விடை தெரியா விடிவெள்ளி பெண்ணே
புதுமை பெண்
காரிருள் கவ்வி கொண்ட நேரம் அந்த பேருந்து நிறுத்தத்தில் பயம் என்னும் போர்வை போர்த்தி கொண்டு பேருந்திற்காக காத்துக் கொண்டடிருந்தாள் அவள்.மணி இரவு பத்தை தாண்டியிருக்க பேருந்து வந்த பாடில்லை வீட்டில் பிறந்து சில மாதங்களேயான குட்டி தம்பியும் ஒருவன் இருக்கின்றான்.அவள் சீக்கிரம் செல்ல வில்லையென்றால் அழுதழுதே மூச்சடைத்து போவான் குழந்தை.
அவனை பொறுப்பாய் பார்த்து கொள்ள அந்த பிரமாண்ட மாளிகையில் ஒரு உறவுகள் கூட இல்லை என்பதே உண்மை. பெரிய தொழிலதிபரின் மகள் பெயர் சுபத்திரை ஒரு வருடத்திற்கு முன்பு தந்தை மாரடைப்பால் இறந்து விட்டார் இருபதே வயதில் தொழிலை பார்த்துக்கொள்ளும் மிகப்பெரும் பொறுப்பு சுபத்திரையின் கையில்.
தொழில் விஷயமாக சுபத்திரை வெளியூர் செல்ல வேண்டிய கட்டாய நிலை தாயை மட்டும் தனித்து விட்டுவிட்டு வெளியூருக்கு அவள் சென்றிட அப்பாவியான சுபத்திரையின் தாய் கல்யாணி பாவிகளின் கையில் சிக்கி சீரழிந்து போனாள்.
சுபத்திரையின் தந்தைக்கு வயது அதிகம் தாய்க்கு வயது குறைவு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
கணவன் இறப்பில் சேர்ந்திருந்த கல்யாணி சுபத்திரை வெளியூர் சென்ற பிறகு மனமாற்றத்திற்காக வெளியே சென்று வர சில வெறிப்பிடித்த மிருகங்கள் வயது வித்தியாசம் பாராது அவளை வேட்டையாடின.
ஊருக்கு திரும்பி வந்த சுபத்திரை கண்டது சித்தம் கலங்கி போன தாயை தான்.டாக்ர்களை வைத்து பரிசோதிக்க கல்யாணி கர்பமாக இருப்பது தெரிய வர நெருங்கி போனாள் சுபத்திரை.தான் அருகில் இருந்திருந்தால் தன் தாயிற்க்கு இந்த நிலை வந்திருக்காது என்று உள்ளுக்குள் கலங்கி துடித்தாள்.
சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண் சுபத்திரை அவள் தாய் கர்பமாக இருப்பது வெளியே தெரிந்தால் பலரும் கேலி செய்வார்கள் அவள் தொழில் இதனால் பாதிக்கப்படும் ஆகவே குழந்தையை கலைத்து விடும் படி அனைவரும் சொல்லியும் சுபத்திரைக்கு ஏனோ பிறக்காத ஒரு ஜீவனை அழிக்க மனம் ஒப்பவில்லை.
அவளை பொறுத்த வரை அந்த குழந்தை தன் தாய் வயிற்றில் வளருகிறது தந்தை யாராக இருந்தால் என்ன தாய் இருவருக்கும் ஒன்று தானே என முடிவாகு கருவை கலைக்க மறுத்து விட்டாள் பாவை.
போலீஸில் புகார் கொடுத்து தேடியும் கல்யாணியை நாசம் செய்தவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.கல்யாணி சித்தம் கலங்கி போயிருந்ததால் குற்றவாளிகளையும் அடையாளம் காட்ட முடியவில்லை.
நாட்கள் வேகமாய் நகர தாயை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டாள் சுபத்திரை பாவம் கல்யாணி வயது போன காலத்தில் ஒரு பிள்ளையை பெற்று மகள் கையில் கொடுத்து விட்டு பொல்லாத பூமியில் இருந்து விடுதலை பெற்று கணவனுக்கு துணையாய் விண்ணுலகை அடைந்து விட்டாள்.
தம்பியை தன் பிள்ளையை போல வளர்க்க ஆரம்பித்து விட்டாள் சுபி.அக்ரோதனன் என்று பெயரிட்டு ராஜாவை போல வளர்த்தவளை பார்த்து நிறைய கேலி கிண்டல்கள் எழும்பாமல் இல்லை.அவள் காது படவே பலர் அவள் தாயை குறை கூறுவார்கள் இவன் உன் தம்பியா இல்லை மகனா என்று கிண்டல் செய்வார்கள்.
அதையெல்லாம் சுபி காதில் போட்டுக் கொள்ளவே யார் என்ன சொன்னாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுச் செல்லும் ரகம் அவள்.
வழக்கமாக அவள் காரில் தான் வீட்டிற்க்கு செல்வாள் இன்று அவளின் காரில் சிறு கோளாறு ஏற்படவே டிரைவரிடம் அதை கவனிக்குமாறு சொல்லி விட்டு பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றாள்.
அவள் எண்ணம் முழுவதும் அவளின் குட்டி தம்பி மட்டுமே நிறைந்திருந்தான் வீட்டில் ஆயிரம் வேலைக்காரர்கள் வேளாவேளைக்கு அவனை பார்த்து கொண்டாளும் அவன் அக்காவின் அரவணைப்பை தேடியே அழுவான்.
கைக்கடிகாரத்தையும் பாதையையும் மாறி மாறி பார்த்த வண்ணம் அந்த பேருந்து நிலையத்தில் அவள் நின்றிருக்க..
ஒரு பெண் தனித்திருந்தாள் காற்றும் கூட அவளுக்கு துரோகம் செய்யும் போல பெண்வாடையை எடுத்துச் சென்றது காமுகர்கள் நாசிக்கு.
குடி போதையில் தள்ளாடிக் கொண்டே அவளை வேட்டையாட வந்து விட்டன நான்கு வெறிநாய்கள்.
என்னம்மா பொண்ணு தனியா நிக்கிற தொணைக்கு யாரும் இல்லயா என்றான் ஒருவன்..
பஸ் வர வரைக்கும் நாங்க நாளு பேரும் தொணைக்கு இருக்குறோம் நீ ஒன்னும் கவல படாத என்றான் ஒருவன்.. புடவை மறைத்த அவள் வளைவு நெளிவுகளை ஆராய்ந்து கொண்டே.
பயத்தில் உடல் வெலவெலத்துப் போனவள் மனக்கண்ணில் தாய் கல்யாணி வந்து போனாள். அவசரவசரமாக தன் ஹேன்ட் பேக்கில் வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து அவர்கள் மீது அடிக்க நால்வரும் அதை லாவகமாக தட்டிவிட்டார்கள் .
இதற்கு மேல் இங்கிருப்பது சரியாகாது என்று இருளை கிழித்துக்கொண்டு ஓடத்தொடங்கிவிட்டாள் பாவை.
காமுகர்கள் நால்வரும் அவளை துரத்தி ஓடிக்கொண்டிருக்க அவர்களை தொடர்ந்து அவளை நெடுநாளாய் கண்களால் கலவாடிக்கொண்டிருந்த ஒரு உருவமும் ஓடியது.
எவ்வளவு தூரம் ஓட முடியும் ஒரு குறுக்கு பாதையில் கால் இடறிட மாட்டிக்கொண்டாள் பாவை பாவியர்களிடம்...
மறுநாள் காலை தொலைக்காட்சி செய்தியில் ஓடிக்கொண்டிருந்தது பல நாளாக இரவில் தனியாக செல்லும் பெண்களை வன்புணர்வு செய்த கும்பல் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் கொலை என்று.
உறங்கிக் கொண்டிருந்த அர்ஜுன் தேவ் காதிலும் அச்செய்தி நன்றாகவே விழுந்தது கண்களை மூடி புன்னகைத்துக் கொண்டே இன்னும் இறுக்கிக்கொண்டான் கழுத்தில் புதுத் தாலி மின்ன தன்னை அணைத்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மணாளினி சுபத்திரையை.அவர்கள் அருகில் அக்ரோதனனும் உறங்கி கொண்டிருந்தான்.
அவளே தான் ராத்திரி கயவர்களிடம் கற்பை காக்க ஓடிக்கொண்டிருந்தவள் நம் சுபத்திரையே தான்.
நடந்தது இது தான் காமுகர்கள் அவளை துரத்தவில்லை அவள் தான் அவர்களை இழுத்து வந்திருந்தாள். மூச்சிறைக்க ஓடிக்கொண்டிருந்தவள் குறுக்கு பாதை வரவும் நின்று நிதானமாக திரும்பி
மர்ம புன்னகையுடன் யார் முதல்ல வாரிங்க என்றாள்.
டேய் மாமே இது அந்த மாதிரி பொண்ணுடா நம்மல பிளான் பண்ணி மறைவான எடுத்துக்கு இட்டாந்துருக்கு நானே மொதல்ல போறேன் டா என்று ஒருவன் முன்னால் போக அவனை ஒரு மரத்திற்கு பின்னால் அழைத்துச் சென்றாள் சுபத்திரை.
சென்றவள் கொஞ்சமும் யோசிக்காமல் தன் பேக்கில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவன் ஆணுறுப்பில் ஊற்றி விட்டாள்.
அவன் அலறலில் மற்றவர்கள் ஓடிவர ஒவ்வொருவரையும் மறைந்திருந்து இதேபோல் ஆசிட்டால் அபிஷேகம் செய்தாள்.
பின் அனைவரையும் ஒரு இடத்தில் போட்டு அவர்கள் அலறி துடிக்க துடிக்க ஆணுறுப்பை வெட்டி காட்டு விலங்குகளுக்கு இறையாக்கினாள்.
ஒவ்வொருவரும் கத்தி கதறிட அவர்களின் துடிப்பை கண்களில் ஒருவிது குரூரத்துடன் பார்த்து கொண்டிருந்தவளை இழுத்து பிடித்தது ஒரு கரம்.கண்கள் சிவக்க அவள் திரும்ப காக்கி உடையில் கம்பீரமாக நின்றிருந்தான் DSP அர்ஜுன் தேவ் .
போலீஸை கண்டும் அவள் முகத்தில் சிறிதும் பயமில்லை.எதற்காக பயப்பட வேண்டும் அவள் என்ன நல்லவர்களையா தண்டித்தாள் வெறி நாய்களையல்லவா தண்டித்தாள் அப்படியிருக்க எதற்கு பயப்பட வேண்டும்.
நா உன்ன ரொம்ப நாளா ஃப்ளாவ் பண்ணிட்டு தான் இருக்கேன் உன்னோட தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த மாதிரி நாய்ங்கள ஜெயில்ல புடிச்சி போட்டாளும் அரசியல் ,பணம், செல்வாக்க வச்சி சாட்சிகள அழிச்சு ஈசியா வெளிய வந்திடுவானுங்க.
அவனுங்களுக்கு நீ கொடுத்த தண்டனை தான் சரி சுபி. இவனுங்க கையெல்லாம் சட்டம் தண்டிக்கும்னு சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தினாலும் நம்மலால ஒன்னும் பண்ண முடியாது.மஹிஷாசுரன வதம் செய்ற மாதிரி இவங்கள வதம் செய்யனும்..என போலீஸ்காரனும் அவளுக்கு ஆதரவாய் நின்றான்.
எனக்கு அம்மா அப்பா சொந்தம் யாரும் இல்ல.நீ என்ன கல்யாணம் பண்ணி எல்லாமுமா இருப்பனு நினைக்கிறேன் என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா சுபி அர்ஜுன் தேவ் சட்டென்று தன் காதலையும் போட்டு உடைத்து விட்டான் அவளோ அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
நீ என்ன யோசிக்கிறனு எனக்கு புரியுதுமா உன்னோட தம்பிய நெனச்சு தானே தயங்குற.உனக்கு அந்த கவலையே வேண்டாம் இனி அவன் என்னோட பொறுப்பு.நீ பிஸ்னஸ கவனிச்சிக்கலாம் நா வீட்டையும் மச்சானையும் கவனிச்சுக்கிறேன் என்றான் போலிஸ் காரன்.
அவன் வார்த்தைகளில் பொய் இல்லை உண்மையான உறுதியான வார்த்தைகள் அவை . என்று கல்யாணிக்கா கம்ளைன்ட் கொடுக்க வந்த சுபத்திரையை ஸ்டேஷனில் கண்டானோ அப்பொழுதே அவள் தைரியத்தில் கவர்ந்திலுக்கப்பட்டான்.
