ஐ லவ் யூ டூ (2) | ஒரு பக்க கதை
நகைச்சுவை கலந்த காதல் கதை

நிலவு தேவியவள் உச்சிக்கு வந்து பூமாதேவியவளுக்கு தன் ஒளியை பரிசளிக்க அந்த வெளிச்சத்தில் தட்டு தடுமாறி முகம் வெளிறி மூச்சிரைக்க காட்டிற்குள் ஓடிக்கொண்டிருந்தான் ஒருவன்.
அவன் கண்களில் அத்தனை மரணபயம் அவனை துரத்தி வருபவனை எண்ணி . துரத்தி வருபவனின் கையில் மட்டும் சிக்கினால் மரணதேவனே அஞ்சிடும் அளவுக்கு இருக்கும் அவன் தரும் தண்டனைகள்.அந்தோ பரிதாபம் துரத்தி வந்தவன் பிடித்து விட்டான் அவனை.
ஓடியவனோ கெஞ்சிக் கொண்டிருந்தான் தன்னை பிடித்தவனிடம் .
சார் என்ன விட்ருங்க சார் எனக்கு ஒன்னும் தெரியாதுஊஊ... என்று முடிக்கும் முன்பே அவன் மூஞ்சில் முறைவாசல் பண்ணிவிட்டான் துரத்தி வந்தவன்.
வாயில் இரத்தம் வடிய ஒரு அடியிலேயே சுருண்டு விழுந்தான் அவன்.
தன் நெற்றியை நீவிக்கொண்டே உனக்கு ஒன்னும் தெரியாதுல்ல அப்போ இனி நீ எனக்கு தேவையில்ல ஒன்னும் தெரியாத உன்னால எனக்கு நோ யூஸ் ஸோ..என்று அவனை நெருங்கியவன் சட்டென அவனின் கண்ணை தோண்டினான் துடிக்க துடிக்க.
துருப்பிடித்த பிளேடால் அவனின் கழுத்தை அறுக்க நரகவேதனையுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உயிர் பிரிவதை இறுகிய முகத்துடன் பார்த்திருந்தான் ஹரித் ஆதித்யன்.
*****************************
மாசி மாசம் ஆளான பொண்ணே மாமன் உனக்கு தானே ????????
என்று பாடிக்கொண்டே ஒருகையில் அல்வாவும் மறுகையில் மல்லிகையும் மணக்க வீட்டிற்கு வந்தான் ஹரித் ஆதித்யன்.
மல்லிப்பூ எனக்கா ஹரித் என்றபடி வந்து பூவை வாங்கி கொண்டாள் ஹரித்தின் சரிபாதியான ராதா பூவை வாங்கியதோடு மட்டுமல்லாமல் குட்டியாய் ஒரு இதழ் ஒற்றல் வேறு. கண்கள் பளிச்சிட்டது ஹரித்திற்கு.
அல்வா எனக்காகவா ஆதி என்றபடி அல்வாவை வாங்கி கொண்டாள் ஆதியின் இன்னொரு பாதியான மீரா அல்வாவை வாங்கிய கையோடு வைத்தாள் இச்சொன்று அவனின் கன்னத்தில்.
ஆதியின் மறு கன்னத்தில் பளார்...ராதா தான் எனக்கு வெறும் மல்லிப்பூ அவளுக்கு மட்டும் அல்வாவோ என்று பூவை அவன் முகத்தில் வீசிவிட்டு சென்றாள்.
ஆதியின் இச்சு வாங்கிய கன்னத்திலும் இப்பொழுது பளார்.. ஓ எனக்கு அல்வா கொடுக்க முன்னாடியே அவளுக்கு மல்லியா என்று அல்வாவும் பறந்தது மீராவின் கை வண்ணத்தால்.
