இன்றைய ராசிபலன்கள் -12.03.2021
நாளைய நாளுக்கான பஞ்சாங்கம், இராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்
12-03-2021, மாசி 28, வெள்ளிக்கிழமை, தேய்பிறைசதுர்த்தசி திதி பகல் 03.03 வரை பின்பு அமாவாசை. சதயம் நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்புபூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. அம்மன் வழிபாடு நல்லது. போதாயனஅமாவாசை.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை05.00-06.00, இரவு 08.00-10.00
|
|
|
செவ் ராகு |
|
|
சூரிய சந்தி புதன் சுக்கி |
திருக்கணித கிரக நிலை 12.03.2021 |
|
|
|
குரு சனி |
|
||
|
|
கேது |
|
|
இன்றைய ராசிப்பலன் - 12.03.2021
மேஷம்
இன்று வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள்குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்குபுதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாகசெயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமைசேரும் படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில்வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும்முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்புகிடைக்கும். சிலர் புதிய பொருட்கள் வாங்கிமகிழ்வார்கள்.
மிதுனம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரநெருக்கடிகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளால் மனஅமைதி குறையும். பிள்ளைகள் வழியில் அனுகூலம்உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில்கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர்விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத சுபசெலவுகள்ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்தஉதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளின்ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தைகாணலாம். வராத வெளிகடன்கள் வசூலாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலங்கள்உண்டாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம்வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர்பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம்
இன்று குடும்பத்தினரின் மாற்று கருத்தால் வீண்பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால்கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களைஅனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாகமேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள்இருந்தாலும் நற்பலன்கள் ஏற்படும். வருமானம்பெருகும்.
விருச்சிகம்
இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்துவேறுபாடுகள் தோன்றும். வரவுக்கு மீறிய செலவுகள்ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின்கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவிவழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில்உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள்குறையும்.
தனுசு
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிகசிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையேநல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலைமிகச்சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களால்இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோகரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாகநெருக்கடிகள் ஏற்படலாம். வெளி பயணங்களில்கவனம் தேவை. தொழிலில் கூட்டாளிகளைஅனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டிபொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள்எளிதில் கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடுஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீகசொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.
மீனம்
இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள்பிரச்சினைகள் குறையும். சிலருக்கு தொழில்சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம்அதிகரிக்கும். வேலையில் மகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும்.