பின்னர் அவளை பின்தொடர சிக்கியது அவள் சாகசங்கள் பகலில் பெண்ணாய் இருப்பவள் இராத்திரியில் பெண் சிங்கமாய் மாறிப்போவாள்.இரவில் அப்பாவி பெண்ணை போல தனியாக ரோட்டில் செல்வாள் காமுகர்கள் யாரேனும் சிக்கி விட்டாள் போக்கு காட்டி அவர்களை சத்தமில்லாமல் சாய்த்து விடுவாள்.
இவை அத்தனையும் மறைந்திருந்து கண்ட அர்ஜுன் தேவ் உள்ளுக்குள் பூரித்து போனான் இப்படியும் ஒரு பெண் பூமியில் பிறந்திருக்கிறாளா என்று. பொல்லாத உலகில் தனித்து போராடும் அவள் தைரியத்தில் விழுந்த கமிஷனர் காதலும் கொண்டு விட்டான்.
சொல்லு சுபி உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா மறுபடியும் அவள் சம்மதம் வேண்டி நிற்க.
போலிஸ் காரன் கண்ணில் என்ன கண்டாளோ நாயகியவள் தலை தன்னிச்சையாக ஆட தன் தாயின் தாலியை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே சுற்றியிருப்பான் போல அர்ஜுன் தேவ்
அதனை உடனே எடுத்து அவள் சங்கு கழுத்தில் பூட்டி அவளை அர்ஜுனனின் சுபத்திரையாக்கி கொண்டான்.
பின் வீடு வந்து தன் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்து விட்டு புது வாழ்வில் காலடி எடுத்து வைத்தாள் காரிகை.
இரவெல்லாம் கத்தி கதறியே இறந்து போனார்கள் காம பிசாசுகள் அவர்களிடம் சிக்கி சீரழிந்த பெண்களின் கதறல்கள் எல்லாம் உயிர் உருகும் நொடி தனில் கண்முன் வந்து போனது.
பெண்கள் பலவீனமானவர்கள் தான் ஆனால் வலியை தாங்கும் போது ஆணையும் மிஞ்சுகிறாள் பெண். தன் உறுப்பை பிளந்து ஒரு மகவை ஈன்ற பின்பும் அடுத்த குழந்தைக்கு தயாராகும் பொழுது தெரியும் ஒரு பெண்ணின் தைரியம் எந்த அளவு என்று.
காலங்கள் மாறிவிட்டது டெக்னாலஜி வளர்ந்து உள்ளங்கையில் அடங்கி விட்டது ஆனால் பெண்களிற்கான நீதி மட்டும் கிட்டிய பாடில்லை இந்த நொடி கூட உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கொண்டிருக்கலாம்.
பாரதி கண்ட புதுமை பெண்கள் எல்லாம் கற்பனையில் மட்டுமே நிஜத்தில் ஒரு பெண் தைரியசாலியக எதிர்த்து நின்றால் முதலில் தாக்கப்படுவது அவளது நடத்தை தான்.ஒருத்தி அநியாயத்தை தட்டி கேட்டாள் அடங்கா பிடாரி ,திமிர் பிடித்தவள் ,நடத்தை கெட்டவள் இது தான் நிதர்சனம்.
ஒரு ஆண் தன்னை தவறாக பார்த்தல் அவன் கண்ணை குத்தும் பெண்களை விட ச்சீ என்று முகத்தை திருப்பி கொள்ளும் பெண்கள் தான் இங்கு அதிகம் நானும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதே இன்னும் வேதனை.
பெண்ணே முடிந்த அளவு போராடு முடியவில்லை என்றால் அழித்து விடு. குப்பைகள் என்றும் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையே இல்லை கற்பு என்பது உடலில் அல்ல உன் தைரியத்தில் உள்ளது காமுகர்களிடம் சிக்கி சீரழிவதை விட அவனை கொன்று ஜெயிலில் வாழ்வதே மேல் உன்னால் இன்னொரு பெண்ணின் வாழ்வாவது காக்கப்படும்.
நன்றிகள்..