மருத்துவத்துறை கண்ட மகத்தான சாதனை | கல்வி கட்டுரை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் "என்பது பெரியோரின் அனுபவத்தினால் கண்டு கூறிய முதுமொழியாகும்.பேய் அடித்து விட்டது என்று பிதற்றித் திரிந்த மனிதனுக்கு நோய் அடித்து விட்டது என்று நுவன்றது மருத்துவ அறிவியல்.அறுக்காமலயே அறுவை சிகிச்சை துண்டித்த விரலையும் ஒட்ட வைக்கும் சாகசம் மூளையை அறுத்துத் தைத்திடும் தந்திரம் செயற்கை இதயம் பயன்படாதிருந்த மனித உறுப்புக்களைப் பயன்பட வைத்தது மருத்துவ அறிவியல் என்றால் மிகையல்ல.மாற்றுச் சிறுநீரகம் மனித வாழ்வை மலரவைத்தது.கொலராவின் காலை ஒடித்ததும் அம்மை நோயை விரட்டியடித்ததும் மலேரியாவை மங்க வைக்கும் புற்றுநோயைப் புழுதியில் புதைத்ததும் மருத்துவ அறிவியல் என்றால் அதிசயமே..

மருத்துவத் துறையில் விஞ்ஞானம் செய்த புதுமைகளோ ஏராளம்.அவை எல்லாவற்றிக்கும் மனித குலம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றது என்றால் மகிழ்வே.விஞ்ஞான யுகம் நமக்கு தந்துதவிய மருந்துகள் மூலம் மனிதகுலம் கொடுக்கும் பிணிகளை மாற்றும் அமிர்த தன்மையான சஞ்சீவிகளாய் வர்ணிக்கப்படுகின்றார்கள்.சமுதாயத்தை அழிக்கும் தொற்றுநோய்கள் மாற்று மருந்துக்கள் மூலம் தடுக்கப்படுகின்றன.மனிதனுடைய உள்ளுறுப்புகள் படமாக்கப்பட்டு பழுதுள்ள இடங்களை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்கப்படுவது சந்தோசமான விடயமாகும்.
பரிசோதனை குழாய் மூலம் செயற்கையான முறையில் கருத்தரிக்க செய்து குழந்தைகள் பெறச் செய்யும் முறையை மருத்துவம் கண்டுள்ளது.இதற்கெல்லாம் அடிநாதமாக விளங்குவது விஞ்ஞானமாகும்.இறப்பைத் தடுக்க முடியாவிடினும் ஊசி மருந்துகளாலும் உயிர்ச்சத்து மாத்திரைகளாலும் அறுவை சிகிச்சை முறையாலும் நோய்த் தொற்றை பெருமளவு குறைக்க விஞ்ஞான மருத்துவம் உதவுகின்றது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு"இதற்கு அணுக்கதிர் வீச்சும் விதி விலக்கல்ல.அளவு படுத்தப்பட்ட கதிர்வீச்சு உயிர் காக்கும் அமிர்த சஞ்சீவியாகும்.பல்வேறு நோய்களை குணப்படுத்த அணுக்கதிர் பயன்படுகின்றது.ஆறாத புண்களை ஆற்றுதல், கிருமிகளை அழித்தல்,உடல் உறுப்புகளின் இயக்கத்தைச் சீராக்கல் போன்ற பற்பல மருத்துவ பணிகளுக்கு அணுக்கதிர் வீச்சு பப்ப்ன்படுகின்றது.நாம் அறிந்த உண்மையாகும்.