தங்களின் அறை வாசல் வரைக்கும் சென்றவர்கள் அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ரூம் பக்கம் வந்த காலம் பூரா நீ சாமியாராதான் இருக்கனும் என்று ஒருசேரவே கூறிவிட்டு அறை கதவை அறைந்து சாத்தினார்கள் ஹரித் ஆதித்யனின் தர்மபத்தினிகள் இருவரும்.
இரண்டு மனைவிகளின் அறைகளையும் மாறி மாறி ஹரித் ஆதித்யன் பாவமாக பார்க்க மல்லியும் அல்வாவும் ஹரித் ஆதித்யனை பாவமாக பார்த்தது.
என்னடா ஆதித்யா உனக்கு வந்த சோதனை சோறு இருந்தும் கொல பட்டினிங்குற மாதிரி ரெண்டு பொண்டாட்டி இருந்தும் கட்ட பிரம்மச்சாரியாவே இருக்கியே.
ஒருத்திக்காவது புருஷன் மேல அக்கறை இருக்கா பாரு ரூம் பக்கம் வந்தா சாமியாராகிடுவனு சாபம் விடுறாளுக என்று புலம்பிக் கொண்டே சோஃபாவில் தஞ்சம் கொண்டான் ரெண்டு பொண்டாட்டி காரன்.
சற்று முன் ஒருவனை சம்பவம் செய்தவனால் இரண்டு சம்சாரங்களை சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை.
ஊருக்கே ராஜானாலும் வீட்டுக்கு தொடப்ப கட்டை தானே.
கதிரவன் அஸ்தமிக்கும் நேரமாகியும் இன்னும் துயில் கலையாமல் உறங்கிக் கொண்டிருந்த ஒரு ஜீவன் முகத்தில் ஒரு வாளி தண்ணீர் அபிஷேகம் நடக்க மழை தான் பெய்கிறதென அடித்து பிடித்து எழுந்தான் ஹரித் ஆதித்யன்.
அவன் முன்பு ருத்ர ரூபினியாய் நின்றிருந்தார்கள் இரட்டை சகோதரிகளான டாக்டர் மேடம் மீராவும் லாயர் மேடம் ராதாவும்.
ஏய் ஏங்கடி இப்படி காலங்காத்தால மேல தண்ணிய ஊத்துரிங்க என்று முகத்தில் வழிந்த நீரை கையினால் வழித்துக்கொண்டே மனைவிமாரை ஏறிட்டான்.
வெள்ளை கோட்டுடன் ஒருத்தியும் கருப்பு கோட்டுடன் ஒருத்தியும் நின்றிருக்க என்ன பொண்டாட்டிஸ்... இன்னும் விடியக்கூட இல்ல இவ்வளவு சீக்கிரமா வேளைக்கு கிளம்பிட்டிங்க உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று ஈரத்துடனே மீண்டும் தூங்கி வழிந்தான்.
முதல்ல உன் சோம்பேறி தனத்துக்கு ஒரு அளவே இல்லையாடா இது உனக்கு மார்னிங் மாதிரி இருக்கா எருமை நல்ல மணிய பாரு இராத்திரி ஏழாகுது என்று மீரா காதை திருக ராதா அவனின் கையைப் பிடித்து முறுக்கினாள்.
டேய் பொறுக்கி காலைல நாங்க வேலைக்கு போகும் போது ஏதோ டயர்ட்ல தூங்குறனு பாவம் பார்த்து விட்டுட்டு போனா நீ கும்பகர்ண பரம்பரைல பொறந்தவன் மாதிரி நல்லா தூங்கிட்டு இருக்க என்று முறுக்கிய கையை பின்னால் வளைத்து முதுகில் ஒரு அடி வைத்தாள் லாயரம்மா.(நல்ல மரியாதை புருஷனுக்கு)
ஐயோ ராட்சசிங்களா விடுங்கடி என்ன வலிக்கிது புருஷன் மேல கொஞ்சமாச்சும் பாசம் இருக்காடி உங்களுக்கு இந்த அடி அடிக்கிறிங்க.
