறு முனிவர்களையும் ரிஷிகளையும் அரசர்களையும் வேண்டினாள். அவர்கள் பீஷ்மருக்குப் பயந்து நியாயம் கேட்கவில்லை.
அதன்பின் அம்பை முருகனை நினைத்துப் பல காலம் தவஞ் செய்தாள். அவளின் தவத்தின் வலிமையை உணர்ந்த முருகப்பெருமான் அவளுக்கு ஒரு வாடாத தாமரைப்பூமாலையைக் கொடுத்து, "இந்த மாலையை அணிந்து கொண்டு பீஷ்மருடன் போர் செய்பவன் பீஷ்மரைக் கொல்வான்." என்று கூறினார்.
அம்பை அந்த மாலையுடன் எல்லா அரசர்களையும் சந்தித்துத் தனது கருத்தைச் சொன்னாள். யாரும் அதைக்கேட்டு நிறைவேற்ற முன்வரவில்லை. இறுதியாக ஒரு முனிவர்; "பெண்னே, உனக்கு நேர்ந்த நிலையைப்பற்றிப் பரசு ராமரிடம் சென்று சொல். அவர்தான் உனக்கு நீதி வழங்குவார்'' என்றார்.
அம்பைக்கு நடந்த அநீதியைக் கேட்டுக் கொதித்ததெழுந்த பரசுராமர் பீஷ்மருடன் போர் செய்து தோற்றுப்போனார். அதனால் அவரால் பீஷ்மரைத் தண்டிக்க முடியவில்லை.
அம்பைமிக்க வருத்தத்துடன் இமய மலைக்குச் சென்று சிவனை நினைத்துத் தவம் செய்தாள். சிவன் அவள் முன்தோன்றி;"அம்பையே, நீ இன்னொரு பிறப்பெடுப்பாய். அதில் நீ பீஷ்மரைக் கொல்வாய்' என்றார். உடனே அம்பை தீமூட்டி அதனுள் விழுந்து உயிர் துறந்தாள்
சிவனின் வரப்படி அம்பை துருபதராஜனின் மகளாகப் பிறந்தாள். அவள் வளர்ந்த பின், முன்பு துருபதராஜனின் அரண்மனைக்கு வந்து முருகன் கொடுத்த பூமாலையைத் துருபதராஜனிடம் கொடுத்துப் பீஷ்மரைக் கொல்லும்படி வேண்ட அவன் மறுத்துவிட்டான். அதனால் கோபம் கொண்ட அம்பை அம்மாலையைத் துருபதனது வாசலில் வீசிவிட்டுச் சென்றாள். அம்மாலை அவள் வந்து பார்த்தபோது அது வாடாமல் இருந்தது. அதனால் அதை எடுத்துத் தான் அணிந்து கொண்டாள்.
அதைக்கண்டு துருபதன் பயங்கொண்டான். பீஷ்மர் தன்னைக்கொன்று விடுவார் எனப் பயந்தான். அதனால் அம்பை வனத்திற்குச் சென்று தவம் செய்து ஆண் தன்மையைப் பெற்றாள். பீஷ்மர் சிறைப்பிடித்துக் கொண்டுவந்த அம்பிகை
அம்பாலிகை என்ற இருபெண்களையும் விசித்திர வீரியன் திருமணம் செய்து கொண்டான். அம்பிகைக்குத் திருதராட்டினனும் அம்பாலிகைக்குப் பாண்டு என்ற மகனும் பிறந்தனர். திருதராட்டினன் காந்தாரியை மணந்து நூறு நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். பாண்டு குந்தியை மணந்து ஐவரைப் பெற்றெடுத்தாள்.
பாகம் 3 பதிவேற்றப்பட்டுள்ளது அதனை படிக்க
Click to See more பட்டனை கிளிக் செய்யுங்கள்
தொடரும்...
பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.