இன்றைய ராசிபலன் 13.03.2021

இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம் மற்றும் இராசிபலன்கள்

இன்றைய ராசிபலன் 13.03.2021
Today rasipalan 13.03.2021

இன்றையபஞ்சாங்கம்

13-03-2021, மாசி 29 , சனிக்கிழமை, அமாவாசைதிதி பகல் 03.51 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 12.22 வரை பின்புஉத்திரட்டாதி. மரணயோகம் இரவு 12.22 வரை பின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வஅமாவாசை. மாசான கொள்ளை. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30, 

எம கண்டம்மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

 

இன்றைய ராசிபலன் -13.03.2021

மேஷம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன்செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள்ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள்வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடுஉண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சம்இருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால்மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில்அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாகஇருக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்றுசிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில்உள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண்பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில்மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில்சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன்செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன்இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளைதவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போதுநிதானம் தேவை.

சிம்மம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்லமுன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர்செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின்உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள்ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புஉண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.

துலாம்

இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும்எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதாரபிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களைதவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள்அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்தஇடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்குஉத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தனுசு

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்களநிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில்முன்னேற்றம் இருக்கும். தொழில் சம்பந்தமான நவீனகருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள்பூர்த்தியாகும். வேலைபளு சற்று குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்றகருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில்எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. கடன் பிரச்சினைகள் சற்றுகுறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் பயணங்கள்உண்டாகும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பும்ஆதரவும் கிட்டும். உறவினர்கள் வருகைமனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில்வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள்உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில்கிடைக்கும்.

மீனம்

இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலைகாணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில்காலதாமதம் ஏற்படும். மனஉறுதியோடுபிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள்பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம்அடைவீர்கள்.