அமிர்தத்தின் சாகரமே -2

காதல்

அமிர்தத்தின் சாகரமே -2

கவின் அமிர்தா இருவரின் குடும்பமும் நடுத்தர குடும்பமே அமிர்தாவின் தாய் பார்வதி அரசுப்பள்ளி ஆசிரியை தந்தை குணசேகரனும் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.தங்கை பிரவளிக்கா பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள்.

தரகர் மூலமாக நல்ல வரன் என வந்தவர்கள் தான் கவின் குடும்பத்தினர்.குணசேகரனுக்கும் வயதாகி கொண்டு செல்வதினால் மகளின் திருமணத்தை காண ஆவல் கொண்டு கவினுக்கும் அமிர்தாவிற்கும் உடனே திருமண ஏற்பாடு செய்து விட்டார்.

ஆனால் அதற்குள் இடையில் புகுந்த சாகரன் அனைத்தையும் கெடுத்து விட்டான்.

கவின்... என்ன கட்டிக்கொண்டு அவன் அருகில் ஓட விளைந்த அமிர்தாவால் ஒரு அடி கூட நகர முடியவில்லை அந்த அளவிற்கு அவளை இறுக்கமாய் பிடித்திருந்தாஒ சாகரன்.

ப்ளீஸ் கவின விட்ருங்க அவன் பாவம் விட்ருங்க...என சாகரனிடம் அமிர்தா கொஞ்சி கதறிட.. கோபத்தில் அவன் முகம் சிவந்து போனது.

நோ பேபி நீ அழக்கூடாது அப்படியே நீ அழுதாலும் அது எனக்காக மட்டும் தான் இருக்கணும் கண்டவனுக்காக எல்லாம் நீ அழுதா  நான் இவனை உயிரோடவே விடமாட்டேன் என அவன் எச்சரிக்கை செய்யதிட அவசர அவசரமாக கண்ணை துடைத்து கொண்டாள் அமிர்தா.

நா..நா அழ மாட்டேன் ப்ளீஸ் கவின ஒன்னும் செஞ்சிடாதிங்க அவன விட்ருங்க நீங்க என்ன சொன்னாலும் நா செய்யுறேன் விசும்பி கொண்டே கேட்டவளை அழுத்தமாக பார்த்து கேட்டான் சாகரன்.

என்ன சொன்னாலும் செய்வியா பேபி என்றவன் அவளை பின்னால் இருந்து அனைத்து அவள் கைகளில் ஒரு கத்தியை வைத்தான்.அவன் செய்கை புரியாத அமிர்தாவோ கத்தியையும் சாகரனையும் மாறி மாறி பார்க்க அவளின் கரத்தை பிடித்து கவினின் நெஞ்சில் கீறினான் சாகரன்.

சார் என்ன பண்றிங்க பதறி விலகிட பார்த்தாள் அமிர்தா.வலியில் கவின் வேறு கதறிக் கொண்டிருந்தான்.

உனக்கு ஒன்னு தெரியுமா பேபி உன் கல்யாணத்தை நிறுத்துனதே நான் தான்.இந்த நாய உன்ன கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு மிரட்டுனே இவன் கேக்கல அதான் இவன கிட்னாப் பண்ணுனேன்.கல்யாணம் நின்ன பிறகு விட்றலாம்னு தான் நினைச்சேன் ஆனா இவன் என்னடான்னா உன்னை அடைஞ்சே தீருவேன்னு என்கிட்டயே சவால் விடுறான் பேபி..என்றவன் விழிகளில் அத்தனை உக்கிரம்.

நீ என்னோட பேபி டால் இல்லாயா இவன் எப்படி பேபி உன்ன கல்யாணம் பண்ணிக்க பார்க்கலம்...நீ எனக்கு சொந்தமானவ அதான் இவன மொத்தமா முடிச்சிட்டு நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி ஹேப்பியா வாழ்வோம் என்று காதோரம் ரகசியம் போல் அவன் கூற...

வலி நிறைந்த பார்வை பார்த்தாள் அமிர்தா அவனை.அந்த பார்வை சாகரனின் இதயத்தை ஏதோ செய்தாலும் வெளியே விரைப்பாக நின்றவன் மீண்டும் கவின் உடலில் கத்தியால் கீற அவனோ அலறித் துட்டித்தான்.

இவன் கிட்ட இருந்து தப்பிச்சு போய்டு அமி அவன் பேச்சை கேக்காத...என வலியிலும் கவின் கத்த சாகரனோ அமிர்தாவின் கரத்தை இன்னும் இருக்கமாய் பிடித்து கவினின் நெஞ்சில் கத்தியை வைத்து அழுத்த கத்தியை மெதுவாக அவன் நெஞ்சை பிளந்து கொண்டு உள்ளே சென்றது.

நோஓஓஓ ஐ கான்ட் என்று கத்தியபடியே சாகரனின் மார்பின் மீது மயங்கி சரிந்தாள் அமிர்தா.

ஹேய் பேபி...பயந்துட்டா போல என்ற படி அவளை கையில் ஏந்தி கொண்டு காரை நோக்கி விரைந்தான்.

தன் உடலை ஏதோ மலைப்பாம்பு இறுக்கியிருந்ததை போல வலியெடுக்க வலியில் முகம் சுனங்கியபடி கடினப்பட்டு கண்களை திறந்துவளுக்கு எதிரே உறங்கி கொண்டிருந்தான் அமிர்த சாகரன்.

தன் உடலை இருக்கியது மலைப்பாம்பு அல்ல அவனின் இரும்பு கரமென்று உணர அவளுக்கு வெகு நேரம் தேவைப்படவில்லை.

அவனின் கரத்தை விலக்கிவிட பார்க்க தூக்கத்தில் சினுங்கி கொண்டே இன்னும் அவளை ஒட்டி படுத்து கொண்டான் அவன்.

ஏனோ அவன் அருகாமை அவளுக்கு ஒரு வித அவஸ்தையை கொடுக்க உறங்குபவனையே விழியகாலாது பார்த்து கொண்டிருந்தாள்.அரக்கன் போல கவினை கொடுமை படுத்தியவனா இவன் பச்சை குழந்தை கூட தோற்று விடும் உறங்கும் இந்த வளர்ந்த குழந்தையின் முன்னால்.

எந்த விதத்திலும் அவனை யாரும் கெட்டவன் என்று சொல்ல மாட்டார்கள் இங்கு வந்ததிலிருந்து வீட்டில் வேலை செய்யும் அனைத்து வேலைக்காரர்களிடமும் விசாரித்து விட்டாள் அமிர்தா ஒருவரும் சாகரனை குறை கூறவில்லை.

யாரை கேட்டாலும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த முதல் பெண் என்று அமிர்தாவை மட்டுமே கைக்காட்டினார்கள்.இத்தனை நல்லவனாய் இருப்பவன் அமிர்தா விஷயத்தில் மட்டும் சைக்கோ தனமாய் நடந்து கொள்கிறான் என்று புரியவில்லை அவளுக்கு.

காயத்திற்கு கட்டு போட்டதற்காகவா இந்த காதல் நிச்சயமாக இல்லை அப்படியென்றால் அவன் காயத்திற்கு மருந்து போடும் வைத்தியர் மீத காதல் வந்திருக்க வேண்டுமே.. கண்ணீர் அவளின் கண்ணீரால் வந்த காதல் இது சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து அன்புக்கு ஏங்க அனாதையாக வளர்ந்தானே அவனுக்காக ஒருத்தி அழுததினால் அவள் மேல் வந்த காதல் இது.

உறக்கத்திலும் அவன் உள் மனது அவளை தான் நினைத்து கொண்டிருக்கும் போல சட்டென்று எழுந்து அமர்ந்தவன் தூங்கலையா பேபி என்றான் அமிர்தாவை பார்த்த.அவற் எழுந்ததில் திடுக்கிட்டவள் பின்..இல்ல எனக்கு தூக்கம் வரல என்றாள் எங்கோ முகத்தை திருப்பி கொண்டு.

சரி இரு வாறேன் என்றவன் எழுந்து சென்று சிறிது நேரத்தில் பால் கிளாஸுடன் திரும்பி வந்தான்.

பசில தான் தூக்கம் வரமா இருக்கும் இத குடி என்றவன் அவளுக்கு பாலை புகட்டிட மறுக்காமல் அதனை குடித்தவளை தூக்கி கொண்டு பால்கனி பக்கமாய் சென்றான்

அங்கு போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தவன் குழந்தையை போல அவளை மடியில் அமர வைத்தபடி அவள் தளிர் கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்து கொண்டான். 

தூரத்தில் தெரியும் இரண்டு நட்சத்திரங்களை காட்டியவன்..அதோ அங்கே தூரமா ரெண்டு நட்சத்திரம் தெரியுது பாரு பேபி அது தான் என்னோட அம்மாவும் அப்பாவும் எனக்கு பத்து வயசா இருக்கும் போது ஒரு ஆக்சிடன்ட்ல இறந்து போய்ட்டாங்க என்னோட அம்மா கூட உன்ன மாதிரி தான் ரொம் ஸ்வீட் தெரியுமா..

அம்மா உயிர் போகும் போது நா அழுதுட்டே இருந்தேன் அப்போ அம்மா சொன்னாங்க நமக்காக வாழ்க்கையில அழற உறவுகள் கிடைக்கிறது ரொம்ப கஷ்ட்டம் அப்படி ஒரு உறவு கிடைச்சா அத மிஸ் பண்ணிடாதே கண்ணானு சொல்லிட்டே அம்மா போய்ட்டாங்க என்றவனி ஒரு துளி கண்ணீர் பெண்ணவள் முகத்தில் பட்டு தெரித்தது.

ஒரு கையால் அதை துடைத்து கொண்டவன் பெண்ணவள் விழி நோக்கி மொழிந்தான் அம்மா சொன்ன அந்த உறவு நீ தான்..அம்மா தான் உன்ன எனக்காக அனுப்பி வச்சிருக்காங்க உன்ன எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று அவள் பிறை நெற்றியில் இதழ் பத்தித்தவன் மார்போடு அவளை அனைத்து கொண்டான்.

என்ன மாதிரியான உணர்விது சொல்ல தெரியவில்லை மெல்லிய மனது படைத்த பூவையவளுக்கு ஆணவன் கவலை தோய்ந்த முகம் அவள் மனதை பிசைய ஆரம்பித்தது.அவனது வலி அவளுக்கும் தொற்றிக் கொண்டது.

அவன் மார்பு கூட்டுக்குள் இருந்து மெல்லமாய் தலையை நிமிர்த்தி பார்த்தவள் க...கவின..விட்ருங்களே.. எனக்காக என்றாள் தாழ்ந்த குரலில்..

 

ஏன் நீ அவன காதலிக்கிறியா என்றான் சாகரன் அவளை ஆராய்ந்தபடி..இல்லையென வேகமாக தலையசைத்தாள் அமிர்தா.

அப்பறம் எதுக்காக அவன கல்யாணம் பண்ண சம்மதிச்ச..

அது அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருந்தது அதனால கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்..

அம்மா அப்பாவுக்கு பிடிச்சதால மட்டும் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கே உனக்கு அவன் மேல லவ் வரல அப்படி தானே...

ஆமா ஒரு வேலை கல்யாணத்துக்கு அப்புறம் லவ் வரும்னு நினைச்சு ஓக்கே சொன்னேன் என்றாள் அமிர்தா சாகரனின் மடியில் இருந்த படியே..

ஹாஹா... அப்போ அதே மாதிரி என் மேலேயும் லவ் வர வாய்ப்பு இருக்கு தானே என்றான் குறும்பாய்.

இருக்கலாம் என உதட்டை சுழித்தவள் இருந்த கொஞ்ச தூக்கமும் உங்களால போச்சு உதட்டை பிதுக்கி பாவமாய் கூறியவளை மடியில் வாகாக அமர வைத்தவன் அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு பாடினான்.

