செவ்வானம் நானே நீ அவந்திகையே..-7 (தொடர்கதை)
காதல் தொடர்கதை

ஐயோ அம்மா என் காலு போச்சே..என்ற கதறல் கேட்டு அனைவரும் அறையில் இருந்து ஓடி வந்தார்கள்.அங்கே மாடி படிக்கட்டில் இருந்து உருண்டு பிரண்டு சர்க்கஸ் செய்து காலை உடைத்து கொண்டு கிடந்தாள் சாரதா.
மாமியார் காரி அடிப்பட்டு கிடந்ததை கண்டு கொள்ளாமல் ஒரு ஓரமாய் நின்று டிக்டாக் செய்து கொண்டிருந்தாள் அவந்திகா.
ஐயோ..அம்மா முடியலையே...வலிக்கிதே சாரதா கத்திக் கொண்டிருக்க மாடியில் இருந்து இறங்கி வந்தான் வேந்தன்.
அம்மா என்னாச்சு எப்படி கீழ விழுந்திங்க என்றபடி வந்தவன் ஹாலில் டிக் டாக் செய்து கொண்டிருந்த மனைவியின் மீது கொலை வெறியே வந்தது.
ஐயோ முடியலடா முதல்ல ஹாஸ்பிடல் போகலாம் தூக்குடா என அழுது கொண்டிருந்த சாரதாவை வேந்தன் தூக்கி கொள்ள குமரன் காரை ஸ்டார்ட் செய்தான்.
செல்லும் வழியெங்கும் சாரதாவின் வாய் ஓயவில்லை டேய் வேந்தா அவள முதல்ல அத்து விடு அவ வந்ததுல இருந்து தான் எனக்கு இப்படியெல்லாம் நடக்குது தாலி கட்டுன மறு நிமிஷமே பிபி கூடுனுச்சு அடுத்து காஃபில எலி மருந்த போட்டு கொடுத்தா இப்போ படியில இருந்து உருட்டி விட்டுட்டா என புலம்பி கொண்டே வந்தாள் சாரதா.
என்னது அந்த பொண்ணு தான் உங்கள தள்ளி விட்டாளா அம்மா குமரன் கேட்டு வைக்க.ஆமாண்டா என்ன பசங்க மாதிரி டவுசர் சட்டை போட்டுகிட்டு இருக்க ஒழுங்கா குடும்ப பொண்ணா புடவை கட்டலாம் தானேன்னு தான்டா கேட்டேன் அதுக்கு அவ நீ என்ன தாய் கெழவி எனக்கு ஆர்டர் போடுறனு பசக்குனு புடிச்சி தள்ளி விட்டுட்டா என்று அழுது வடித்தவளை ஹாஸ்பிடலில் கொண்டு வந்து சேர்ந்தார்கள் அண்ணனும் தம்பியும்.
அடுத்து சில நிமிடங்களில் மாதவனும் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்து தங்கைக்கு ஒத்து ஊதி கொண்டு இருந்தார் அவந்திகாவை வீட்டை விட்டு அனுப்ப கூறி.
எதுவும் கருத்தில் கொள்ளாமல் நின்றிருந்த வேந்தனை கண்ணை காட்டினாள் சாரதா மாதவனிடம்.அவர் நான் பார்த்து கொள்கிறேன் எனும் விதமாய் கண்ணை மூடி திறந்தான்.
டாக்டர் வந்து பார்த்து விட்டு காலில் எலும்பு முறிவு நடக்கவே முடியாது என்று பெரிய கட்டாய் போட்டு விட்டு சக்கர நாற்காலியும் கொடுத்து விட்டு போக நெஞ்சில் அடித்து கொண்டு அழுதாள் சாரதா.
ஐயோ ஐயோ பாதகத்தி இப்புடி பண்ணிப்புட்டாளே நல்லது சொன்னதுக்கு போய் இப்படி என் காலை உடைச்சிட்டாளே நல்லதுக்கு காலமே இல்ல போல என மாரில் அடித்து கொண்டு அழுது அன்னையை ஆராய்ச்சி பார்வை பார்த்த வேந்தன் அவளை அள்ளி காரில் போட்டு கொண்டு வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்கு வந்தவன் அழைத்தது இன்னும் டிக்டாக்கை விட்டு வெளியே வராது பொண்டாட்டி காரியை தான்.