உனக்கு பொண்டாட்டிங்க மேல பாசம் இருக்குதாடா ஒருத்திக்கு ரெண்டு பேர நமக்கு தேவையானதெல்லாம் பார்த்து பார்த்து செய்றாங்களே. பொண்டாட்டிங்க பசியோட வருவாங்களேனு ஏதாவது சமைச்சு வைப்போம்னு சமைச்சு வச்சிருந்தா என்ன என்று காதை பிடித்திருந்த மீரா ஆதி மேல் ஏறி அமர்ந்து அவனின் தலைமுடியை கொத்தாக பிடித்து மாவாட்டினாள்.
ஆஆஆ..விடுங்கடி படக்கூடாத இடத்துல பட்டுற போகுது அப்பறம் நீங்க ரெண்டு பேரும் தான் கஷ்ட்டப்படுவிங்க இன்னும் ஒரு தடவை கூட ஃபர்ஸ்ட் நைட் நடக்கல.
(ரீடர்ஸ்-ஒரு தடவையாச்சும் நடக்குதானு பார்ப்போம் ????)
இப்போ என்ன உங்களுக்கு பசிக்குது அதானே போய் குளிச்சிட்டு ரெடியாகி வாங்க ஹோட்டல்க்கு கூட்டிட்டு போறேன் என்ற அடுத்த நிமிடம் ராதா சிட்டாக பறந்துவிட்டாள் ரெடியாக.
இன்னும் மீரா அவன் மேல் இருந்த எழும்பவில்லை ஆதியின் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
என்னடி நீ குளிக்க போகலையா மாமாவ பார்வையாலயே முழுங்கிட்டு இருக்க வேணும்னா ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா என்று மீராவை இழுத்து அவள் கழுத்தில் வாசம் பிடித்தான்.
அவன் தலை முடியை கொத்தாக பற்றியவள் கேட்டாள். யாரடா கொண்ணுட்டு வந்த உன் ஷர்ட்டு கைல லேசா ரத்தக்கறை இருந்துச்சி சரியாக கணித்து விட்டாள் டாக்ட்டரம்மா.
சொன்ன என்ன தருவிங்க பொண்டாட்டி நம்பர் ஒன் என்று குறும்பாக கண்ணடித்தான் கள்வன்.
நீ எதுக்கு அடிபோடுறனு தெரியும் நீ ஒன்னும் சொல்லவும் வேணாம் நா ஒன்னும் தரவும் வேணாம் போடா என்று அவனை படுக்கையிலிருந்து கீழே உருட்டி தள்ளிவிட்டு தனது அறைக்கு ஓடிவிட்டாள் மீரா.
சிறிது நேரத்தில் சண்டைக்கோழி சகோதரிகள் தயாராகி வந்தனர் மீரா கருநீல நிற சில்க் சாரி அணிந்து வர ராதா வெள்ளை நிற டிசைனர் சாரி அணிந்து வந்தாள்.இருவரையும் உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தவன் ஓடிச்சென்று கருநீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற ஷர்ட்டும் அணிந்து வந்தான்.
(அம்புட்டு பயம் பொண்டாட்டிகளுக்கு)
இவர்கள் குடும்பம் பெரிய குடும்பம் தான் இருந்தும் மூவரும் தனியாகத்தான் இருக்கிறார்கள் பின்னே சகோதரிகள் இருவரும் நீ முதல் நா முதல் என்று தினமும் ஒரு பஞ்சாயத்து வைத்தால் வீட்டாரும் எவ்வளவு தான் சமாளிப்பார்கள்.
நீயாச்சு உன் பொண்டாட்டிகளாச்சுனு இருவீட்டாரும் தனிக்குடித்தனம் வைத்துவிட்டனர். இத்தனைக்கும் மீராவும் ராதாவும் ஹரித் ஆதித்யனின் சொந்த தாய் மாமன் மகள்கள் தான்.
அக்கா தங்கை இருவரும் கத்தரிக்கோல் போல எதிரெதிராகத்தான் இருப்பார்கள் இடையில் மட்டும் யாராவது வந்தால் பீஸ் பீஸாக வெட்டி விடுவார்கள் பெற்றவராகினும் சரி மற்றவராகினும் சரி யாரும் விதிவிலக்கல்ல ஆதித்யன் ஒருவனை தவிர.
இதில் இவர்களை அடையாளம் காண்பது இன்னும் கொடுமை பெற்றவர்களே தடுமாறி போவார்கள் ஆனால் ஆதி சரியாக கணித்து விடுவான் அவர்களின் கண்களை பார்த்தே யார் மீரா யார் ராத என்று.
******************************************
காரை ஸ்டார்ட் செய்தபடி ஆதி உள்ளே அமர்ந்திருக்க அக்கா தங்கை இருவரும் முட்டிக்கொண்டிருந்தனர் வெளியே.
ஏய் இன்னும் ஏறாம என்னங்கடி பண்ணிட்டு இருக்கிங்க சீக்கிரமா வாங்கடி போவோம் எனக்கு பசிக்குது.
ம்ஹூம் ஏறிய பாடில்லை.ஹரித் ஆதித்யனே வெளியில் வந்தான்.
மீராவோ ஆதி நான்தான் ஃபர்ஸ்ட் நான்தான் முன் சீட்டுல உட்காருவேன் அவள பின்னாடி போக சொல்லு.
ராதாவோ ஹரித் நீ இவளுக்கு மொத தாலி கட்டுனதால எல்லாத்துலயும் இவ தான் ஃபர்ஸ்ட்டா இருக்கா இப்போ முன்னாடி உட்காரவும் சண்ட போடுறா அவள பின்னாடி போக சொல்லு ஹரித் நான்தான் முன்னாடி உட்காருவேன் என்று உதட்டை சுழித்தாள்.
சுழித்த உதட்டை ருசி பார்த்திட சொல்லி அவன் இதழ்கள் வேட்கை கொள்ள மனசாட்சியோ காறித்துப்பியது இந்த ரணகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதா என்று.
ஹும் எங்க கிளுகிளுப்பா இருக்க விடுறாளுங்க ரெண்டு பேர கட்டியும் சிங்கிள் கிஸ்க்கு கூட வழியில்லாம இருக்கேன் போவியா அங்குட்டுனு மனசாட்சியை துரத்திவிட்டான்.
யாரும் முன்னாடி வரவேண்டா ரெண்டு பேருமே பின்னாடி போங்கடி.
முடியாது இருவருமே வீஞ்சிக்கொண்டனர் .
ஐயோ இவளுகளோட இதே ரோதனையா போச்சு பேசாம நாமலே சமைச்சிருக்கலாமோ என்று நேரம் கடந்து யோசித்தான்.
கவலை படாதே உன்னை காக்கவே நானுள்ளேன் என ஆதித்யனை பார்த்து பல்ளிலித்தது ராதாவின் ஸ்கூட்டி.
மீரா ஸ்கூட்டி ஓட்ட ஆதி நடுவில் அமர்ந்து மீராவின் இடுப்பை பிடித்துக்கொண்டான் ஆதியின் பின்னால் ராதா அமர்ந்து அவனை இடுப்போடு கட்டிக்கொண்டாள். வீதியில் செல்வோர் எல்லாம் சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்மா விடாதுடா என்பதை போல பார்த்து வைத்தனர் (நாங்களும் தான்).
கம்மான் பேபி லெட்ஸ் கோ அன் த ஸ்கூட்டி என்று பறந்து கொண்டிருந்த மூவரும் சிக்கினார்கள் நைட் ரவுன்ஸ் வந்த இன்ஸ்பெக்டர் விஜயனிடம்.
நிறுத்து நிறுத்து நிறுத்தே.... கான்ஸ்ட்டபிள் கத்த வண்டியை ஓரங்கட்டினாள் மீரா.அவர்கள் கேட்கும் முன்னமே லைசென்ஸ் முதல் ஆதார் கார்ட் வரை அத்தனையும் எடுத்து வைத்தாள் இருந்தும் என்ன பயன் ட்ரிப்பிள்ஸ் வந்தால் சும்மா விடுவார்களா கேட்டார்கள் லஞ்சம். வக்கீலம்மா தொடங்கி விட்டாள் வாதத்தை.
இன்ஸ்பெக்டர் விஜயனோ என்னமா ட்ரிப்பிள்ஸ் வந்துட்டு ஓவரா துள்ளுற பேசாம ஒரு 1000 வெட்டிட்டு கெளம்புங்க என்றிட இன்னும் காண்டானாள் வக்கீலம்மா. ராதாவை அடக்கிவிட்டு ஆதித்யன் அமைதியாக இன்ஸ்பெக்டரரிடம் 1000 ரூபாவை கொடுத்தான் மீராவும் ராதாவும் இன்ஸ்பெக்டரை பாவமாக பார்த்தனர் ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளையோ என்ற ரீதியில்.
வண்டியில் ஏற போன மீராவிடம் கேட்டார் இன்ஸ்ஸு ஆமா இந்த பையன் யாரு உங்க பாய் ஃபிரண்டா
மீராவோ இல்ல என் புருஷன்
ஓ அப்போ அந்த பொண்ணு யாரு
அவ அவரோட பொண்டாட்டி தோலை குழுக்கி சாதரணமாக சொல்ல
இன்ஸ்பெக்டர் நன்றாக குழப்பி போனார்.
ஒரு வழியாக உண்டு முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள் மூவரும் சில பல அடிகளுக்கு பின்னர் ஹரித் ஆதித்யன் சோஃபாவில் அடைக்கலமானான். சோஃபா தான் இவனுக்கு மூன்றாவது மனைவி என்றுகூட சொல்லலாம்.
வெய்யோன் கிழக்கை அலங்கரிக்க ராதா கத்திக் கொண்டிருந்தாள்
மீரா மீரா... சீக்கிரம் இங்க வந்து பாரேன்
ஏன்டி இப்படி காலங்காத்தால கத்திட்டு இருக்க என்ற படியே மீரா வர
ராதா தொலைக்காட்சியை காட்டினாள்.
வணக்கம் சிட்டியை அண்டிய குறிப்பிட்ட காட்டு பகுதியில் கற்பழிக்கப்பட்ட நிலையில் இரட்டை சகோதரிகளின் சடலம் போலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இது நான்காவது கொலை சம்பவமாகும் கடந்த சில மாதங்களாக இரட்டை சகோதரிகள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த தொடர் கொலைகளின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது போயுள்ள நிலையில் இந்த கேஸானது போலிஸாரிடம் இருந்து சீபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை கமிஷனர் அலுவலகம் கிரைம் ப்ரான்ச்
இன்ஸ்பெக்டர் விஜயன் நேற்று வாங்கிய லஞ்சத்திறக்காக சஸ்பென்ட் செய்யப்பட்டார் அவரின் முன்னால் கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தான் ஹரித் ஆதித்யன் DCP ஆஃப் தி கிரைம் இன்ட்டலிஜன்ட் டிபார்ட்மெண்ட்.
நேற்றிருந்த குறும்புத்தனம் இப்பொழுது அந்த கூர் விழிகளில் இல்லை குறும்பு,அமைதி, பொறுமை எல்லாம்
மனைவிகளுக்கு மட்டும் தான் போல
ஆதித்யனின் அனல் தெறிக்கும் பார்வையில் இன்ஸ்பெக்டரின் பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மன்ட் வீக்கானது.
(ஆமா காலைல அனல் தெறிக்க பாப்பாரு ராத்திரியான பொண்டாட்டிங்க கிட்ட அடி வாங்குவாரு).