மனித இரத்தம், சிறுநீர் என்பன பூமிக்கு புரோகரஸ் சரக்கு வண்டியினால் அனுப்பி வைத்ததும் உடலியல் ஆய்வுகள் தொடங்கின.விண் பயணத்தின் போது மனித எடையை பதிவாக்கும் கருவியும் இரத்த நாளங்கள், நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் செயற்பாடுகளை முறையாக கண்காணிக்கும் நவீன உபகரணங்களுமாக மிர் நிலையத்தில் போதிய் வசதிகள் உள்ளன.இவ்வாறு மனித உடற்கூற்று பற்றி "மிர்"விண் கூடத்தில் பற்பல ஆய்வுகள், செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறாக மருத்துவத் துறை கண்ட மகத்தான சாதனைகள் பல நன்மையான விடயங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
பிறந்த குழந்தைகளுக்கு நான்கு வயது வரை பல்வேறு வகையான தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றது.மனிதனுடைய ஆயுள் நீடிக்கின்றது.இறப்பு வீதம் பிறப்பு வீதம் ஒருநாட்டின் சனத்தொகையை நிர்ணயிக்கும் காரணியாகும்.சிசு மரண வீதம் போன்றவை இன்றைய வாழ்க்கைத்தர பண்புச் சுட்டெண்ணை தீர்மானிக்கும்.இவ்விடம் எமது நாட்டைப் பொருத்தமட்டில் அபிவிருத்தியுடன் தொடர்புடையது கருவுற்றிருக்கும் மழலைகள் ஆணா?பெண்ணா?எனக் கண்டறியும் கருவிகளும் உள்ளன என்றால் மிகவும் புளகாங்கிதம் அடையக்கூடிய விடயமாகும் இவையே மருத்துவ உலகு கண்ட பொக்கிசங்களாகும்.நாமும் இதன் வழி நடந்து நம் உடலினையும் சமூக நலனிலும் அக்கறையாக செயற்படுவோம்.
ஒரு நோயை வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே நல்லது. உடல் நலம் பேணுவதில், சேமித்து வாழ்வதி நாம் சிறப்பான வாழ்வியலை எதிர்நோக்க வேண்டும்.அவ்வாறு இல்லையென்றால் நம் வாழ்வு நெருப்பிலே பட்ட பஞ்சுபோல அடையாளம் தெரியாமல் அழிந்து விடும்.இவ்வாறானவற்றை நோக்கும் பொழுது வருமுன் காப்போம் சொற்பொருள் மிக சிறப்பானதொன்றாக விளங்குகின்றது.நம்முடைய வயோதிப வாழ்க்கைப்பருவம் பொருளின்றி இடையூறு இன்றி மகிழ்வாவதற்கு வருமுன் காப்பதென்ற கருத்து தக்க சான்றாக அமைகின்றது.நாம் இன்றைய காலகட்டத்திலே "மிகவும் பாதுகாப்பாக வீட்டிலே இருப்பது வருந்துவதிலும் மேலாகக் கருதப்படுகின்றது".இவ்வாறு அன்றைய காலகட்டத்திலே வாழ்ந்த நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
இன்றைய விஞ்ஞான யுகத்திலே உணவையே மருந்தாக்கிக் கொள்ள வேண்டும் தவிர, மாத்திரைகளையே நம் உணவில் முழுமையாக்கி விடக்கூடாது.நாமும் சரி சிறுவர்களும் சரி துரித உணவை தவிர்த்து இயற்கை உணவுகளையும் பழங்கழையும் கீரைகளையும் நம் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொண்டால் நாம் அறுவை சிகிச்சைக்கு ஆளாகாமல் நல்ல ஆரோக்கியவாதியாக வாழமுடியுமென்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
இதனால் தான் "ஆரோக்கியமில்லாதா வாழ்க்கை பாழ்"என்று கூறினார்கள்.நாம் நல் ஆரோக்கியமாக வாழ இயற்கையை இரசித்து தியானத்தில் ஈடுபட வேண்டும்.நல்ல உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.முறையான பயிற்சிதான் நம்மையும் நம்முடைய சரீரத்தையும் வலுவுடையதாக்குகின்றது.இதனைத்தான் பாரதியார் மிக அழகாக வர்ணித்தார் "ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா "என அழகாக புகழ்ந்து கூறியுள்ளார் இது நம்முடைய ஆரோக்கிய்த்தை மகிழ்வூட்டுகின்றது.நாம் தற்போது ஒருநாளைக்கு ஆகக்குறைந்தது ஒரு மணிநேரமாவது பயிற்சி செய்வது காலத்தின் தேவைப்பாடாகும்.நம் வாழ்விலே உடல்பலமும்,உடல் நலமும் பரஸ்பரமும் தான் நமக்கு ஆரோக்கியத்தைப் பெற்றுத்தரும்.மருத்துவ துறை மகத்தான சாதனையை பெற்றுள்ளது.விஞ்ஞானம் விஸ்பரூபம் பெற்றுள்ளது.அனைத்திற்கும் மானிடசக்தி தான் திறவு கோலாகும்.வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் ...என்ற புகழான கவிஞர் பாரதியாரின் கூற்றுப்படி எந்திர ரீதியான உலகிலே எண் சாண் உடம்பில், ஒரு சாண் வயிற்றுக்குச் சரியான வேளையில் உணவிடல் மற்றும் உடல்நலக்குறைவில் தீர்க்கும் மருந்தாகுமெனக் கூறுகிறார்.
