இன்றைய நாள் எப்படி? Today rasipalan- 2022-01-11 செவ்வாய் கிழமை

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் 12 இராசிகளுக்கான தினப்பலன்கள்

இன்றைய நாள் எப்படி? Today rasipalan- 2022-01-11 செவ்வாய் கிழமை

இன்றைய  பஞ்சாங்கம்

11-01-2022, மார்கழி 27, செவ்வாய்க்கிழமை, நவமிதிதி பகல் 02.22 வரை பின்பு வளர்பிறை தசமி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்புபரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. கூடாரைவல்லி. புதிய முயற்சிகளையும்பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் -  11.01.2022

மேஷம்

இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம்அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன்இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடுவந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர்பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம்உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகைசெலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்துஉதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்லமுன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதியவாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைதீரும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன்செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்தஉதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாகஇருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலைசீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாகஇருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள்உண்டாகும். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின்ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்குலாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.

கன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள்ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் மன அமைதி குறையும். அறிமுகம்இல்லாதவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேசவேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன்கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

இன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார்உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள்நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள்இணைவார்கள். நவீனகரமான பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும்வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்தபோட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.

தனுசு

இன்று நீங்கள் மன உறுதியோடு செயல்பட்டால்மட்டுமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். பெற்றோர்களால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தெய்வவழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண முயற்சிகளில் சற்று தாமதம் உண்டாகும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாகசெயல்படுவார்கள்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாகஇருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். தொழில் ரீதியாகபெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள்ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்றபிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில்வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பதுநல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள்சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை குறையும்.