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்

நீரிலும் பொருள் எடை இழக்கும்

காதலில் கூட எடை இழக்கும்,

இன்று கண்டேனடி

அதை கண்டு கொண்டேனடி…

காதல் தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது..

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்

பசியோ வலியோ தெரியாது…

கையில் மிதக்கும் கனவா நீ..

கை கால் முளைத்த காற்றா நீ..

கையில் ஏந்தியும் கணக்கவில்லையே..

நுரையால் செய்த சிலையா நீ…

அவன் பாட்டு பாடிட அவன் மார்பு கூட்டுக்குள் தாயின் கதகதப்போடு சுகமாய் உறங்கிப்போனாள் அமிர்தா.

நிலவு தேவி பாய் சொல்ல சூரிய தேவன் பூமிக்கு ஹாய் சொல்லி தன் கடமையை ஆரம்பித்திட மன்னவன் பிடியில் இருந்து கண்விழித்தாள் அமிர்த வர்ஷினி.

தன் பொம்மையை யாரேனும் பிடுங்கி கொண்டு போய்விடுவார்களோ என உறக்கத்திலும் அதனை இறுக்கி பிடித்து உறங்கும் சிறு குழந்தை போல அமிர்தாவை இறுக்கி அணைத்து உறங்கியிருந்தது வளர்ந்த குழந்தை.

அவனை மெதுவாக விலக்கி படுக்க வைத்தவள் எழுந்து சென்று குளித்து விட்டு அவனுக்காக காஃபி போட்டு கொண்டு வர அவனும் குளித்து முடித்து விட்டு ஆஃபிஸ் செல்ல ரெடியாகி கொண்டிருந்தான்.

அவனுக்கான காஃபியை மேசையில் வைத்தவள் பால்கனியில் சென்று தோட்டத்தை ரசித்து கொண்டே காஃபி குடிக்க இங்கே ஒருவனுக்கு உடலில் புதுவித ரசாயன மாற்றம் ஏற்பட்டது.

காஃபியை பருகும் முன் மெரூன் வண்ண சேலையில் குளித்து முடித்து உச்சியில் இருந்து நீர் சொட்ட நின்ற அழகு பதுமையவளை கண்களால் பருகி கொண்டிருந்தான் கள்வன்.

காஃபி குடித்து கொண்டிருந்தவளின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தவன் கசங்கியிருந்த அவள் புடவை சுருக்கத்தை அழகாக நேர்த்தியாக்கி விட்டான்.

எல்லா பெண்களுக்கும் உள்ள அட்ப ஆசையில் இதுவும் ஒன்று.தன்னவன் தனக்காக செய்யும் சிறு சிறு விடயங்கள் கூட பெண்களுக்கு பெரிதாய் தெரியும் பொழுது அமிர்தா மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன..?

ரொம்ப ரொம்ப அழகா இருக்க பேபி..என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட சிலிர்த்தடங்கியது அவளது உடல்.

ஆழமான அன்பை ஆத்மார்த்தமாக உணரவைக்கும் முத்தமது என்பதை நன்றாகவே புரிந்து கொண்டாள் அமிர்தா.

ஓக்கே பேபி டைம் ஆச்சு நா ஆஃபிஸ் போகனும் நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு எது வேணும்னா மெய்ட் கிட்ட சொல்லு செய்வாங்க என்றவன் நகரப்போக அவன் கைப்பிடித்து தடுத்தாள் அமிர்தா..

என்ன என்பதை போல அவன் பார்க்க நானும் ஆஃபிஸ்க்கு வாறேனே ரூம்குள்ளேயே இருக்க போரடிக்கிது என குழ்நதையை போல கெஞ்சியவளை மறுக்க மனம் வரவில்லை சாகரனுக்கு.

சரி வா போவோம் என்று அவளை அழைத்து கொண்டு மகிழ்ச்சியாய் சென்றவன் அறியவில்லை திரும்பி வரும்போது அந்த மகிழ்ச்சி தொலைந்திருக்குமென்று.

தொடரும்...

இக் கதையின் அனைத்து பாகங்களும் கீழே

பாகம் 1

பாகம் 2