மனிதர்களாகிய நாம் "நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.."என்ற திருவள்ளுவப் பெருந்தகையின் குறளை நம் வாழ்வில் கடைபிடிப்பது சிறப்பாகும்.
அடுத்து மருத்துவ துறையில் அறிவியல் வளர்ச்சியை நோக்குவோமாயின் "மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று"என்ற பொய்யாமொழிப்புலவரின் நா அடக்கத்தை அதன் முக்கியத்துவத்தை அருமையாக கூறியுள்ளார்.
இதய அறுவை சிகிச்சை என்பது நம் மக்கள் மத்தியில் அது பெரிய ஒரு புணர் ஜென்ம விசயமாக அக்காலத்தில் கருதினார்கள்.ஆனால் இன்றைய யுகத்திலே விஞ்ஞான விந்தையானது மனித இதயத்தையே வெளியே எடுத்து பொறுமையாகவும் நிதானத்துடனும் பழுது பார்த்து இயங்க வைக்கின்றனர்.நம்நாட்டு வைத்தியர்கள்.இச் செய்தி மகிழ்வானதே.இதுவே அறிவியல் வளர்ச்சியும் என்றால் சிறப்பம்சமே.
"அறிவியல் உண்மையானவை.ஆனால் ஆபத்தானவை "என்று கூறுகிறார் ஜி பி ஷா. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பண்டமாற்று முறைபோல் மாற்றி பொருத்தும் அளவுக்கு விஞ்ஞான யுகம் வளர்ச்சியடைந்துள்ளது.அறுவை சிகிச்சையும் மீறி லேசர் கருவிகொண்டு நவீன வளர்ச்சிப்பாங்கில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
"ஆகாரமே மருந்து ;மருந்தே ஆகாரம் என்ற பொன்வாக்கு மிகத் தெளிவாக அழகாக சுருக்கமாகவே மிக மிக அர்த்தமுடைய உண்மைக் கருத்தை நமக்கு தெளிவாக்கியுள்ளது.
ஆகவே விஞ்ஞான யுகத்தின் வளர்ச்சியை எடுத்து செயல்படுவோம்.தீய அம்சங்களை நம்மனதிலிருந்து அகற்றுவோம்.அவற்றை அறவே நினைக்காமலிருப்போம்.
அக்கால கட்டத்திலே முன்னோர்கள் அனுபவ ரீதியாகவே அறிவியல் உண்மைகளை நடைமுறையாக்கினார்கள்.இயற்கையை இரசித்தார்கள் தருக்களை வளர்த்தார்கள் நம்மை சுற்றி பிராணவாயு மிகுதியாக காணப்பட்டது.இதனால் உடல் ஆரோக்கியம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று இப்போது நாங்கள் நூலில் வாசித்து தான் அறிய முடிகின்றது.
"வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் "என்றார்கள் முன்னோர்கள். சாலை ஓரங்களில் மரத்தை நட்டார் அசோகச் சக்கரவர்த்தி...
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி"ஆனால் இன்று பல புதிய முறைகளை கையாண்டுவருகின்றார்கள்.
சுருங்கக் கூறின், "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"என்னும் திருவள்ளுவருடைய வழியில் நாம் அறிவியல் வளர்ச்சியை அர்த்தமுடையதாகவும் மிக மிக ஆக்கபூர்வமானதாகவும் ஆக்குவோம்.
உயிரினங்களை உலகத்திலே சிருஷ்டி செய்தருளிய இறைவன் அவற்றின் வாழ்வுக்கென உணவுப் பொருட்களையும் சேர்த்தே சிருஷ்டித்தான்.
உயிரினங்களின் பசியை மட்டுமே அகற்றுவதற்காக இறைவனால் உணவு அருளப்பட்டது.ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அதுவே அடிப்படையும் சாதனையுமாகும்.ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் நோயற்ற வாழ்க்கை என்றுதான் அர்த்தம்.
இறைவன் விதித்தபடி உண்ணும்போது எந்த உயிரினத்துக்கும்பிணி வாய்ப்படுவதில்லை. என்பது ஒரு பெரிய உண்மை.
உணவு உண்ணுவதில் இறைவனின் விதிமுறைகளை மீறித்தவறு செய்யும்போதுதான் பிணியும் பிற சங்கடங்களும் தோன்றுகின்றது.
உயிரிகளிடத்தே தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து விடக் கூடும் என்பதை உணர்ந்திருந்த இறைவன்,மருத்துவத்தையும் கருத்தில்கொண்டு அப்படி உணவு முறைக்காரணமாக தவறிழைத்துப் பிணியை வருவித்துக் கொண்டால் அந்த உணவைக் கொண்டே வந்த பிணியை அகற்றிக்கொள்ளவும் வழிமுறைகள் வைத்தான்.
இதுவரை சொன்னதெல்லாம் பொதுவாக உயிரினங்களைப் பற்றிய உண்மைகளே தவிர மனித இனத்தை பற்றிய விசயம் மட்டுமே அல்ல.
ஆனால் ஓர் உண்மை உங்களுக்கு தெரியுமா?மனித இனத்தை தவிர வேற எந்த உயிரினமும் இயல்பாக பிணிவாய்ப்படுவதில்லை.மனிதனை நம்பி மனிதனை அண்டி வாழும் உயிரினங்கள் ஆகும்.உயிரினங்கள் மட்டுமே விதிவிலக்கு.
உணவு விசயத்தில் பிற உயிரினங்கள் இறைவன் விதித்த கட்டளையே மீறாமல் நடப்பது நமது கடைமையும் பொறுப்புமாகும்.
மனிதனைத் தவிர்ந்த உயிரினத்தேவையை மீறி வயிறு புடைக்க உண்ணுவதில்லை.தேவைக்கு குறைவாகவும் உண்ணுவதில்லை.உயிர் வாழ்க்கைக்கு நியாயமாக எவ்வளவு தேவையோ அவ்வளவு உணவை மட்டுமே. அவை திட்டமாக உண்ணுகின்றன.
ஆகவே உடல் ஆரோக்கியம் அவற்றின் இயல்பு நிலையாக இருக்கின்றது.
அளவுக்கு மீறி உண்பதால் ஏற்படும் அஜீரணம் போன்ற வயிற்றுக்கோளாறுகள் பிற உயிர்களுக்கு வருவதில்லை என உயிரின ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதே போன்று சத்துக் குறைந்த உணவால் பற்றாக்குறை உணவால் உடல் பலவீனமுறும் நிலையும் பிற ஜீவராசிகளிடம் காணப்படுவதில்லை.என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
உயிரியல் ஆராய்ச்சி வல்லுனர்கள் மனிதனிடத்திலும் மனிதனைச்சார்ந்து வாழும் பிராணிகளிடத்திலும்மட்டுமே மேற்குறித்த குறைபாடுகள் எல்லாம் மலிந்து கிடக்கின்றன.
உணவு விசயத்தில் இறைவன் விதித்த விதிமுறைகளை எல்லாம் உதறித்தள்ளி விட்டு பேராசையும் நாக்கு ருசியும் கொண்டு மனிதன் உணவை முறை கெட்ட விதத்தில் எல்லாம் உண்டு மகிழ முற்பட்டான்.
இதனால் உணவே அவனுக்கு விசமாகி உடலைச் சீரழிக்கத் தொடங்கியது.
கடுமையான பிணிகளும் அவற்றுடன் தொடர்பாக தோன்றும் பலவிதமான தொல்லைகளும் மனித இனத்தை கட்டியணைத்துக் கொண்டு விட்டதற்கு இதுவே காரணமாகுமென்றால் உண்மையே.
மனிதனுக்கேற்படக்கூடிய எந்த வகை பிணிக்கும் உணவு முறைதான் அடிப்படைக்காரணமாக இருக்கின்றது. நமக்கு எந்த நோய் ஏற்பட்டாலும் அதற்கு மூல காரணமாக இருப்பது அஜீரணமாக இருக்கின்றது.
