அகரம் இப்போ சிகரம் || AGARAM IPPO SIGARAM || WITH LYRICS || KJ YESUDAS, SPB, RADHA Song Lyrics

பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு படம் : சிகரம் பாடியவர் : கே ஜே யேசுதாஸ் இயற்றியவர் : வைரமுத்து இசை : பாலசுப்ரமணியம்

பாடல் வரிகள் = With Lyrics

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி

சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன

கடுங்கோடை வந்தால் என்ன

மழைவெள்ளம் போகும்

கரைரெண்டும் வாழும்

காலங்கள் போனால் என்ன

கோலங்கள் போனால் என்ன

பொய் அன்பு போகும்

மெய் அன்பு வாழும்

அன்புக்கு உருவம் இல்லை

பாசத்தில் பருவம் இல்ல

வானோடு முடிவும் இல்லை

வாழ்வோடு விடையும் இல்லை

இன்றென்பது உண்மையே

நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்

கண்ணீரில் காதல் வாழும்

ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே

பசியாற பார்வை போதும்

பரிமாற வார்த்தை போதும்

கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமா இல்லை த

லை கோத விரலா இல்லை

இளங்காற்று வரவா இல்லை

இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது எ

றும்புக்கும் வாழ்க்கை உள்ளது