இன்று பெரிய சம்பவம் இருக்க போகிறது என்று மாதவனும் சாரதாவும் ஆர்வமாய் காத்து கொண்டிருந்தார்கள்.
ஏய் ராங்கி இங்கே வாடி.. வேந்தன் அழைக்க சொல்லுங்க மாமா குட்டி என்ன இந்த நேரத்தில கூப்பிடுறிங்க என்ற படியே வந்து நின்றாள் அக்மார்க் அராத்தி.
நீ தான் அம்மாவ மாடி படில இருந்து தள்ளி விட்டியா..??பாருடா நா ஏன் இந்த தாய் கெழவிய தள்ளி விடபோறேன்.தள்ளிவிட நெனச்சிருந்தா மாடி படில இருந்து இல்ல மாடில இருந்தே தள்ளி விட்ருப்பேன் என கண்களை உருட்டினாள் வேந்தனின் மனைவியானவள்.
கேட்டுக்கிட்டிங்கல்ல அவ தள்ளி விடலையாம் எல்லாரும் போய் வேலைய பாருங்க என வேந்தன் சாதரணமாய் சொல்ல முகம் கறுத்து போனது மாதவனுக்கும் சாரதாவுக்கும்.
அப்போ அவ சொல்றத நம்புவ அம்மா சொல்றத நம்ப மாட்டியா கண்ணா நீலி கண்ணீர் வடித்தாள் சாரதா.வேந்தன் அமைதியாய் சாரதாவை பார்க்க ஒரு துணியை எடுத்த அவந்திகாவோ சத்தமில்லாமல் அதை சுற்றி சாரதா மீது போட்டு விட்டு ஐயோ... பாம்பு....பாம்பு என கத்த..
எது பாம்பா ஐயயோ பாம்பு என வீல் சாரில் இருந்த சாரதா அதிர்ச்சியில் எழுந்து அங்கும் இங்குமாய் காலை உதறித் கொண்டு குதித்து கொண்டிருந்தாள்.
வேந்தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு சாரதாவை பார்த்திருக்க நிர்மலமான அவன் பார்வை கண்டு சாரதா நடுங்கி போனாள்.
அது எப்படி மாமா குட்டி கால் நடக்க முடியலனு தானே வீல் சார் கொடுத்தாங்க உங்கம்மா என்னா நடு வீட்டில நின்னே கதகளி ஆடிட்டு இருக்கு..நா கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்ல கால் சரியாகிடுச்சோ சந்தேகமாய் கேட்டு வைத்தாள்.
ஆமா ஆமா அவ கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்ல சரியா போய்டுச்சு சமாலித்து வைத்த சாரதா நொண்டி கொண்டே வில் சாரை நோக்கி வர.
மீண்டும் அது எப்படி மாமா குட்டி அதிர்ச்சில முறிஞ்சு போன எலும்பு ஒட்டுக்குமா என்ன..
சிலருக்கு மட்டும் அப்படி நடக்கும் போல.. மெடிக்கல் மிராக்கல்..அழுத்தமாய் சொன்னவன் அதியை அழைத்து கொண்டு சென்று விட்டான்.
இன்னைக்கு வேந்தனோட நடவடிக்கை எல்லாம் வித்தியாசமா இருக்கு தங்கச்சி இப்படியே விட்டா அப்பறம் சொத்து கைய விட்டு போய்டும் பார்த்துக்க எச்சரித்து விட்டு சென்றான் மாதவன்.
எதையோ எண்ணி கணக்கு போட்ட சாரதா வன்மம் தோய்ந்த விழிகளுடன் யாருக்கோ அழைத்து சில நிமிடங்கள் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள்.
கபோர்டுக்குள் தலையை நுழைத்து தன் உடைகளை தேடி கொண்டிருந்தாள் அவந்திகா. காலையில் அங்கேயிருந்த அவளின் சட்டைகளை இப்போது காணவில்லை.
கபோர்டுக்குள்ள என்ன எலி புடிக்கிறியா சர்ட் பட்டனை போட்டுக்கொண்டு நக்கலாக கேட்டவனை நுனி மூக்கு சிவக்க முறைத்து பார்த்தவள்..எங்கே ஒளிச்சு வச்சிருக்கா என்றாள்.
நா என்ன ஒளிச்சு வச்சிருக்கேன் எதுவா இருந்தாலும் தெளிவா கேட்க மாட்டியா.
நடிக்காத நீ தான்டா என் டிரெஸ்ஸெல்லாம் ஒளிச்சு வச்சிருக்க மரியாதையா குடுத்துரு இல்ல உன்னோட சர்ட்ட தான் போட்டுக்கிட்டு ஆஃபிஸ் வருவேன்.
சரி நானே ஒளிச்சு வச்சதாவே இருக்கட்டும் எங்கே தைரியம் இருந்தா என் டிரஸ்ஸ எடுத்து போடு பார்ப்போம் கைகளை கட்டிக்கொண்டு தலையை சாய்த்து இதழ் வளைத்து கிக்கான மேனரிசத்தோடு உரைத்தவனை காண வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்தது அவந்திகாவிற்கு.
வெளியே விரைப்பாக நின்ற நமது சிங்கமோ போட மாட்டேன்னு நினைக்கிறியா இருடா வாரேன் என்றவள் கபோர்ட்டின் மறுபக்க கதவை திறந்து பார்க்க அங்கே வேந்தன் அவந்திகாவிற்காக வாங்கி வந்திருந்த புடவை சுடிதாரை தவிர்த்து வேறு எதுவும் இருக்கவில்லை.
ஐயோ பாவம் இப்படியாகி போச்சே..இப்போ வேற வழியில்ல புடவை தான் கட்டியாகனும் கையை விரித்தான் வேந்தன்.
ஒன்னும் தேவ இல்ல நா ஆஃபிஸ்க்கு வரல போ..மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டாள் சேட்டைகாரி.
ஓக்கே பிரச்சினை இல்ல அவந்திகாவால எடுத்துக்கிட்ட வேலைய முடிக்க முடியலனு வேலையை பாவனா கிட்டயே கொடுக்குறேன்.
நா எப்போ சொன்னேன் முடிக்க முடியலனு.என் திறமைய உனக்கு நிரூபிக்காம நா ஓய மாட்டேன் பொங்கி கொண்டு வந்தாள் பொண்டாட்டி காரி.
அப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு.. வேந்தன் கேட்க அவனை முறைத்து வைத்தவள் அவன் வாங்கி வைத்திருந்த ஒரு சுடிதாரை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைய செல்லமாய் சிரித்து கொண்டான் வேந்தன்.
குளியலறை கதவு திறக்க பட பார்வையை அந்த பக்கம் திருப்பிய வேந்தன் இமைக்க மறந்து போனான் மஞ்சள் வர்ண சுடிதாரில் மெழுகு சிலையென வந்தவளை வஞ்சனை இன்றி சைட் அடித்து கொண்டவன்.
வளைந்து நெளிந்து அன்ன நடை நடந்து வந்தவளை இழுத்து கண்ணாடியின் முன்பு அமர வைத்தவன் விரிந்து கிடந்த அவளது கூந்தலை இருபக்கமும் கொஞ்சமாக எடுத்து கிளிப் செய்தவன் வாங்கி வைத்திருந்த மல்லிகை சரத்தை சூடியும் விட்டான். நெற்றியில் சிறிய ஸ்டிக்கர் பொட்டும் வைத்து விட்டவன் நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து விட அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.
இப்போ தான் பொண்ணு மாதிரி இருக்க..உச்சி முதல் பாதம் வரை அவளை ஆராய்ந்தவன் ஒரு நொடி சொக்கி தான் போனான் அந்த தேவ மங்கையின் அழகில்.
இன்னைக்கு என்ன ஒரு மார்க்கமாவே இருக்கான் தூக்கத்துல எதுவும் உலறி வச்சிட்டமோ உள்ளுக்குள் யோசனை செய்தவள் வெளியே என்னடா ஆள திண்ற மாதிரி பாக்குற டைம் ஆச்சு வா போவோம்..என முன்னால் நடக்க.
நீ இவ்வளவு அழகுனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஜனனிக்கு முன்னாடியே உன்ன காதலிச்சிருப்பேன் கத்தி சொன்னவன் காற்றில் அலைபாயும் கேசத்தை கோதி கொண்டே செல்ல அவள் தான் சிலையாகி போய் நின்றாள்.
வேந்தனின் கைப்பிடித்து சுடிதாரில் நடந்து வந்த அவந்திகாவை வீட்டில் உள்ளவர் முதல் தெருவில் போவோர் வரை யாரோ என பார்த்து கொண்டு செல்ல அந்த பக்கம் வந்த ராமும் மித்ரனும் கூட ஒரு நிமிடம் வேந்தன் வேறு பெண்ணுடன் தான் செல்கிறான் என்று எண்ணி விட்டார்கள்.மித்ரன் ஒரு படி மேலே போய் வேந்தனின் சட்டையையும் பிடித்து விட்டான்.
டேய் என்னடா நெனைச்சுட்டு இருக்க உன் மனசுல என் தங்கச்சிய விட்டுட்டு யாரோ ஒருத்தி கைய புடிச்சிக்கிட்டு சுத்துற உன்ன சும்மா விட மாட்டேன்டா என முறுக்கி கொண்டு வர..அவந்திகாவோ" பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே.."என பாட்டு பாடிட நெஞ்சில் கைவைத்து விட்டான் மித்ரன்.
யப்பா இந்த கொடுமை பாரு இன்னைக்கு தான் உன் பொண்ணு பொண்ணு மாதிரி இருக்கா..
டேய் அந்த பக்கம் போடா தடியா ஆஃபிஸ்க்கு டைம் ஆச்சு நாங்க போகனும்.எதே ஆஃபிஸ் வேற போறியா எப்பா உம்மவளுக்கு பொறுப்பு வந்திருச்சு பா ஒரு மனுஷன் ஒரு நாள்ள எத்தனை அதிர்ச்சிய தான் தாங்குறது உச்ச கட்ட அதிர்ச்சியில் பிதற்றி கொண்டிருந்த மித்ரனை நாலு மொத்து மொத்தி இழுத்து கொண்டு சென்றார் ராம்.
வேந்தனும் அவந்திகாவும் இந்த பக்கம் காரில் செல்லவும் அந்த பக்கமிருந்து வேந்தன் வீட்டிற்கு போலீஸ் வரவும் சரியாக இருந்தது.
அத்தே வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கு..கத்தி கொண்டே ராசாத்தி மாமியாரிடம் ஓட மாதவனும் சாரதாவும் வெளியே வந்தார்கள்.
இங்கே சாரதா, மாதவன் யாரு இன்ஸ்பெக்டர் கேட்க முன்னால் வந்தார்கள் இருவரும்.
அவர்களை கண்ட இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளிடம் இவங்க ரெண்டு பேரையும் அரஸ்ட பண்ணுங்க என்றிட திடுக்கிட்டு போனார்கள் குடும்பத்தார்கள்.
சார் எதுக்கு சார் எங்கள அரஸ்ட் பண்றிங்க நாங்க என்ன பண்ணுனோம் மாதவன் கேட்க.உங்க தம்பி ராமோட மனைவிய இருபது வருஷத்துக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் கொலை பண்ணதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு அதுக்கு தான் அரஸ்ட் பண்ண வந்திருக்கோம் என்க உதறல் எடுத்தது அண்ணன் தங்கை இருவருக்கும்.
டேய் குமரா வேந்தனுக்கு போன் பண்ணுடா...சார் ஒரு நிமிசம் என் சின்ன மகன் வந்திருட்டும் சாரதா பணிவாய் கேட்க..சாரி மேடம் கம்ப்ளைன்ட் கொடுத்ததே உங்க சன் செந்தமிழ் வேந்தன் தான்.
தொடரும்...
<