வயிற்றில் முதலில் கோளாறு தொடங்குகின்றன.அடுத்து நாம் வைத்திய சாதனையை எடுத்து நோக்கினால் அனைத்துமே விஞ்ஞானமே காரணமாக விளங்குகின்றது.
என்ன நிலைமை காரணமாக நோய் வருகின்றதெனநாம் உணருவோமாயின் வெறும் நாக்கு ருசி காரணமாக உணவுத் தட்டுப்பாடு விசயத்தில் அலட்சியமாக இருந்து வேண்டுமென்ற தவறுக்கு மேல் தவறுகளாக நடக்கின்றனர்.
அவர்கள் மருந்துத் தண்ணீரையும் மமாத்திரைகளையும் விழுங்கிக் குடலையும் உடலையும் கெடுத்துக்கொள்வதோடு அறுவை சிகிச்சை என்ற பெயரால் உடல் உறுப்புகளை அறுத்து சின்னா பின்னமாக்கிக் கொள்வதைத் தவிர்க்கவே இயலாது.
நவீன கால பித்துக்களில் ஊசி போட்டு கொள்வதும் மாத்திரைகளை விழுங்குவதையும் உடல் உறுப்புக்களை டாக்டரின் கத்தியால் அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வதும் பெருமைக்குரிய பெருஞ்சிறப்பாகவே இது இன்றைய கால கட்டத்தில் கருதப்படுகின்றது.
பெரிய பணக்கார வீடுகளில் தங்களுக்கென குடும்ப டாக்டரை நியமித்துக் கொள்வதை செல்வச்செழுமையின் சின்னமாகக் கருதுகின்றனர்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது குடும்ப டாக்டரின் முத்தில் விழிப்பது சிறப்பு என்றஎண்ணமுடையவர்கள் இன்று எத்தனையோ பேர்.
சிலருக்கு தாங்கள் எத்தனை வகையான அறுவைச் சிகிச்சைகளைச் செய்து கொண்டனர் என்பதை கதையாகக் கூறுவதில் பெரு மகிழ்வும் குதுகலிப்புமே.
வேறு சிலருக்கு வேறு விதமான மனக்கோளாறு.உலகத்தில் நடைமுறையில் இருக்கும் மருந்துகளின் பெயர்களை எல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள்.இதில் இவர்களுக்குத் தனி உற்சாகம் பிணிவாய்ப்பட்டு இவர்கள் டாக்டரை நாடிச் செல்லும்போது நோய்த் தமக்கா அல்லது வந்த மனிதருக்கா என்ற சந்தேகம் டாக்டருக்கே வந்து விடும்.
அந்த அளவுக்கு தமது நோயைப்பற்றி நோயாளி டாக்டரிடம் வாதம் பண்ணத் தொடங்கி விடுவார் டாக்டர் மருந்து ஊசிபோடுதல் அறுவை சிகிச்சைப்போன்ற கால சிகிச்சை முறைகள் தற்காலிகக் குணம் அழிப்பவையாக உள்ளனவே தவிர நோயின் குணத்தையே வேறுடன் கலைந்து நிரந்தமான நலன் அழிப்பதாக இல்லை என்பது இன்றைய உலகம் முழுவதும் நிலவும் பொதுவான கருத்தாகும்.
நோய் முற்றிய நிலையில் அறுவைச் சிகிச்சை போன்றவை சில நவீன முறையில் ஓரளவு பயன் உள்ள அவசர சிகிச்சையாக இருக்கின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை.என்றாலும் மனிதனுக்கு வருகின்ற ஒவ்வொரு பிணிக்கும் அறுவை சிகிச்சை கொண்டிருக்க முடியாதல்லவா.நவீன முறை மருந்துகள் மாத்திரைகள் போன்றவை ஆரம்பத்தில் நோயை குணப்படுத்துவது போலத் தோன்றினாலும் பின்னாலில் அதே நோய் வேறு உருவத்தில் தோன்றுவதை அவற்றால் தடுக்க முடியவில்லை.மற்றும் நவீன முறை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் காரணமாக இருதயம், நுரையீரல் இரைப்பைக் ,குடல் போன்ற உறுப்புக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக நவீன மறுத்துவத்துறை அறிஞர்களே கருத்து தெரிவிக்கின்றனர்.
சில வகை மருந்துகளை ஒரு முறை உண்டு விட்டால் அப்புறம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் அதையே சாப்பிட்டாக வேண்டிய வழக்கத்தையும் அவைத் தோற்றுவித்து விடுகின்றன என்ற கருத்தும் பேசப்படுகின்றன.
அவ்வாறு சாப்பிடாவிட்டால் தொடர்ந்து உடல்நலம் கெடுகின்றது என்ற உண்மையினையும் கண்டு பிடித்திருக்கின்றனர்.
உடலில் சத்து குறைவு இருக்கின்றது என்பதற்காக டாக்டர்களின் ஆலோசணைப்படி வைட்டமின் மாத்திரை வகைகளை மக்கள் பெருமளவு விழுங்கி வருகின்றார்கள்.
வைட்டமின் மாத்திரைகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சாப்பிட்டால் அதுவே புற்றுநோய்க்கு அடி கோலி விடுகின்ற பயங்கர உண்மையை நவீன மருத்துவ துறை அறிஞர்கள் மத்தியில் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க மருத்துவயியல் தகவலானது தக்க சான்றாக அமைகின்றது.
நவீன மருத்துவ துறையையும் மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் குறை கூறுவதற்காக இவ்வாறான தகவல்களை சொல்ல வில்லை.
இப்படிப்பட்ட விசப் பரீட்சைகளை தேவையில்லைத ஒரு வழிமுறை நம் கையில் இருக்கும்போது வீணாக ஏன் நம் உடலை முன் வைத்து சோதனையில் இறங்க வேண்டும்.
என்பது இன்றைய காலகட்டத்தின் கேள்வியாகவே கருத்தப்படுகின்றது.
முறையான உணவுப் பழக்கமும் சத்தான உணவும் இல்லாமைதான் ஒரு மனிதனை பிணிக்கு இலக்காக்கின்றன.என்ற உண்மையை நவீன மருத்துவ இயல் அறிஞர்களும் ஒப்புக் கொள்கின்றார்கள்.
நெறிமுறையற்ற. உணவுப்பழக்கம் காரணமாக வயிற்று வலியை உண்டாக்கிக் கொண்டு வயிற்று வலிக்காக மருந்து தேடி ஓடுவதை விட உணவுபழக்கத்தை ஒழுங்குப் படுத்துவதன் மூலம் மக்கள் வயிற்று வலியை வராமல் தற்காத்துக்கொள்வது நல்ல விடயமாகுமே.
சத்துணவைச் சீரான அளவில் உண்ணாத காரணத்தால் உடல் உறுப்புகள் பலவீமடைந்து தத் தம் செயலாற்றலை இழப்பதன் காரணமாகத்தான் இருத நோய்,நீரிழிவு, காசநோய் சுவாச காசம், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள் தோன்றுகின்றன.இந்த உண்மையை உலகம் முழுவதிலும் எல்லா விதமான மருத்துவ இயல் அறிஞர்களும் ஏற்றுக்கொள்வது சிறப்பு.
மேற்குறித்த நோய்கள் வந்து பற்றும் வரை காத்திருந்து அப்புறம் படுக்கையில் கிடந்து மரண அவஸ்த்தைப்பட்டு வைத்தியசாலைகளையும் பெரிய பெரிய டாக்டர்களையும்நாடிச் சென்று பொருளைச் செலவு செய்வதற்குப் பதிலாகச் சத்துணவைத் தேடி உண்டு நோயே ஏற்படாமல் முன் எச்சரிகௌகையாக உடல் நலத்தைக் காத்துக் கொள்வது சிறந்த பழக்கமாகக் கருதப்படுகின்றது.
நாம் உண்ணும் உணவில் பல விடயங்கள் மருத்துவத்தில் செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்க வேண்டும்.
உணவின் மூலம் நாம் பெறக்கூடிய சக்தி நமது செயலாற்றும் திறனை அளிக்கின்றது. உணவை நாம் முறையாக அளவுக்கதிகமாக உட்கொள்வது கேடுவிளைவிக்கும்.
நாமும் விஞ்ஞான உலகில் பற்பல சாதனைப் படைக்க மருத்து துறை உதவுகின்றது.
நம்மையும் நம்மைச்சுற்றிய சமுதாயத்தையும் பாதுகாப்பது சிறப்பாகும்.
Whats Your Reaction?






