இன்றைய நாள் எப்படி? Today rasipalan- 2022-01-07 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் மற்றும் 12 இராசிகளுக்கான தினப்பலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்
07-01-2022, மார்கழி 23, வெள்ளிக்கிழமை, பஞ்சமிதிதி பகல் 11.10 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 06.19 வரை பின்புஉத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருகவழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 07.01.2022
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடுசெய்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம்வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில்சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள்வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும்வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்குஎதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில்உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில்நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன்கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான்இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூடகால தாமதமாகும். பணிபுரிபவர்களுக்குஉத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள்அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புகிட்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம்இருக்கும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம்அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில்பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன்இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புஅமையும். திருமண முயற்சிகளில் இருந்த தாமதநிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில்நிலவிய கடன் பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.
கன்னி
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள்கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல்நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில்அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாதபிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில்சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தைஅடைய முடியும். பெற்றோரின் ஆதரவும்ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால்செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கானதிட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமைஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்துமுடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும்முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உடல்ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகிமுன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள்ஏற்படும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள்வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்துசென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள்கிடைக்கும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றிவாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரநிலை உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன்பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில்ஆர்வம் குறையும். உத்தியோகத்தில்உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது. தொழில்ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள்உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது.