மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 17( சூதாட்ட களம்)

சிறுவர்கள் எளிதாக வாசித்து புரியக்கூடிய வகையில் முழு மகாபாரதமும் கதை வடிவில்...!

Oct 1, 2022 - 23:48
 0  190
மகாபாரதம் கதை வடிவில் பாகம் - 17( சூதாட்ட களம்)

திருதராட்டினனின் கட்டளைப்படி விதுரன் இந்திரப் பிரஸ்த நகரத்திற்கு வந்து தருமனைச் சந்தித்தான்.

விதுரனை ஆரத்தழுவி அவனது

தருமன் சுகநலன்களையும் திருதராட்டினனதும் அவனது பிள்ளைகளினதும் சுக நலன்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டான். விதுரனும் குந்தியினதும், தருமனது சகோதரர்களினதும், திரௌபதியினதும் சுகநலன்களை விசாரித்துத் தெரிந்து கொண்டான்.

அதன் பின் விதுரன் தான் வந்தவிடயத்தைக் கூறினான்; "மகனே, உனது பெரிய தந்தையார் பெரியதொரு விளையாட்டு மண்டபத்தைக் கட்டியுள்ளார். அது நீங்கள் கட்டிய மண்டபத்தை விடப் பெரியது, அழகானது. அதைப்பார்த்து விட்டு அம் மண்டபத்தில் தமது பிள்ளைகளோடு நீ சூதாட வேண்டுமென அவர் ஆசைப்படுகிறார். அதனால் உடனே புறப்படத் தயாராகு" என்றான் விதுரன். உனது சகோதரர்களுடன்

"சூதாடுவது அரசரின் பொழுதுபோக்குகளில் ஒன்றானாலும், அது தீயது" என்றான் தருமன்; "உண்மைதான் இதைப்பற்றி விபரமாக நான் எடுத்துச் சொல்லியும் திருதராட்டினன் விதுரன்.

ஒத்துக்கொள்வில்லை. பிடிவாதமாக இருக்கிறார்.'' என்றான்

பெரியவர்கள், குரு, வயதில் மூத்தவர்கள் ஆகியோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்தினாபுரத்திற்குப் பாண்டவர்கள் வந்தனர்.

மண்டபம் மிகவும் அழகாகக் கட்டப்பட்டிருந்தது. அதன் ரசித்தபடி பாண்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட அழகை ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

சூதாட்டத்தைத் துரியோதனன் தொடக்கி வைக்க

அவனுக்காகச் சகுனி ஆடினான். மண்டபத்தில் துரோணரும்

கிருபரும் பீஷ்மரும் விதுரனும் திருதராட்டினனும் இருந்தனர். முதலில் தருமன் இரத்தினங்களைப் பணயமாக வைத்தான். அதன் பின் தேர்களும் குதிரைகளும் வைக்கப்பட்டன. அவற்றைத் தருமன் இழந்தான். அதன்பின் பசுக்கள் நகரங்கள் தேசங்கள் படைகள் மக்கள் என வைத்த தருமன் அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக இழந்தான்.

தன்னுடைய உடைமைகள் முழுவதையும் இழந்த தருமன் தனது சகோதரர்களைப் பணயமாக வைத்து ஆடி அவர்களையும் இழந்தான். இறுதியாகத் தருமன் தன்னைப் பணயமாக வைத்துத் தன்னையும் இழந்தான்.

"இனிப்பணயமாக வைக்க உனது மனைவி திரௌபதையைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனால் அவளை வைத்து ஆடி உன்னை மீட்டுக்கொள்."என்றான் சகுனி. அதன்படி தருமன் திரௌபதியைப் பணயமாக வைத்து ஆடி அவளையும் இழந்தான்.

அப்போது துரியோதனன் எழுந்து "எமக்கு அடிமையாக்கப்பட்ட  திரௌபதையைச் சபைக்கு அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டான்".

பலர் திரௌபதியை அழைக்கச் சென்றபோது திரௌபதை துயரம் காரணமாகச் சபைக்கு வரவில்லை. அதனால் கோபம் கொண்ட துரியோதனன் தனது தம்பியான துச்சாதனனைப் பார்த்து; "என் அன்பான தம்பியே, நீ சென்று திரௌபதையை இழுத்துவா' என்றான்.

துச்சாதனன் அந்தப்புரத்திற்குச்சென்று அளவிடமுடியாத துக்கத்தால் அழுது புலம்பிக் கொண்டிருந்த திரௌபதையின் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சபையின் நடுவே நிறுத்தினான்.

யாரும் அற்ற அனாதை போலச் சபையில் கூனிக் குறுகி நின்ற திரௌபதி, தன்னைக் காப்பாற்றும்படி சபையில் உள்ள பெரியவர்களை இரந்தாள். யாரும் எதுவும் பேசவில்லை.

அதனால் மிக்க துயரமடைந்த  திருதராட்டினனது புத்திரர்களில்  ஒருவனான விகர்ணன் எழுந்து; "சபையில் உள்ள பெரியவர்களே, இந்த அபலைப்பெண்ணைக் காப்பாற்றுங்கள். சபையில் பலரின் முன்நிலையில் ஒரு அப்பாவிப் பெண்ணைத் துன்புறுத்துவது பாவம்" என்றான்.

அப்போது கர்ணன் எழுந்து; "சிறுவனாகிய விகர்ணனுக்கு இதைப்பற்றிப் பேச அறிவுபோதாது. அதனால் சபையோர் அதை ஏற்கக் கூடாது. இவர்கள் அடிமைகள். அதனால் இவர்கள் அணிந்துள்ள அரச உடைகளைக் களைந்து விடு துச்சாதனா" என்றான்.

அதைக்கேட்ட பாண்டவர்கள் தமது உடைகளைக் களைந்து சபையில் போட்டனர். திரௌபதி அரச உடை தரித்திருந்தாள். துச்சதன் அவளது சேலையைப் பிடித்து இழுத்தான்.

அதை எதிர்பாராத சபையினர் திகைத்தனர். திரௌபதி கலக்கமின்றி கடவுள் தான் இனித்துணையென நினைத்து; "கண்ணா, என்னைக் காப்பாற்று" என வேண்டினாள். உடனே திரௌபதியின் சேலை இழுக்க இழுக்க நீண்டு கொண்டே போனது. சபையில் அவளது சேலை மலைபோலக் குவிந்தது. துச்சாதனன் களைத்துப்போனான். அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. அதனால் தரையில் அமர்ந்தான்.

அப்போது கோபத்துடன் வீமன் எழுந்து; "துச்சாதனனைக் அவனது ரத்தத்தைத் திரௌபதியின் கூந்தலில் கொன்று தடவுவேன்" எனச் சத்தியம் செய்தான்.

"துச்சாதனைக் கொன்றபின்பு தான் எனது முடிப்பேன்” எனத் திரௌபதியும் சபதம் செய்தாள். கூந்தலை

சூதாட்டத்திலே தோற்பவர்கள் பன்னிரண்டு வருடம் காட்டில் வாழவேண்டும். அத்துடன் ஒருவருடம் யாராலும் இனங்காணப்படாது மறைந்து வாழ வேண்டும் என்ற நிபந்தனைப் படி பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றனர்.

..... தொடரும்.....

பின்குறிப்பு:- சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வகையில் மிகவும் எளிய வடிவில் முழு மகாபாரதமும் சுருக்கப்பட்டு இங்கே எழுதப்படுகிறது.

உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow