காலை நேர வாழ்த்து கவிதைகள்
காலை நேர வாழ்துக் கூறும் கவிதைகளின் தொகுப்பு
2.
அழகுக்கு மற்றவர்களின் கவனத்தை நம் மீது ஈர்க்க மட்டுமே தெரியும்
ஆனால் அன்பிற்கோ மற்றவர்களின் பாதையையும் நம்மோடு சேர்க்க தெரியும்..!
இனிய காலை
3.
அனுதினமும் எந்த ரூபத்திலாவது
ஏதோ ஒன்று வாழ்வில் துளிர்விட்டு கொண்டே தான் இருக்கிறது
எதை வளர்த்து அழகு பார்க்க வேண்டும்
எதை பிடிங்கியெறிய வேண்டுமென நாம் தான் முடிவுசெய்ய வேண்டும்....✍
இனிய நற்காலை
4.
உன்னை ஜெயிக்க
யாரும் பிறக்கவில்லை
என்று நினைக்காதே..
எல்லோரையும் ஜெயிக்க
நீ பிறந்திருக்கிறாய்
என நினைத்துக் கொள்.. வெற்றி உன் பக்கம்!!!
5.
இழந்ததை தேடாமல்..
இருப்பதை தொலைக்காமல்..
இருப்பது போதுமென்று.
இருந்து வந்தால்..
இன்னல்கள் இல்லா..
இனிமையான வாழ்க்கையை..
இன்புற்று வாழலாம்....!
6.
அனுதினமும் எந்த ரூபத்திலாவது
ஏதோ ஒன்று வாழ்வில் துளிர்விட்டு கொண்டே தான் இருக்கிறது
எதை வளர்த்து அழகு பார்க்க வேண்டும்
எதை பிடிங்கியெறிய வேண்டுமென நாம் தான் முடிவுசெய்ய வேண்டும்..
7.
நிமிடத்திற்கு நிமிடம் நின்றுவிடாமல் மாறிக்கொண்டே இருக்கும் எதையும் மனதிற்குள் பிடித்து வைக்க முற்பட வேண்டாம்
இருக்கும் வரை மகிழ்ச்சியோடு இருங்கள் இல்லையென்றான பிறகு நிம்மதியோடு இருங்கள்...
8.
வெற்றிக்குத் தான்
எல்லைகள் உண்டு ;
முயற்சிக்கு எல்லைகள் இல்லை... முயற்சித்துக் கொண்டே இரு...
கண்டிப்பாக இலக்கை அடையலாம்.
9.
காரணமின்றி வாழ்க்கையில் எதுவும் நடக்க முடியாது...
நடக்கும் ஒவ்வொன்றிற்கும் காரணம் தேடிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையை கடக்க முடியாது...
இனிய காலை வணக்கம்
10.
போலிகளோடு இணைந்து
இருப்பதை விட தனித்திருப்பதே
மேல்..
இனிய காலை..
11.
மண்னை தேடி சிலர்
பெண்னை தேடி சிலர்
வேலையை தேடி சிலர்
விடியலை தேடி சிலர்
வேடிக்கையை தேடி சிலர்
புகழை தேடி சிலர்
பதவியை தேடி சிலர்
மனிதா!
உன்னை தேட மறந்தது ஏன்?
உன்னை தேடி பார்-அது தான் வாழ்க்கை...,!!
12.
இல்லா குறைகள் கண்ணுக்கு தெரியும் பிடிக்காதவர்களிடம்
இல்லா நிறைகள் கண்ணுக்கு தெரியும் பிடித்தவர்களிடம்
வெறுப்பிற்கும் அன்பிற்கும் கண்கள் இல்லை....
13.
முட்கள் நிறைந்த பாதையானாலும் நீ
நடந்து பார்
அது பலருக்கும் பயணிக்கும்
பாதையாகும்....
வீழ்வது சுலபம்
வாழ்வது கடினம்..
வாழ்ந்து காட்டுவோம்
இனிய நாள்
14.
நீ....நீயாகவே இரு...!!
தங்கம் விலை அதிகம் தான்
தகரம் மலிவு தான் ஆனால்
தகரத்தைக் கொண்டு செய்ய வேண்டியதை தங்கம் கொண்டு
செய்ய முடியாது...!
15.
நல்லவன் நல்லவனாவே
இருக்க போறதுமில்லா..
கெட்டவன் கெட்டவனாவே
இருக்கப் போறதுமில்ல..
வார்த்தையை நிதானமாக
கையாளுங்கள்..
இனிய காலை..
16.
உன் இயல்பில்
நிலைத்திருப்பதே..
உனக்கான மனநிறைவு
17.
சூழ்நிலை சரியில்லை என்பவனை விட, சூழ்நிலையை தனக்கு சரியாக்கி கொள்பவன் வெற்றி பெறுவான்.!
நேரம் போகவில்லை என்பான் சோம்பேறி, நேரம் போதவில்லை என்பான் புத்திசாலி.!
வாய்ப்பு எனும் கானல் நீர் துரதிஷ்டம் எனும் வெம்மை கொள்வதற்கு முன் அதை சிப்பிக்குள் தோன்றும் முத்தாக மாற்று.!
இனிய காலை வணக்கங்கள்
18.
ஈர்ப்பு விசை
பூமிக்கு உண்டு.
ஈர்ப்பு விசையில்
பூக்களும் உண்டு.
நுகர்ந்து மயங்கி
தேனுன்ன காத்திருக்கும்....
வண்டும் தேனீயும்.
நீயும் நானும்....
ரசிக்கவும் ருசிக்கவும்
காத்திருப்போமே!
ஈர்ப்பு விசை
பூக்களுக்கும் உண்டு.
19.
எது உன் பலம் என சொல்லி இந்த உலகம் உன்னை விரும்புகிறதோ
அதையே உன் பலவீனமாக காட்டி இந்த உலகம் உன்னை ஒரு நாள் வெறுக்கும்...
இனிய காலை வணக்கம்
20.
நேற்று நீங்கள் இருந்ததை விட, சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் புன்னகையுடன் எழுந்திருங்கள்
இந் நாள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இனிய காலை வணக்கங்கள்